For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் 'ஈ' தொல்லை தாங்கலையா? அதை விரட்ட இதோ சில டிப்ஸ்...

By Boopathi Lakshmanan
|

இரண்டு இறக்கைகளை விரித்துக் கொண்டு, ரீங்காரத்துடன் பறந்து வந்து தொந்தரவு தரும் பூச்சியினத்தில் ஒன்று தான் ஈ. உலகளவில் 1.20 மில்லியன் ஈக்கள் உள்ளன. அவை முழுமையாக வளரும் வரையில் உருவத்தின் அளவில் மாற்றமடைந்து கொண்டே இருக்கின்றன. வீடுகளில் காணப்படும் ஈக்கள் 'மஸ்கா டொமஸ்டிகா' என்று அறிவியல் ரீதியாக அழைக்கப்படுகின்றன. மனிதனைக் கடிக்காமல், காலரா, வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற வியாதிகளைப் பரப்புபவையாக வீட்டு ஈக்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல், கடுமையான கண் தொற்று நோய்களை ஏற்படுத்துகின்றன.

வீட்டில் எறும்பு தொல்லை தாங்கலையா? இத ட்ரை பண்ணுங்க...

பொதுவாக சுத்தமாக இல்லாத இடங்களில் ஈக்கள் காணப்படுகின்றன. அதாவது திறந்து வைக்கப்பட்டிருக்கும் குப்பைகள் அல்லது கழிவுகளில் தான் ஈக்கள் அதிகமாக வாழ்கின்றன. நிறைய தாவரங்கள் மற்றும் நெருக்கமான புதர்கள் உள்ள இடங்கள் ஈக்கள் உயிர் பெற்று, பல்கிப் பெருக ஏதுவாக இருக்கும் இடங்களாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கற்பூரம்

கற்பூரம்

ஈக்களை விரட்டியடிக்கக் கூடிய மிகச்சிறந்த பொருளாக கற்பூரம் உள்ளது. கற்பூரத்தை ஏற்றி விட்டு, தங்கியிருக்கும் இடம் முழுவதும் அதன் நறுமணத்தைக் காட்டினால், ஈக்கள் உடனடியாக இடத்தை காலி செய்து ஓடி விடும்.

துளசி

துளசி

மருத்துவ குணமிக்க துளசிக்கு, ஈக்களை உறுதியாக விரட்டியடிக்கும் திறனும் உள்ளது என்பது தெரியுமா? எனவே, உங்களுடைய தோட்டத்தில் ஓமத்தை வளர்த்து ஈக்களை விரட்டியடியுங்கள். ஓமம் மட்டுமல்லாமல், புதினா, லாவெண்டர் அல்லது சாமந்தி ஆகியவைகளும் ஈக்களை வெளியே தள்ளக் கூடிய திறன் கொண்டவையாகும்.

ஃப்ளை ஸ்வாட் (Fly Swat)

ஃப்ளை ஸ்வாட் (Fly Swat)

உங்களுடைய வீட்டின் ஈக்களை கட்டுப்படுத்த உதவும் திறன் மிக்க, குறைந்த செலவுடைய வழிமுறையாக ஃப்ளை ஸ்வாட் உள்ளது. எலக்ட்ரானிக் மெசின்களுடன் வரும் ஃப்ளை ஸ்வாட்கள் ஈக்களை பிடித்து, அவற்றை தானாகவே கொன்று விடுகின்றன. ஈக்களை கொல்லுவதற்கான தொந்தரவில்லாத வழிமுறையாக இது உள்ளது.

எண்ணைய்கள்

எண்ணைய்கள்

லாவெண்டர், யூகலிப்டஸ், பெப்பர்மின்ட் மற்றும் லெமன் கிராஸ் ஆகியவற்றில் மென்மையான நறுமணம் மட்டுமல்லாமல், ஈக்களை விரட்டியடிக்கும் குணமும் உள்ளன. உங்கள் வீட்டின் ஹால், பெட்ரூம் மற்றும் சமையலறை ஆகிய இடங்கள் என அனைத்து இடங்களிலும் இந்த எண்ணெய்களை தெளித்து வைத்தால் ஈக்களை விரட்ட முடியும்.

ஸ்கிரீனிங்

ஸ்கிரீனிங்

திரைகளை தொங்க விடுவதன் மூலம் வீட்டுக்குள் ஈக்கள் நுழைவதை தவிர்க்க முடியும். ஸ்கிரீனிங் செய்வதன் மூலம் வீட்டுக்கு போதுமான அளவு வெளிச்சம் கிடைப்பதுடன், ஈக்கள் உள்ளே வருவதற்கான வழிகளும் அடைக்கப்பட்டு விடுகின்றன.

கிரீன் ஆப்பிள் சோப்

கிரீன் ஆப்பிள் சோப்

கிரீன் ஆப்பிள் லிக்விட் சோப்புகள் ஈக்களை கவர்ந்திழுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, ஒரு ஜாடி தண்ணீரில் 2 தேக்கரண்டிகள் கிரீன் ஆப்பிள் லிக்விட் சோப்பை கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பழத்தின் நறுமணத்தைக் கண்டு கவர்ந்திழுக்கப்படும் ஈக்கள் ஜாடியிலுள்ள நீரில் அமிழ்ந்து இறந்துவிடும். இந்த வகையில் வீடுகளில் உள்ள ஈக்களை உங்களால் பிடிக்க முடியும்.

