For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்ல தக்காளி இல்லயா? கவலப்படாதீங்க... அதுக்கு பதிலா இந்த 7 பொருள பயன்படுத்தலாம்...

வீட்டில் தக்காளி இல்லையென்றால் அதற்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய ஏழு பொருள்களைப் பற்றித் தான் உங்களுககு இந்த கட்டுரையில் விளக்கியுள்ளோம். அதைப் படித்துத் தெரிந்து கொண்டு உங்களுடைய சமையலில் அசத்துங்கள்.

|

தக்காளி பழத்தை பயன்படுத்தி ஏராளமான உணவுகளை சமைக்கலாம். பெரும்பாலும் எல்லா வகை சமையலிலும் தக்காளி இடம்பெற்றிருக்கும். உணவுக்கு சுவையூட்டுவதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது.

Tomato Substitutes

தக்காளி இல்லாமல் ஒரு சமையலை பெரும்பாலும் நம்மால் கற்பனையே செய்து பார்க்க இயலாது. ஆனால், தக்காளி சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். வீட்டில் ஒருவருக்கு 'தக்காளி அலர்ஜி' இருந்தால், அவருக்காக சமைப்பது சிறிது சிரமமான விஷயம் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தக்காளி இல்லையா?

தக்காளி இல்லையா?

சாம்பார், ரசம், சட்னி, காரக்குழம்பு, பொரியல், கூட்டு, அவியல் இப்படி என்ன சமைக்க வேண்டுமென்றாலும் தக்காளி இல்லாமல் சமைக்க முடியுமா? திடீரென வீட்டில் தக்காளி தீர்ந்து போவதும் விலை அதிகமாக இருக்கிற சமயங்களில் வாங்க யோசிப்பதும் வழக்கம் தானே. ஆனால் அதைவிட்டால் வேறு என்ன வழி இருக்கிறது? என்று யோசிப்பவர்களுக்கு தான் இந்த புதிய டெக்னிக்.

தக்காளி இல்லாமல் தான் சமைக்கவேண்டும் என்றால் எந்தப் பொருள்களை எல்லாம் பயன்படுத்த முடியும் என்று சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? ஓரளவுக்கு தக்காளியின் சுவை மற்றும் மணத்தை ஈடுகட்டக்கூடியவற்றை பார்க்கலாம்.

MOST READ: இது நெஜமாவே பேயாம்... அந்த கண்ணாடியில இருக்கற திகில் உருவத்த நல்லா பாருங்க...

சிவப்பு குடைமிளகாய்

சிவப்பு குடைமிளகாய்

தக்காளிக்கு முதன்மையான மாற்று சிவப்பு குடை மிளகாய்' ஆகும். சாலட் மற்றும் சாண்ட்விச்களில் சிவப்பு மணி மிளகை பயன்படுத்தினால், தக்காளி பயன்படுத்தியதற்கு ஒப்பான நிறம் மற்றும் தோற்றத்தைப் பெற முடியும். சிவப்பு மணி மிளகு பேஸ்ட் பயன்படுத்தினால் இன்னும் மேம்பட்ட சுவை அனுபவத்தை பெற முடியும். வதக்கி அரைக்கப்பட்ட குடை மிளகாயுடன் சர்க்கரை, எலுமிச்சை மற்றும் உப்பு ஆகியவற்றை தேவையான அளவு நீங்களே கலந்து தக்காளி சாஸ் மற்றும் தக்காளி பேஸ்ட்டுக்கான மாற்று சுவையை உருவாக்கிக் கொள்ளலாம்.

புளி பேஸ்ட்

புளி பேஸ்ட்

இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது புளி. சாஸ், சூப் மற்றும் கறி வகைகளில் தக்காளிக்கு மாற்றாக புளியை பயன்படுத்தலாம். இந்திய, ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்க கடைகளில் புளி கிடைக்கும். விலை சற்று அதிகம் என்றாலும் நீண்ட நாள் பாதுகாத்து வைக்கக்கூடியது. பல்வேறு சமையல்களில் இதை பயன்படுத்தலாம்.

மாங்காய்

மாங்காய்

தங்காளிக்குப் பதிலாக மாங்காய் என்று யோசிப்பதே சற்று வித்தியாசமாக தெரியலாம். மாம்பழம் அல்ல, மாங்காய், தக்காளிக்கு ஏற்ற மாற்றாகும். இதன் புளிப்புச் சுவை தக்காளி கொடுக்கும் சுவையை சமையலுக்கு தரும். சாண்ட்விச்கள், சாலட்டுகளில் மாங்காயை பயன்படுத்தலாம்.

MOST READ: இந்த ஷூவோட கலர் என்னன்னு கரெக்டா கண்டுபிடிங்க பார்ப்போம்... உங்களால முடியுமா?

கெர்கின் (ஒருவகை வெள்ளரி)

கெர்கின் (ஒருவகை வெள்ளரி)

வெள்ளரிக்காய் வகையை சேர்ந்த கெர்கின், ஊறுகாய் போடுவதற்கு பயன்படுத்தப்படும். அதை தக்காளிக்குப் பதிலாக சாலட்டுகள் மற்றும் சாண்ட்விச்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

உமேபோஷி பேஸ்ட்

உமேபோஷி பேஸ்ட்

ஜப்பானிய உப்பு பிளம்ஸ் என்று அறியப்படும் உமே பழம் உலர வைக்கப்பட்டு உமேபோஷி என்று அழைக்கப்படுகிறது. சற்று உவர்ப்பான இது, புளிப்பு மற்றும் இனிப்பு சுவையில் தக்காளியை ஒத்திருக்கும். இதில் ஏற்கனவே உவர்ப்புத்தன்மை இருப்பதால், சமையலில் உப்பை சற்றுக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

கிரீன் பெஸ்டோ

கிரீன் பெஸ்டோ

தக்காளியை பயன்படுத்த முடியாத கட்டத்தில் அதற்கு ஈடாக கிரீன் பெஸ்டோவை உபயோகிக்கலாம். இது சற்று வித்தியாசமான முயற்சியாக இருந்தாலும் தக்காளியை பயன்படுத்தி சமைத்ததற்கு ஒத்த தோற்றம் மற்றும் ஆழ்ந்த சுவையை அளிக்கும்.

MOST READ: தெரியாம கீழே விழுந்த பையன் கண்ணுல பென்சில் குத்தி கண்பார்வையே போன பரிதாபத்த பாருங்க...

ஸ்டாக் மற்றும் வினிகர்

ஸ்டாக் மற்றும் வினிகர்

தக்காளிக்கு மாற்றாக சமையலில் பயன்படுத்த வேறு எதுவுமே கிடைக்கவில்லை என்றால் அவசரத்துக்கு ஸ்டாக் (stock) பயன்படுத்தலாம். அதனுடன் சற்று வினிகரையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். சூப் மற்றும் சாஸ் போன்றவற்றில் தக்காளிக்கு மாற்றாக ஸ்டாக் மற்றும் வினிகர் இணையை பயன்படுத்தி பயன்பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Best Tomato Substitutes

Many people don’t think about tomato substitutes since these fruits are such a common presence in the kitchen and in our recipes. The role they play in cooking is so seminal that it can leave a large gap if you’re trying to avoid tomatoes or cooking for someone with an allergy. Luckily, there are some great potential substitutes out there that can provide both the flavor and consistency of tomatoes, these include red bell pepper, tamarind paste, mango, gherkins, umeboshi paste, green pesto, and stock and vinegar among others.
Desktop Bottom Promotion