For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா பரவும் காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை இப்படி சுத்தம் செய்ய மறக்காதீங்க...

என்ன தான் கொரோனா வைரஸ் உணவுகளின் மூலம் பரவாது என்று கூறப்பட்டாலும், கடைகளில் இருந்து வாங்கி வரும் மளிகை பொருட்களில் இருந்து, காய்கறிகள், பழங்கள் என்று அனைத்தையும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

|

பேரழிவை நிகழ்த்திக் கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸை அழிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறோம். நாளுக்கு நாள் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கொரோனா வைரஸ் மேற்பரப்புக்களில் பல மணிநேரம் உயிர் வாழக்கூடியவை என்று தெரிந்த பின்னர், நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களையும் கவனமாக கையாள வேண்டியுள்ளது.

Food Safety During Coronavirus: How to Clean Fruits and Vegetables at Home

குறிப்பாக இன்று எதிலும் சுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதில் கடைகளில் இருந்து வாங்கி வரும் மளிகை பொருட்களில் இருந்து, காய்கறிகள், பழங்கள் என்று எதை வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தாலும், அதை பயன்படுத்துவதற்கு முன் சுத்தம் செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது.

MOST READ: மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் புபோனிக் பிளேக் - இது 50 மில்லியன் மக்களை கொன்றது என்பது தெரியுமா?

என்ன தான் கொரோனா வைரஸ் உணவுகளின் மூலம் பரவாது என்று கூறப்பட்டாலும், நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது முக்கியம் தானே. எனவே தமிழ் போல்ட் ஸ்கை, கொரோனா பரவும் காலத்தில் கடைகளில் வாங்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை எப்படி சுத்தம் செய்வது என்று சில வழிகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி, உங்கள் குடும்பத்தை கொரோனாவின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

MOST READ: நிமோனியாவால் கஷ்டப்படுறீங்களா? சீக்கிரம் குணமாக இந்த உணவுகளை சாப்பிடுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டிடர்ஜெண்ட்/சோப்புகள் ஆபத்தானவை

டிடர்ஜெண்ட்/சோப்புகள் ஆபத்தானவை

சுத்தம் அவசியமானது தான். கிருமிகளை அழிப்பதில் டிடர்ஜெண்ட்டுகள்/சோப்புக்களை விட சிறந்த பொருட்கள் வேறு எதுவும் இருக்க முடியாது. இருப்பினும், உணவுப் பொருட்களை சுத்தம் செய்வது என்று வரும் போது, இந்த மாதிரியான பொருட்களைப் பயன்படுத்துவது என்பது ஆபத்தானது. எனவே எக்காரணம் கொண்டும் பழங்கள் மற்றும் காய்கறிகளை டிடர்ஜெண்ட்டுகள் பயன்படுத்தி சுத்தப்படுத்தாதீர்கள்.

சுடுநீர்

சுடுநீர்

காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கி வந்ததும், முதலில் ஓடும் நீரில் 3-5 நிமிடம் கழுவ வேண்டும். பின் அதை ஒரு அகலமான பெரிய பாத்திரத்தில் போட்டு, அதில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் அவற்றை எடுத்து பயன்படுத்துங்கள் அல்லது ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள்.

பேக்கிங் பவுடர், வினிகர் கலவை

பேக்கிங் பவுடர், வினிகர் கலவை

ஒரு அகலமான பாத்திரத்தில் பேக்கிங் பவுடர் மற்றும் வினிகரை சரிசம அளவில் எடுத்து, அத்துடன் சுடுநீரை ஊற்றி நன்கு கலந்து, பின் அதில் காய்கறிகள் மற்றும் பழங்களை 20 நிமிடம் ஊற வையுங்கள். இதனால் அதில் உள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்துவிடும். அதன் பின் அந்த காய்கறிகள் மற்றும் பழங்களை நன்கு உலர வைத்து, ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள்.

உப்பு, மஞ்சள், வினிகர் கலவை

உப்பு, மஞ்சள், வினிகர் கலவை

உப்பு, மஞ்சள் மற்றும் வினிகரை ஒரு அகலமான பெரிய பாத்திரத்தில் சரிசம அளவில் எடுத்துக் கொண்டு, அதில் சுடுநீரை ஊற்றி, வாங்கி வந்த காய்கறிகள் மற்றும் பழங்களை 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால், இந்த கலவையில் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்துக் கொள்ளலாம். அதன் பின் அந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாதாரண நீரில் நன்கு கழுவி, உலர வைத்து, பின் ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்கரப்

ஸ்கரப்

காய்கறிகளான கேரட், உருளைக்கிழங்கு போன்றவற்றை ஏதேனும் ஸ்கரப்பர் பயன்படுத்தி தேய்த்து, பின் மிகவும் குளிர்ச்சியான நீரில் 1-2 நிமிடம் கழுவுங்கள். அதன் பின் நன்கு உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இலைக் காய்கறிகளை சுத்தப்படுத்துதல்

இலைக் காய்கறிகளை சுத்தப்படுத்துதல்

இலைக் காய்கறிகளைச் சுத்தப்படுத்தும் சிறந்த வழி என்றால், அது ஓடும் நீரில் கழுவுவது தான். அதன் பின் ஒரு அகலமான பெரிய பாத்திரத்தில் மிகவும் குளிர்ச்சியான நீரை நிரப்பி, அதில் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு அந்நீரில் இலைக் காய்கறிகளைக் கழுவி வைக்க வேண்டும். இதனால் நீண்ட நாட்கள் இலைக் காய்கறிகளானது ஃபிரஷ்ஷாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Food Safety During Coronavirus: How to Clean Fruits and Vegetables at Home

Here are some tips to clean fruits and vegetables properly before consumption during coronavirus pandemic. Read on...
Desktop Bottom Promotion