மின்விசிறியை போடுங்கள்

மின்விசிறியை போடுங்கள்

ஈக்களை தொந்தரவில்லாத முறையில் வீட்டிலிருந்து விரட்டுவதற்கான நம்பகமான வழிமுறையாக இது உள்ளது. உங்கள் வீட்டிலுள்ள சீலிங் பேன் அல்லது டேபிள் பேனை 'ஆன்' செய்து வைத்திருந்தால் போதும், ஈக்கள் தானாக ஓடி விடும்.

ஆப்பிள் மற்றும் கிராம்பு

ஆப்பிள் மற்றும் கிராம்பு

ஒரு ஆப்பிளில் சில கிராம்புகளை செருகி விட்டு, உங்கள் வீட்டு சமையலறையிலோ அல்லது ஈக்கள் அதிகமாக இருக்கும் இடங்களிலோ வைத்திருந்தால் ஈக்களை விரட்டி விட முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வீட்டை சுத்தம் செய்வதற்கும் கூட கிராம்பு எண்ணெயை பயன்படுத்தலாம். கிராம்பின் வாசனையை பொறுக்காத ஈக்கள், அடுத்த நொடியே வீட்டை விட்டு ஓடிவிடும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

வினிகரை வைத்து ஈக்களை விரட்டுவது மிகவும் திறமையான வழிமுறைகளில் ஒன்றாகும். ஒரு கிண்ணத்தில் சிறிதளவு ஆப்பிள் சீடர் வினிகரை வைக்கவும். ஈர்ப்பு விசையை உருவாக்கவும், ஈக்கள் வெளியேறி ஓடுவதை தவிர்க்கவும் இந்த கலவையுடன் லிக்விட் டிடர்ஜென்ட்டை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கலவையின் நறுமணம் ஈக்களை கவர்ந்திழுத்து கொன்று விடும். ஒருமுறை இந்த கலவையால் ஈர்க்கப்பட்டு வரும் ஈக்கள், முழுமையாக மூழ்கும் வரை வெளியேற முடிவதில்லை.

வெள்ளரிக்காய்கள்

வெள்ளரிக்காய்கள்

குப்பைகளின் மேலாக வெள்ளரிக்காயை கீற்றாக அறுத்து வைப்பதன் மூலம் ஈக்கள் முட்டையிடுவதை தவிர்க்க முடியும். ஏனெனில் வெள்ளரிக்காய் வாசனையில் ஈக்கள் வசிப்பதில்லை. மேலும், சில வெள்ளரிக்காய் துண்டுகளை உங்கள் வீட்டை சுற்றிலும் வைத்திருப்பதன் மூலம், ஈக்கள் வீட்டுக்குள் வருவதை தவிர்க்கவும் மற்றும் தொலைவில் வைத்திருக்கவும் முடியும்.

ஈ பேப்பர்

ஈ பேப்பர்

ஈக்களை விரட்டக் கூடிய ஈ பேப்பர்களை உங்கள் வீட்டிலேயே தயாரிக்க முடியும். சர்க்கரை மற்றும் சோள மாவு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, ஒரு மொத்தமான பிரௌன் பேப்பரில் தடவுங்கள். அந்த பேப்பரின் ஒரு மூலையில் துளையிட்டு, வீடு அல்லது அறைக்கு வெளியே தொங்க விடுங்கள். இதன் மூலம் ஈக்கள் வீட்டுக்குள் அல்லது அறைக்குள் நுழைவதை தவிர்க்க முடியும்.

சிவப்பு மிளகாய்

சிவப்பு மிளகாய்

சிறிதளவு சிவப்பு மிளகாயை எடுத்துக் கொண்டு, அவற்றை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் போடுங்கள். இதனுடன் சிறிதளவு தண்ணீரை விட்டு, நன்றாக கலக்குங்கள். இப்பொழுது, இந்த கலவையை வீடு முழுவதும் தெளியுங்கள். ஈக்கள் கொல்லப்படும்.

வெள்ளை ஒயின்

வெள்ளை ஒயின்

ஒயிட் ஒயினை, பாத்திரத்தை கழுவும் திரவத்துடன் கலந்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும். இந்த கலவையால் ஈர்க்கப்பட்டு வரும் ஈக்கள், விஷத்தால் தாக்கப்பட்டு இறந்து விடுகின்றன.

இலவங்கப் பட்டை

இலவங்கப் பட்டை

இலவங்கப் பட்டையை ஏர் ஃப்ரெஷ்னராக பயன்படுத்தினால், அதன் நறுமணம் பொறுக்காமல் ஈக்கள் ஓடி விடும்.

பிளாஸ்டிக் தண்ணீர் பைகள்

பிளாஸ்டிக் தண்ணீர் பைகள்

காலியான பிளாஸ்டிக் தண்ணீர் பைகளை வீட்டுக்குள் நுழையும் இடங்களில் வைத்திருந்தால், ஈக்கள் நுழைவதை தடை செய்ய முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

15 Home Remedies to Get Rid of Flies

House flies get accumulated in areas where there is no cleanliness or hygiene, like exposed garbage or fecal matter. Left out uncovered food also attracts flies. Areas with a lot of vegetation and thick shrubbery are ideal for the growth of flies. Here are some of the home remedies to get rid of flies.
Desktop Bottom Promotion