Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
உணவிற்கு சுவையைத் தரும் பட்டையின் பல்வேறு பயன்பாடுகள்...!
சமையலறையில் சாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வரும் பட்டையை மௌத் வாஷாகவும், பூச்சிகளை கட்டுப்படுத்தவும் கூட பயன்படுத்தலாம் என்பதை ஆடம் தன்னுடைய வலைத்தளத்தில் (Adam's Blog) குறிப்பிட்டுள்ளார்.
இது அடுமனைகளிலும் மற்றும் சாக்லெட் செய்யவும் உதவும் ஒரு ஹால்மார்க் வாசனைப் பொருளாக இருந்தாலும், இது சுவையை சற்றே தூக்கலாக ஏற்றி காட்ட உதவும் பொருளாக மட்டுமே கருதத் தேவையில்லை. இந்த அற்புதமான சமையலறை பொருளுக்கு பிற பொருட்களை சுத்தம் செய்ய உதவுதல் முதல் கொசுக்களை கட்டுப்படுத்துதல் என பல்வேறு வகையான பயன்பாடுகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?
இதுப்போன்று வேறு: சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் இலவங்கப்பட்டை

டிஞ்சர்
ஒரு வோட்காவுடன் சிறிதளவு பட்டையை கலந்து சாப்பிட்டால் சுவைமிக்க மற்றும் ஆரோக்கியமான கஷாயம் தயார். காக்டெய்ல் சாப்பிடும் போது, அதில் சிறிதளவு பட்டையை சேர்த்துக் கொள்வதால் பார்ட்டியின் சுவை சற்றே அதிகரிக்கும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், மதியம் சாப்பிடும் டீ-யிலும் இதை கலந்து நிறத்தைக் கூட்ட முடியும் என்பதையும் மறுக்க முடிவதில்லை. ஆண்களை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, ஆஃப்டர் ஷேவிங்கிற்குப் பிறகு வோட்காவுடன் சேர்த்து தடவினால், அது அற்புதமான வாசனையைத் தரும் டிஞ்சராகவும் பயன்படுத்தலாம்.

ஏர்-ப்ரெஷ்னர்
தண்ணீருடன், சிறிதளவு பட்டை எண்ணெயை கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றுங்கள். உங்கள் கையில் இப்பொழுது குறைந்த செலவில் உருவான இயற்கையான ஏர்-ப்ரெஷ்னர் இருக்கும்.

விட்டில் பூச்சிகளை விரட்டலாம்
மோசமாக நாற்றமடிக்கும் விட்டில் பூச்சிகளை கொல்லும் உருண்டைகளுக்கு பதிலாக பட்டையை பயன்படுத்துங்கள். கிராம்பு, பிரியாணி இலைகள் (Bay Leaves) போன்ற வேறு சில வாசனை பொருட்களுடன் பட்டையை சேர்த்து ஒரு கலவையை உருவாக்கினால், மனதை மயக்கும் வாசத்துடன் கூடிய விட்டில் பூச்சி விரட்டி தயார்.

பூக்கள் மற்றும் நறுமணப் பொருள்களால் உருவான செண்ட்
ஒரு பட்டையையோ அல்லது சிறிதளவு பட்டை தூளையோ பயன்படுத்தி பாட்போர்ரி செண்டை மேம்படுத்த முடியும். உங்கள் வீட்டு சமையலறை அடுப்பின் மேலே கொதிக்கும் குழம்பில் பட்டையை போட்டால் அதன் மணம் வீடு முழுவதும் நிரம்பி இருக்கும்.

காதலர் தின பரிசு
கிராமப்புறங்களில் பட்டை-குச்சி மெழுகுகள் விற்பதை பார்த்ததும் ஒரு சிறந்த யோசனை தோன்றுகிறது. ஒரு பட்டை குச்சியை சூடாக்கி விட்டு, மெழுகுவர்த்தியுடன் இயற்கையான ரிப்பன் போன்று சுற்றி விடுங்கள். இது காதலர் தினத்திற்கு கொடுக்க மிகவும் ஏற்ற அற்புதமான பரிசாக இருக்கும்.

மௌத் வாஷ்
நாம் எப்பொழுதும் வாங்க நினைக்கும் அவசிய பொருட்களில் ஒன்றாக மௌத் வாஷ் உள்ளது. ஒரு கப் வோட்காவுடன் 9 தேக்கரண்டிகள் பட்டையை சேர்த்து திறன் மிக்க, மணமான மௌத் வாஷ் தயார் செய்யுங்கள். இந்த கலவையை இரண்டு வாரங்கள் வரை வைத்திருந்த பின், நன்றாக வடிகட்டி வையுங்கள்.

எறும்பு கொல்லி
உங்கள் வீட்டிற்கு எறும்புகள் படையெடுத்து வந்துள்ளனவா? இந்த சிறு உயிரினத்தை, பட்டையை கொண்டு விரட்டியடிக்க முடியும். எறும்புகள் இருக்கும் துளைகள் மற்றும் அது சென்று வரும் வழிகளில் பட்டையை தூளாக்கி போடுங்கள். இதை செய்வதன் மூலம், அந்த எறும்புகள் உங்கள் வீட்டை விட்டு ஒரே ஓட்டமாக பக்கத்து வீட்டை நோக்கி சென்று விடும்.

கொசு முட்டை ஒழிப்பு
2004-ம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு ஆய்வில், பட்டை எண்ணெய்க்கு கொசு முட்டையை ஒழித்து, பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பூச்சிக் கொல்லியை உருவாக்கும் குணம் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. எனினும், இந்த யோசனை சற்றே சந்தேகத்திற்கிடமானதாக இருப்பதால், முழுமையாக அங்கீகரிக்கப்படவில்லை. எனினும், இதில் கொசுமுட்டை வளர்வதற்கு எதிரான குணம் உள்ளதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. ஒரு மிகச்சிறப்பான, எளிமையான கொசுவை ஒழிக்கும் பொருளாக பட்டை உள்ளதை பால்டிமோர் உள்ளூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை, தனது பால்டிமோர் லேண்ட்ஸ்கேப்பிங் இதழில் குறிப்பிட்டுள்ளது.



Click it and Unblock the Notifications