Latest Updates
-
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க...
உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க!

எவ்வளவு கூடுதல் கான்பிகேரேஷனில் கம்ப்யூட்டர் வங்கினாலும், அதை சரியாக பராமரிக்காவிட்டால், அதன் செயல்பாடு குறைந்துவிடும்.
எனவே ஒரு கணினியை சிறப்பான முறையில் பராமரிப்பது எவ்வாறு ஆலோசனை கூறியுள்ளனர் அந்த துறை வல்லுநர்கள். படித்துப் பாருங்களேன்.
உங்கள் வீட்டு கணினியை எப்போதும் இயங்கிக் கொண்டிருக்க விடாமல், சில நேரங்களிலாவது ஆப் செய்து கணினிக்கு ஓய்வு கொடுங்கள். தினமும் ரிசைக்கிள் பின்னை காலி செய்ய வேண்டும்.
கம்ப்யூட்டரில் உள்ள, நீண்ட காலம் நாம் பயன்படுத்தாத புரோக்கிராம் மற்றும் சாப்ட்வேர்களை நீக்கிவிடவேண்டும். தேவையற்ற, பயன்பாட்டில் இல்லாத பைல்களையும் நீக்கிவிடுங்கள். அதனை ரீ சைக்கிள் பின்னில் இருந்தும் நீக்குங்கள். டெம்பரவரி இண்டர்நெட் பைல்களை அழித்து விடுங்கள். அவ்வப்போது டிஸ்க் கிளீன் அப் செய்யுங்கள்.
குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏரர் செக்கிங் யுடிலிட்டி மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை ஹார்டு டிஸ்கை கம்ப்யூட்டர் பயன்படுத்தும்போதும், சில வேண்டாத செக்டார்கள் உருவாகும். அவற்றை நீக்க, கம்ப்யூட்டரில் உள்ள எரர் செக்கிங் யுடிலிட்டி ஸ்கேனை பயன்படுத்த வேண்டும். குறைந்த பட்சம் மாதம் ஒரு முறையாவது டிஸ்க் டிபிராக்மெண்டேஷன் செய்யுங்கள். அல்லது எப்போதெல்லாம் அதிக வேலை கொடுக்கிறீர்களோ, அதற்கு பிறகு டிஸ்க் டிபிராக்மெண்ட் செய்வது நல்லது.
தேவையில்லாத சாப்ட்வேர் தொகுப்புக்கள், மொழித்தொகுப்புக்கள் போன்றவற்றை நீக்கிவிடலாம். தேவைப்படும் நேரத்தில் அவற்றை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஸ்பைவேர் எனப்படும் ரகசியங்களை திருடும் சாப்ட்வேர்களில் இருந்து கம்ப்யூட்டரை பாதுகாத்து கொள்ளவேண்டும். இதற்கான சாப்ட்வேர் தொகுப்புக்கள், விண்டோஸ் உடன் கிடைக்கின்றன.
தினமும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆண்ட்டி வைரஸ் ஸ்கேனை இயக்கி, கம்ப்யூட்டர் போல்டர்கள், டிரைவ்களில் உள்ள வைரஸ்களை நீக்க வேண்டும். ஒவ்வொரு முறை டவுன்லோடு செய்யும்போதும், வைரஸ் ஸ்கேன் செய்ய வேண்டும்.
யு.பி.எஸ். மூலமே கம்ப்யூட்டரை இயக்குங்கள். இதனால் மின் தடை ஏற்படும்போது, கம்ப்யூட்டர் திடீரென க்ராஷ் ஆவதில் இருந்து தப்பிக்கும். யு.பி.எஸ், ஸ்பீக்கர் போன்றவற்றை கம்ப்யூட்டருடன் இணைக்கும் போர்டுகளை கவனமாக சொருக வேண்டும். போர்டு உடைந்துவிட்டால், சரி செய்ய செலவு அதிகம் பிடிக்கும். ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ சி.பி.யு மற்றும் மானிட்டரை திறந்து அதில் சேர்ந்திருக்கும் மெல்லிய தூசுக்களை அப்புறப்படுத்துங்கள்.
எப்போதும் குளிர்ந்த அறையில் கணினி இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அல்லது குறைந்தபட்சம் நல்ல காற்றோட்டமான இடத்திலாவது இருக்க வேண்டும். முறைப்படியே, கம்ப்யூட்டரை ஷட்- டவுன் செய்ய வேண்டும். ஆன்/ஆப் சுவிட்சை பயன்படுத்தவேண்டாம். கம்ப்யூட்டர் அதிக சூடு ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது நீங்களும் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்; கம்ப்யூட்டருக்கு, ஓய்வு கொடுங்கள்.



Click it and Unblock the Notifications