For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க பாத்ரூம்ல இந்த கறையெல்லாம் போகவே மாட்டேங்குதா?... இத ஒருமுறை ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க

By Suganthi Rajalingam
|

சுத்தம் சோறிடும், சுத்தம் சுகம் தரும் என்பார்கள். இது உடல் சுத்தத்தை மட்டும் சொல்லவில்லை. நம்மை சுற்றிருக்கும் இடத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது . குறிப்பாக பாத்ரூம் போன்றவற்றை சுத்தமாக வைத்திருப்பது நல்லது. ஏனெனில் கோடிக்கணக்காண கிருமிகள் இங்கு தான் வாழும்.

how to clean bathroom effectively

எனவே நீங்கள் பாத்ரூமை சரி வர சுத்தம் செய்யா விட்டால் அதனால் நோய்கள் பரவவும் வாய்ப்புள்ளது. நம் வீட்டில் பயன்படுத்தும் பாத்ரூம்களை நீங்கள் என்ன தான் தேய்த்து தேய்த்து சுத்தம் செய்தாலும் ஒரு ஸ்டார் ஹோட்டல் பாத்ரூம் பளபளப்பு கிடைப்பதில்லை. இந்த சுத்தப் பராமரிப்பு ரகசியத்தை பற்றி நமது எக்ஸ்பட்ஸ் என்ன என்ன டிப்ஸ்களை உங்களுக்கு கூறியுள்ளார் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாஷ் பேசன்ஸ்

வாஷ் பேசன்ஸ்

நீங்கள் பல் துலக்கும் பற்பசை அழுக்கு, தலை சீவும் போது உதிரும் தலை முடி மற்றும் உணவுத் துகள்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து உங்கள் வாஷ் பேசன் சத்தத்தையும் அழகையுமே கெடுத்து விடும். இதற்கு லிக்யூட் க்ளீன்சர் அல்லது பினால் கொஞ்சத்தை அதில் ஊற்றி சில நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பிறகு நன்றாக பிரஷ்யை கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். இதை திரும்ப திரும்ப செய்து வரும் போது உங்கள் வாஷ் பேசன் பளபளக்கும்.

எக்ஸ்பட் டிப்ஸ் :தேங்காய் நாரை கூட நீங்கள் இயற்கை ஸ்க்ரப் மாதிரி கொண்டு வாஷ் பேசனை கழுவலாம். இதைக் கொண்டு மூலை முடுக்குகளிலுள்ள அழுக்குகளை கூட எளிதாக நீக்கலாம்.

MOST READ: அடிக்கடி மார்புல குத்துற மாதிரி இருக்கா? உடனே என்ன செய்யணும்?

தரை மற்றும் சுவர் டைல்ஸ்

தரை மற்றும் சுவர் டைல்ஸ்

இதை சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினமான விஷயம். காரணம் எல்லா அழுக்குகளும் இங்கே தேங்கிப் போய் கிடக்கும். உங்கள் பாத்ரூம் டைல்ஸ்களை சுத்தம் செய்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது. படாதபாடு மட்டும் தேய்த்து தேய்த்து கை வலிக்க கழுவினால் கூட அழுக்கு என்னமோ போகாது. உடனே நீங்கள் என்ன செய்வீர்கள். அதிக கெமிக்கல் நிறைந்த ஒரு பொருளை பயன்படுத்த முற்படுவீர்கள். ஆனால் இந்த கஷ்டமே இனித் தேவையில்லை. நீங்கள் வீட்டிலேயே எளிதாக ஒரு க்ளீன்சர் தயாரிக்கலாம்.

தயாரிக்கும் முறை

தயாரிக்கும் முறை

கொஞ்சம் வினிகர் அதனுடன் பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை உங்கள் பாத்ரூம் டைல்ஸ்களில் தெளித்து சில நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு ஒரு துணியை கொண்டு துடைத்து எடுக்கவும். வினிகர் உங்களுக்கு அழுக்கை நீக்குவதோடு பேக்கிங் சோடா கெட்ட துர்நாற்றத்தை நீக்குகிறது. இதில் எந்த கெமிக்கல்களும் இல்லை. எனவே எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. ஆனால் பயன்படுத்துவதற்கு முன் கையுறை அணிந்து கொண்டு பயன்படுத்தவும்.

