For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாம்புகளைக் கொல்லாமல் உங்கள் வீடுகளிலிருந்து எளிமையாக அப்புறப்படுத்தும் வழிகள்

|

பாம்பைக் கண்டு நடுங்காதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு பாம்பின் மீதான நடுக்கம் எல்லோருக்கும் இருக்கும். வீட்டின் முன் அழகாக இருப்பதாக புற்களை வளர்போம். அல்லது பூச்செடிகளை வளர்ப்போம். அந்த மாதிரியான சூழலில் பாம்புகள் செடிகளுக்கு மத்தியில் தஞ்சம் அடைகின்றன. செடிகளில் ஈரப்பதம் இல்லாத சமயங்களில் ஈரப்பதத்தை நோக்கி பயணிக்கும் போது மனிதர்களிடம் சிக்கிக் கொள்கிறது. அல்லது மனிதர்களை தீண்டி விடுகிறது.

Snakes

பாம்புகள் பொதுவாக பிரச்சினைகளை ஒரு போதும் ஏற்படுத்தாது. பொதுவாக பாம்புகள் பேயைப் போல ஒளிந்து கொள்கின்றன. பாம்புகளுக்கு பொதுவாக அதிர்வுகளை உணரும் திறன் இருப்பதால் ஓடி ஒளிந்துக் கொள்கின்றன. ஒரு வேளை மறைந்துக் கொள்வதற்கு இடமில்லாத போது அல்லது பாம்புகளை மனிதர்கள் தாக்க வருவதைப் போல் அது உணர்ந்தால் தனது பாதுகாப்புக் கருதி தான் பாம்புகள் தீண்டுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கட்டு விரியன் பாம்புகளை வெளியேற்ற உதவும் 7 வழிகள்:

கட்டு விரியன் பாம்புகளை வெளியேற்ற உதவும் 7 வழிகள்:

1. புதர்களையும், புல்வெளிகளையும் ஒழுங்கமைக்கவும்.

2. உங்கள் புல் தரையிலிருந்து குப்பைகளையும், தேவையற்ற பொருள்களையும் நீக்கவும்,

3. பாம்புகளுக்கான உணவுகளை தரைகளில் தவிருங்கள்

4. கோழியை வளருங்கள்

5. பாம்பு விரட்டும் சாதனத்தை பயன்படுத்துதல்

6. பாம்புகளை பிடித்து காட்டிற்குள் விடுதல்

7.பாம்பு வேலிகளை அமைத்தல்

Most Read: தானியங்கி / கேரேஜ் கதவுகள் அடிக்கடி பழுதாகிறதா? இது தான் காரணம்

புதர்களையும், புல்வெளிகளையும் ஒழுங்கமைக்கவும்

புதர்களையும், புல்வெளிகளையும் ஒழுங்கமைக்கவும்

பாம்புகள் பொதுவாக உயர்ந்து வளர்ந்த புல்வெளிகளுக்குள் தங்களை மறைத்துக் கொள்ளும் அதே போல் காட்டு விரியன் பாம்பும் தன்னை நீண்ட புல் புதருக்குள் தன்னை மறைத்துக் கொள்ளும். அதே மாதிரி சீரற்று வளரும் தாவரங்களை பாம்புகள் பெரும்பாலும் தவிர்த்து விடும்.

எனவே சீராக வளர்ந்திருக்கக்கூடிய பகுதிகளை அவ்வப்போது ஒழுங்கமைக்கும் போது பாம்புகள் மறைவதற்கான வாய்ப்பு நிச்சயம் இருக்காது. ஒருவேளை அந்த வழியாக பாம்பு செல்லுமே ஒழிய உங்கள் வீட்டின் சுற்றுப்புறத்தில் ஒரு போதும் தங்காது.

வெளிப்புறத்தில் இருக்கும் குப்பைகளை அகற்றுக:

வெளிப்புறத்தில் இருக்கும் குப்பைகளை அகற்றுக:

புல்வெளிகள் மட்டுமல்ல குப்பைகளும் கட்டுவிரியன் பாம்புகள் தங்குவதற்கான பிரத்யேகமான பகுதியாகும். இருண்டிருக்கும் பகுதி பாம்புகளுக்கு மிகவும் வசதியான பகுதியாகும். மரங்களிலிருந்து கொட்டப்படும் இலைகள் தொடர்ச்சியாக சுத்தம் செய்யாமல் இருக்கும் போது பாம்புகள் புகுவதற்கான இடமாக அது மாறிப் போய் விடுகிறது. அவையாவையும் உங்கள் வீட்டின் பகுதிகளில் இருந்து வெளியேற்றுங்கள்.

பாம்புக்கு பிடித்த உணவை வீட்டின் சுற்றத்தில் வீசாதீர்கள்:

பாம்புக்கு பிடித்த உணவை வீட்டின் சுற்றத்தில் வீசாதீர்கள்:

பாம்புகளின் இனச்சேர்க்கை காலத்தில் பாம்புகள் இரைத் தேடி வீடுகளை நோக்கி அலையும். பின்வரும் படிநிலைகளைப் பிந்தொடர்ந்தால் உங்கள் வீடுகளை நோக்கி கட்டுவிரியான் பாம்புகள் வராமல் தடுக்கலாம். கட்டுவிரியான் பாம்புகள் எல்லாவகையான விலங்குகளையும் உணவாக உண்ணும். பல்லிகள், தவளை, பூச்சிகள், நத்தைகள், மற்றும் சிறிய பாலூட்டிகள் என அனைத்தையும் உணவாகக் உண்ணும். இந்த விலங்குகள் உங்களது புல் தரைப் பகுதியில் இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள்.

