For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிப்பிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்ய சில அட்டகாசமான வழிகள்!!!

By Maha
|

எவ்வளவு தான் சமைக்கும் போது கவனமாக இருந்தாலும், பாத்திரத்தில் அடிப்பிடிப்பது என்பது சாதாரணம் தான். அதற்கு முக்கிய காரணம் தற்போது பெண்கள் சீரியலை அதிகமாக பார்ப்பது என்று சொல்லலாம். சரி, அப்படி பாத்திரத்தில் அடிப்பிடித்துவிட்டால் என்ன செய்வீர்கள்?

சிலர் பாத்திரத்தில் அடிப்பிடித்துவிட்டால் கத்தி கொண்டு சுரண்டுவார்கள். மேலும் சிலர் இரும்பு கம்பி கொண்டு தேய்ப்பார்கள். இருப்பினும் பாத்திரத்தில் உள்ள கறையானது போகாமல் அப்படியே இருக்கும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை அடிப்பிடித்த பார்த்திரத்தில் உள்ள கறையைப் போக்க ஒருசில வழிகளைக் கொடுத்துள்ளது.

பேக்கிங் சோடா

1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து, அத்துடன் 2 கப் சுடுநீர் ஊற்றி, அதனை அடிப்பிடித்த பாத்திரத்தில் ஊற்றி சிறிது நேரம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவினால், எளிதில் பளிச்சென்று மின்னச் செய்யலாம்.

எலுமிச்சை

எலுமிச்சையை எடுத்து, அதனை அடிப்பிடித்த பாத்திரத்தில் நன்கு தேய்த்து, பின் அதில் சுடுநீரை நிரப்பி சிறிது நேரம் ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு தேய்த்தால், பாத்திரத்தில் உள்ள கறைகள் எளிதில் நீங்கிவிடும்.

உப்பு

அடிப்பிடித்த பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து இறக்கி, பின் அதில் உப்பு சேர்த்து, உப்பானது கரைந்ததும், அதனை மீண்டும் அடுப்பில் வைத்து 3-4 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, பின பிரஷ் கொண்டு தேய்த்தால், கறைகள் விரைவில் அகலும்.

தக்காளி ஜூஸ்

தக்காளியில் நிறைந்துள்ள அசிடிக் தன்மையினால், அவற்றைக் கொண்டு அடிப்பிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்தால் விரைவில் சுத்தம் செய்துவிடலாம். அதற்கு அடிப்பிடித்த பாத்திரத்தில் தக்காளி சாற்றினை ஊற்றி சூடேற்றி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும்.

புளிச்சாறு

தக்காளி சாற்றினைப் போன்றே புளிச்சாறும் அடிப்பிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்ய பெரிதும் உதவியாக இருக்கும்.

வெங்காயம்

வெங்காயத்தை அடிப்பிடித்த பாத்திரத்தில் தேய்த்து, பின் அதில் சிறிது எண்ணெய் தடவி சூடேற்றி, பின் பிரஷ் கொண்டு தேய்த்தால், பாத்திரம் விரைவில் சுத்தமாகிவிடும்.

English summary

Superb Tips To Remove Burnt Leftovers From Utensils

Natural ways that are potent in removing stains or burn marks from vessels. Let us go ahead and look at these superb ways to remove stains from vessels. Here are 7 ways to remove stains from utensils. Read on...
Story first published: Thursday, October 30, 2014, 17:40 [IST]
Desktop Bottom Promotion