For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாதுகாப்பான படிகட்டுகள் அமைக்க சில டிப்ஸ்!!!

By Maha
|

Stairs Safe
அனைவருக்கும் அழகான பெரிய மாடி வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை மனதில் இருக்கும். அப்படி அவர்கள் ஆசை நிறைவேறும் நாள் வந்தால், வீட்டில் மாடிக்கு படிகட்டுகள் அமைக்கும் போது கவனமாக அமைக்க வேண்டும். ஏனெனில் வீட்டில் இருக்கும் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடியாடி விளையாடுவார்கள், அப்போது எந்தவித விபத்தும் ஏற்படாமல் இருக்கவும், மேலும் வீட்டில் முதியோர்கள் ஏறி இறங்கவும் வசதியாகவும் அமைக்க வேண்டும். விபத்தானது எந்நேரத்திலும் ஏற்படலாம், ஆகவே 'வருமுன் காப்பதே நல்லது' என்பதைப் போல் நாம் உஷாராக இருக்க வேண்டும். அப்படி பாதுகாப்பான படிக்கட்டுக்கள் அமைக்க சில டிப்ஸ்களை வீட்டு உள் அலங்கார நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

படிக்கட்டுக்கள் அமைக்க சில டிப்ஸ்...

1. வீட்டில் படிக்கட்டுக்கள் அமைக்கும் போது நீளம் சற்று குறைவாக வைக்கவும். இதனால் குழந்தைகள், முதியோர்கள் எளிதாக ஏறி இறங்க வசதியாக இருக்கும். சில சமயம் விழும் நிலை வந்தாலும், உயிர் போகும் அளவு எந்த பிரச்சனையும் வராது. நம்மால் நன்றாக அடுத்த படியில் கைப்பிடியை பிடித்துக் கொண்டு பேலன்ஸ் செய்ய முடியும்.

2. படிக்கட்டுக்கள் அமைக்கும் போது ஒவ்வொரு படிக்கும் இடையில் சமமான அளவு இடைவெளி விட்டு கட்டவும். அப்படி கட்டாமல் படிக்கட்டுக்களை சிறிது பெரிதுமாக வைத்துக் கட்டினால், அடிக்கடி விழும் நிலை தான் ஏற்படும்.

3. மாடி ஏறும் படிக்கட்டில் கார்பெட்டை போட நினைத்தால், படிக்கட்டுகளை சரியாக அளந்து பின் வாங்க வேண்டும். அப்படி வாங்கும் கார்பெட்டின் முனைகள் கூர்மையாக இருக்காதவாறு வாங்கலாம். மேலும் கார்பெட்டை பொறுத்தும் போது கார்பெட்டானது தரையோடு நன்கு பதியுமாறு பொறுத்த வேண்டும். அப்படி பொறுத்தாவிட்டால் விபத்து கண்டிப்பாக ஏற்படும். மேலும் கார்பெட் வாங்கும் போது வழுக்காத அளவு இருக்குமாறு வாங்கி பொறுத்த வேண்டும்.

4. படிக்கட்டுக்களை மார்பிளில் அமைக்கும் போது நிறைய பிரச்சனை வரும். வீட்டில் உள்ள தரையை மார்பிளில் அமைத்தாலே பிரச்சனைகள் அதிகமாக வரும், அதிலும் படிக்கட்டுகளில் வைத்தால் சொல்லவே வேண்டாம். வேண்டுமென்றால் படிகளை மரத்தில் அமைக்கலாம். இது நடக்க ஒரு நல்ல கிரிப்பைத் தரும். மேலும் இது வீட்டிற்கு ஒரு நல்ல அழகையும் தரும்.

5. படிக்கட்டுகள் அமைக்கும் போது அதற்கு பக்கவாட்டில் வைக்கும் கைபிடியானது பிடிப்பதற்கு வசதியாக இருக்குமாறு அமைக்க வேண்டும். அதுவும் மரத்தினால் ஆனது என்றால் மிகவும் நல்லது.

மேற்கூரிய இவற்றையெல்லாம் நினைவில் வைத்து உங்கள் வீட்டு மாடிப்படியை அமையுங்கள், வீடு அழகாக இருப்பதோடு, பாதுகாப்பாகவும் இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

English summary

ways to make your stairs safe | பாதுகாப்பான படிகட்டுகள் அமைக்க சில டிப்ஸ்!!!

Does your dream home include a stretch of lovely spiral staircase? Most families are skeptical about living in duplexes or row houses because they do not want to live in a home with stairs. Although staircases look good, they are some inherent safety problems with them. If you have hyperactive kids or old people at home, then stairs become a home safety issue. Tragic accidents through stairs are not unheard of. To ensure the safety of stairs in your house, you can try these tricks.
Story first published: Friday, June 15, 2012, 14:41 [IST]
Desktop Bottom Promotion