ஒருவேளை இந்த விலங்குகள் இருந்தால் பாம்புகள் உங்கள் நிலத்தை நோக்கி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. எனவே பூச்சிக் கொல்லி மருந்துகள் போன்றவற்றை உங்கள் காலி நிலத்தில் தெளிப்பதன் மூலம் பாம்புகளுக்கான உணவை உங்கள் வீட்டுப் பகுதியிலிருந்து காலி செய்யலாம். பூச்சிகள் இல்லாத போது தவளைக்கோ , பல்லிக்கோ உங்களது நிலத்தில் வேளை இருக்காது. இவையாவும் இல்லையெனில் பாம்புக்கும் உங்கள் பகுதியில் நிச்சயம் வேலை இருக்காது.

உங்கள் கொல்லைப் புறத்தில் கோழியை வளருங்கள்:

உங்கள் கொல்லைப் புறத்தில் கோழியை வளருங்கள்:

கட்டுவிரியன் பாம்புகள் எப்போதாவது தான் கோழிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறது. ஆனால் கோழி முட்டைகள் பாம்புகளை கவரும் என்றாலும் கோழிகள் தற்காப்பு அரணாக விளங்கி பாம்புகளை உள்ளே நுழைய விடாமல் தடுக்கிறது. குறிப்பாக சில சமயங்களில் பாம்புகள் கோழிகளைக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது.

இயற்கையான பாம்பு விரட்டிகள்

இயற்கையான பாம்பு விரட்டிகள்

சந்தையில் எண்ணற்ற பாம்பு விரட்டிகள் கிடைக்கின்றன. அதோடு சேர்த்து மற்ற விலங்குகளையும் அது அளிக்கிறது. பெரும்பாலான நேரங்களில் நமக்கு பெரிதும் உதவினாலும் நிறைய பின்விளைவுகளையும், ஏன் சில நேரங்களில் மனிதர்களுக்கே பாதிப்பாகவும் அமைந்து விடுகிறது.

எனவே வீட்டிலேயே செய்யக்கூடிய பாம்பு விரட்டிகளை பயன்படுத்தி பாம்புகளை விரட்டியடிக்கலாம். சிறிது ஆலிவ் எண்ணெயுடன் 5 -6 துளிகள் தண்ணீரை விட வேண்டும். அந்தக் கலவையை பாம்புகள் இருக்கும் இடங்களில் தெளிக்கவும். ஆலிவ் ஆயில் சில வகையான பாம்புகளை விரட்டும் என ஆய்வுகளில் நிரூபிக்கப்படுள்ளன.

பாம்பு பிடிப்பவர்களை அணுகவும்:

பாம்பு பிடிப்பவர்களை அணுகவும்:

பாம்புகளை கொல்லாமல் உங்கள் வீட்டுப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனில் மேற்கண்ட வழிமுறைகளைப் பயன்படுத்துங்கள். ஒரு வேளை பயனளிக்கவில்லையென்றால் பாம்பு பிடிப்பவர்களை அழைத்து வந்து பாம்பை பிடித்து காட்டிற்குள்ளோ அல்லது வனத்துறை. அல்லது பாம்பு பிடிக்கும் வலைகளை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ள முடியும். அதை உருவாக்கி வைத்து எலியைப் பிடிக்கும் அதே முறைதான் முட்டையையோ, பல்லியையோ வைத்து பிடிக்க வேண்டும். வனத்துறைக்கு தகவல் கொடுத்து அதனை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டால் அவர்கள் எங்கு அதைச் சேர்கக் வேண்டுமோ அங்கு அதைச் சேர்த்துவிடுவார்கள்.

Most Read: இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா? நீங்களும் முயற்சி செய்யுங்கள்

பாம்பு வேலிகள் அமைத்தல்

பாம்பு வேலிகள் அமைத்தல்

பாம்பு வேலிகள் ஒரு சில அடிகள் அல்லது இன்ச்கள் தான் இருக்கும். பாம்பு வேலிகள் பல்வேறு கொள்கைகளின் அடிப்படியாக இயங்கக்கூடியது. சில சமயங்களில் பாம்பு வேலிகள் அமைந்திருக்கும் அமைப்புகள் பாம்புகள் அதன்மீது வலம் வரச் செய்யும். பாம்புகள் அதன் மீது வலம்வந்தால் அது ஒரு கண்ணி போல செயல்பட்டு பாம்பை பிடித்துச் செல்லும். இது விலையுயர்ந்ததாக இருந்தாலும் உங்கள் வீட்டையும் தோட்டத்தையும் நிச்சயம் இது பாம்புகளிடம் இருந்து பாதுகாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Get Rid of Garter Snakes Without Killing Them

We discuss about how to get rid of garter snakes without killing them. there are 7 advisable ways to get rid of garter snakes, which was trim your bushes, get chickens, use snake repellent, trap and relocate the snakes.
Desktop Bottom Promotion