For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சேர்ந்து சாப்பிடுங்க ! 'கேஸ்' மிச்சமாகும் !

By Mayura Akilan
|

Tips to Save Gas While Cooking
தமிழ்நாட்டில் மின்சாரத்தட்டுப்பாடு போல எரிபொருள் தட்டுப்பாடும் நிலவுகிறது. அவ்வப்போது டேங்கர் லாரி ஸ்ட்ரைக் அடிப்பதால் நாற்பது நாளைக்கு ஒருமுறை சமையல் கேஸ் வருவது கூட சிரமம். எனவே குடும்பத்தலைவிகள் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் சிரமப்படத் தேவையில்லை. எரிபொருளை சிக்கனப்படுத்த இதோ டிப்ஸ்.

ரெடியாக வைக்கவும்

ஸ்டவ்வை பற்ற வைத்துவிட்டு ப்ரிட்ஜை திறக்கவேண்டாம். சமைக்க போகும் போது தேவையான சமையல் பொருட்களை எல்லாம் எடுத்து பக்கத்தில் வைத்துக் கொண்டு சமையலில் ஈடுபடுங்கள். இல்லாவிட்டால் கேஸ் செலவு அதிகமாகிவிடும். முடிந்த வரை சின்ன பர்னரை பயன்படுத்தவும். பர்ணர்களின் அடைப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும

அரிசியை ஊறவையுங்கள்

சமைப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக அரிசி மற்றும் நவதானிய பருப்பு பொருட்களை தண்ணீரில் ஊறவைத்துவிட்டு வேகவைத்தால் சீக்கிரமே வெந்துவிடும். இதனால் எரிவாயு செலவு மிச்சம் ஆகும். அரிசியையோ பருப்பு, கறி வகைகள் வேக விடும்போது தேவைக்கு தக்கபடி மட்டும் தண்ணீர் ஊற்றுங்கள். கூடுதல் தண்ணீர் ஊற்றினால் எரிபொருள் அதிகம் செலவாகும். ப்ரிட்ஜிலிருந்து எடுத்த பொருட்களை உடனே சமைத்தால் கேஸ் செலவு அதிகமாக்கும், குளிர் போன பிறகு சமைக்கவும்

உணவுகள் சமைக்கும் பொழுது வெளி காற்று அடுப்பை அனைக்காமல் பார்த்துக்கொள்ளவும். நாம் வேறு வேலையாக இருப்போம். அடுப்பு அணைந்து விடுவது தெரியாது. அதால் கேஸ் வீணகிவிடும். பாத்திரத்துக்கு மேல் தீ வராமல் குறைந்த தணலில் அடுப்பை எரியவிடவும்

குக்கர் சமையல்

பிரஷர் குக்கரில் சமையுங்கள். இதனால் எரிபொருள் செலவு கம்மியாகும் நேரமும் மிச்சமாகும். ஒருவேளை பாத்திரத்தில் சமைக்க நேர்ந்தால் பாத்திரத்தை மூடிவைத்து சமையல் செய்தால் வேலை சீக்கிரம் முடிவதோடு, கேஸ் செலவும் குறையும்.

முக்கியமாக அடுப்பில் உணவினை வைத்துவீட்டு தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்கவும். ஏனெனில் அடுப்பில் வைத்தது மறந்துவிடும். இதனால் உணவும், எரிபொருளும் வீணாகிவிடும்.

ஒரே நேரத்தில் சாப்பிடுங்கள்

சமைத்த உணவுகளை ஹாட்பாக்ஸில்போட்டு வைக்கவும். எப்பொழுதுமே வீட்டில் அனைவரும் ஒரே நேரத்தில் ஒன்றாக சாப்பிடுவது நல்லது. இதனால், அடிக்கடி சூடு செய்து சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்படாது.

சமைத்து முடித்தவுடன் தீயை அணைக்கவும். அதோடு சிலிண்டரையும் ஆப் செய்ய மறந்து விடாதீர்கள். இதேல்லாம் செய்தால் நிச்சயம் கேஸ் மிச்சமாகும். எரிபொருள் சிக்கனம் வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் நல்லதுதான்.

English summary

Tips to save gas while cooking | சேர்ந்து சாப்பிடுங்க ! 'கேஸ்' மிச்சமாகும் !

Some Tips on conservation of fuel. Organise your cooking. Keep all ingredients ready for cooking. This will help you cook rapidly and thus save gas. If you have to stop cooking for a short while, shut off the gas. After all, it's cheaper to light another match.
Story first published: Thursday, March 15, 2012, 8:36 [IST]
Desktop Bottom Promotion