Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
வெள்ளை நிறத் துணிகளில் படிந்த குழம்பு கறையைப் போக்க சில எளிய வழிகள்!!!
துணிகளில் படியும் கறைகளிலேயே மிகவும் மோசமான கறை தான் மஞ்சள் நிற குழம்புக் கறை. பொதுவாக இந்தியாவின் பெரும்பாலான வீடுகளில், சமைக்கும் போது மஞ்சள் தூள் அதிகம் சேர்க்கப்படும். அப்படி சேர்க்கப்படும் மஞ்சளின் கறையானது துணிகளில் படிந்தால், அவை அவ்வளவு எளிதில் போகாமல், அப்படியே இருந்து துணியை பாழ்படுத்தும்.
அதிலும் வெள்ளை நிற உடையில் குழம்புக் கறை படிந்தால், மீண்டும் அந்த உடையை அணியவே முடியாமல் போய்விடும். ஆனால் அப்படி துணிகளில் படியும் மஞ்சள் நிற குழம்புக் கறையை ஒருசில எளிய பொருட்களைக் கொண்டு ஈஸியாக நீக்கலாம். இங்கு அந்த பொருட்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து முயற்சித்துப் பாருங்கள்.
குறிப்பு: துணிகளில் மஞ்சள் நிற குழம்புக் கறை படிந்தால், அப்போது உடனே ஓடும் நீரில் அலச வேண்டும். இல்லாவிட்டால், வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை முயற்சியுங்கள்.

கிளிசரின்
கறை படிந்த துணியை துவைக்கும் முன், கிளிசரினை கறை படிந்த இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து, சோப்பு நீரில் ஊற வைத்து அலசினால், கறைகளானது சீக்கிரம் போய்விடும்.

வினிகர்
வெள்ளை வினிகரைப் பயன்படுத்தி கூட மஞ்சள் நிற குழம்பு கறையை போக்கலாம். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் வெள்ளை வினிகரை, 1 டேபிள் ஸ்பூன் டிஷ் வாஷ் நீர்மம் மற்றம் 2 கப் குளிர்ந்த நீரில் கலந்து, கறை படிந்த துணியை அதில் ஊற வைத்து துவைக்க வேண்டும்.

ஆல்கஹால்
வெள்ளை துணியில் குழம்புக் கறை படிந்தால், ஆல்கஹாலில் கறை படிந்த துணியை ஊற வைத்து, பின் தேய்த்து துவைக்க வேண்டும்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு
ஹைட்ரஜன் பெராக்ஸைடை நீரில் கலந்து, அந்நீரில் கறைப் படிந்த வெள்ளை நிற துணியை போட்டு 30 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து அலசினால், கறை மாயமாய் மறைந்துவிடும்.

சுடுநீர் அல்லது குளிர்ந்த நீர்
காட்டன் துணியில் படிந்த மஞ்சள் நிற கறையை போக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அதிலும் கறையானது நன்கு காய்ந்துவிட்டால், அதனை போக்குவது கடினம். எனவே கறை படிந்த இடத்தில் சுடுநீரிலோ அல்லது குளிர்ந்த நீரிலோ சிறிது நேரம் ஊற வைத்து, பின் சோப்பு பயன்படுத்தி தேய்த்தால், கறைகள் விரைவில் நீங்கிவிடும்.

எலுமிச்சை
எலுமிச்சை சாற்றில் சிறிது வினிகரை ஊற்றி கலந்து, அந்த கலவையைக் கொண்டு துணியில் உள்ள கறை படிந்த இடத்தை தேய்த்து, பின் சோப்பு நீரில் ஊற வைத்து துவைத்தால், கறைகள் போய்விடும்.



Click it and Unblock the Notifications