Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
தெர்மாஸ் ஃப்ளாஸ்க் சுத்தமா இருக்கணுமா? இதப்படிங்க!

பேக்கிங் சோடா
3 ஸ்பூன் பேக்கிங் சோடா போட்டு சிறிதளவு வெந்நீர் ஊற்றி ஊறவைக்கவும். பின்னர் ஃப்ளாஸ்க்கை நன்றாக குலுக்கி கழுவலாம். வெதுவெதுப்பான நீர் ஊற்றி கழுவ துர்நாற்றம் எதுவும் இருக்காது.
கறைகள் போக
ஃப்ளாஸ்கில் காபி, டீ கரைகள் இருந்தால் அவற்றை டிஷ்வாஸ் பவுடரில் ஊறவைக்கவும். பின்னர் நன்றாக பிரஸ் வைத்து தேய்த்து கழுவ ஃப்ளாஸ்க் கரை இன்றி பளிச் தோற்றம் தரும்.
முட்டை ஓடு
முட்டை ஓடு வீட்டில் இருந்தால் நன்றாக உலர்த்தி சேகரித்து வையுங்கள் இதனை பொடியாக்கி ஃப்ளாஸ்க் கழுவ உபயோகிக்கலாம். முட்டை ஓடுகளை நன்றாக ஃப்ளாஸ்கில் போட்டு ஊறவைத்து குலுக்கலாம். அழுக்குகள் இருந்தால் வெளியேறிவிடும். இதேபோல் சிறு மணல்துகளை பயன்படுத்தலாம். ஆனால் ஃப்ளாஸ்க் உடைந்து விடாமல் ஜாக்கிரதையாக பயன்படுத்தவேண்டும்.
வெந்நீர் ஊற்றுங்கள்
ஃப்ளாஸ்க்கைக் கழுவும்போது வெந்நீரைப் பயன்படுத்துங்கள். ஃப்ளாஸ்க்கைப் பயன்படுத்தாத பொழுது கப், மூடி ஆகியவற்றைத் திறந்து வையுங்கள். அப்பொழுதுதான் துர்நாற்றம் வீசுவது தவிர்க்கப்படும்.
கெட்டுப்போகாமல் இருக்க
ஃப்ளாஸ்கில் எதை ஊற்றினாலும் ஓர் அங்குலத்திற்குக் கீழ் நிற்கும் வரை ஊற்றினால்தான் நல்ல பாதுகாப்பு இருக்கும்.
பாலைப் பாதுகாப்பதற்கு, கொதிக்கும் நிலையிலோ அல்லது குளிர்ந்த நிலையிலோ ஊற்றி வையுங்கள். அப்போதுதான் அது கெட்டுப் போகாமல் இருக்கும். சூடான பானம் வைப்பதற்கு முன் ஃப்ளாஸ்கை வெந்நீரால் கழுவுங்கள். அவ்வாறே ஐஸ் வாட்டர் வைக்கும் பொழுது குளிர்ந்த நீரால் கழுவுங்கள். ஃப்ளாஸ்கை கையில் சற்று சாய்வாகப் பிடித்து கொண்டு சூடான திரவத்தை ஊற்றினால் ஃப்ளாஸ்க் உடையாது தவிர்க்கலாம்.
துர்நாற்றம் போக
உபயோகிக்காமல் இருக்கும் ஃப்ளாஸ்கில் சிறிது சர்க்கரையைப் போட்டு வைத்தால் துர்நாற்றம் அடிக்காது. காலியாக உள்ள ஃப்ளாஸ்கில் சிறிதளவு உப்பு போட்டு அதில் சில ஐஸ் துண்டுகளை போட்டு நன்றாக குலுக்கவும். ப்ளாஸ்க் பளிச் சுத்தமாகும். துர்நாற்றம் எதுவும் வீசாது.



Click it and Unblock the Notifications
