For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எதையும் வேஸ்ட் பண்ணாதீங்க!!!

By Maha
|

how to use waste things to make a useful material
வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வேஸ்ட் பண்ணாமல் அதை வேறு விதமாக செய்து பயன்படுத்துவது என்பது ஒரு சிறந்த கலை. அதுவும் நாம் அன்றாடம் பயன்படுத்தும், நமக்கு மிகவும் பிடித்த பொருளை, நன்றாக இருக்கிறது என்று நினைக்கும் பொருளை வேஸ்ட் பண்ணாமல், வேறு விதமாக பயன்படுத்தினால், அந்த பொருளை தூக்கி போடுகிறோமே என்ற ஆதங்கம் மனதில் இருக்காது. அப்படி பயன்படுத்தும் பொருள்களில் ஒரு சில பொருட்களை வைத்து என்ன செய்யலாம், எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா!!!

1. தினமும் அணியும் ரப்பர் செருப்பு பிய்ந்துவிட்டால், அதை தூக்கிப் போடாமல், அதை இரண்டாக வெட்டி கிரைண்டரின் நான்கு பக்கத்திற்கு அடியிலும் வைத்து விட்டால், மாவு அரைக்கும் போது கிரைண்டரானது நகராமல் இருக்கும்.

2. வீட்டில் பழைய சாக்ஸ்கள் (socks) இருந்தால், அதை தூக்கிப் போட வேண்டாம். ஏனெனில் வீட்டில் இருக்கும் சோபா, மேஜை போன்றவற்றை இடம் மாற்றி வைக்கும் முன் அவற்றின் கால்களில் இந்த சாக்ஸை நுழைத்து விட்டு இழுத்தால், தரையில் கீறல் விழாமல் இருக்கும்.

3. டேட் எக்ஸ்பயரி ஆன மாத்திரைகள் வீட்டில் இருந்தால் அதை தூக்கிப் போடாமல், அதனை பொடி செய்து தண்ணீரில் கலந்து செடிகளுக்கு தெளிக்கலாம். இதனால் செடிகளில் பூச்சி வராமல் இருக்கும்.

4. குளிக்கும் போது, துணி துவைக்கும் போது பயன்படுத்தும் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால், அதை தூக்கி எறிய வேண்டாம். அப்போது வீட்டில் இருக்கும் பழைய டூத் பிரஸை எரித்து, அதில் வரும் திரவத்தை ஊட்டையான இடத்தில் ஊற்றினால் ஓட்டை அடைபட்டுவிடும்.

5. சமைக்கும் போது வாசத்திற்காக வாங்கும் பெருங்காயப் பவுடர் வரும் டப்பாக்கள் காலியானதும் தூக்கிப் போடாமல், அதில் சோப்பு பவுடரைப் போட்டு, சாப்பிட்டத் தட்டுகளை அவசரத்திற்கு தேய்க்க சுலபமாக இருக்கும். இதனால் சோப்பும் வீணாகாது.

6. வீடு கட்டும் போது தரையில் வைக்க வாங்கும் டைல்ஸ்களை தூக்கிப் போடாமல், அதை சமயலறையில் எண்ணெய், நெய், ஊறுகாய் ஜாடிகளுக்கு அடியில் வைக்கப் பயன்படுத்தலாம்.

7. வீட்டில் பழைய டைரிகள் இருந்தால், அதன் அட்டையை வட்டமாக கத்தரித்து, அந்த அட்டையை சூடான பாத்திரங்களை வைக்கப் பயன்படும் டேபிள் மேட் ஆகப் பயன்படுத்தலாம்.

இவ்வாறெல்லாம் செய்தால் எந்த பொருளும் வீணாகாமல், நீண்ட நாட்கள் பயனுள்ளப் பொருளாகவே இருக்கும்.

English summary

how to use waste things to make a useful material | எதையும் வேஸ்ட் பண்ணாதீங்க!!!

Reusing waste materials is a fantastic way to cut down on your art and craft supply budget. It's also a way to save the environment by reusing items that may otherwise end up in a landfill. With a little bit of creativity and the ability to see objects not as they are but what they could be, crafting with recycled materials can be a cost-effective, rewarding experience that has the potential to yield unexpected results.
Desktop Bottom Promotion