டிப்ஸ்

சுத்தம் செய்வதற்கு முன் சூடான நீரால் டைல்ஸ்களை கழுவிக் கொள்ளவும். இந்த சூட்டால் அழுக்குகள் இளகி எளிதாக சுத்தம் செய்து விடலாம். மேலும் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை பழைய டூத் ப்ரஷ் கொண்டு தேய்த்து சுத்தம் செய்யவும்.

டாய்லெட் பெளல்

டாய்லெட் பெளல்

நீங்கள் என்ன தான் தேய்த்து தேய்த்து கழுவினாலும் டாய்லெட் பெளலின் மஞ்சள் கறை போகவே போகாது. தண்ணீரின் கடினத் தன்மையால் இந்த கறை படிகிறது. இது பொதுவாக பீங்கானால் ஆக்கப்படுகிறது. எனவே இந்த கறைகளை போக்க ப்ளீச் முறையை பின்பற்றலாம்.

பயன்படுத்தும் முறை

1/2 கப் உலர்ந்த ப்ளீச் பவுடர் போட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்(அதுவரை டாய்லெட்டை பயன்படுத்த வேண்டாம்). கறைகள் மாயமாய் மறைந்த உடன் தண்ணீர் ஊற்றி கழுவி விடவும். உங்களுக்கு இயற்கை க்ளீனர் தேவைப்பட்டால் 3 கப் வினிகரை ஊற்றி டாய்லெட் ப்ரஷ் கொண்டு நன்றாக தேய்த்து கழுவவும்.

பாத்ரூம் கண்ணாடிகள்

பாத்ரூம் கண்ணாடிகள்

உங்கள் முகழகை காட்டும் கண்ணாடி தூசி படிந்து அழுக்காக இருந்தால் எப்படி இருக்கும். எனவே உங்கள் பாத்ரூம் கண்ணாடியையும் சுத்தமாக வைப்பது உங்கள் பாத்ரூம் அழகை அழகாக காட்டும். எனவே உடனடியாக கண்ணாடியை சுத்தம் செய்ய உங்கள் கையில் ஒரு துண்டு பேப்பர் இருந்தால் போதும்.

சுத்தம் செய்யும் முறை

1/3 கப் அம்மோனியாவை 1 கலன் வெதுவெதுப்பான நீரில் கலந்து கண்ணாடியில் தெளிக்க வேண்டும். பேப்பர் துண்டு அல்லது காட்டன் துணியை கொண்டு துடைக்க வேண்டும். அம்மோனியாவிற்கு பதிலாக நீங்கள் வினிகரை கூட பயன்படுத்தி கொள்ளலாம். வினிகரை நேரடியாக கண்ணாடியில் அப்ளே செய்து நியூஸ் பேப்பர் கொண்டு துடைக்கவும். பிறகு ஒரு சுத்தமான துணியை கொண்டு துடைத்தாலே போதும் உங்கள் கண்ணாடி பளபளக்கும்.

MOST READ: அந்தரங்கப் பகுதியில் அரிப்போ எரிச்சலோ ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? (ஆண் பெண் இருவருக்கும்)

துடைக்கும் விதம்

துடைக்கும் விதம்

கண்ணாடியின் இடது மூலையில் தொடங்கி அப்படியே வலது மூலை வரை ஷிக் ஷேக் பாதையில் துடைக்க வேண்டும். இது உங்களுக்கு திட்டு திட்டாக தெரியாமல் நல்ல லுக்கை கொடுக்கும்.

குறிப்பு: உங்கள் பாத்ரூமில் எங்கேயும் தண்ணீர் தேங்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுவும் கிருமிகளின் எண்ணிக்கையை பெருக்கும். எனவே தூய்மை செய்து உலர்வாக வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: cleaning சுத்தம்
English summary

Unbelievable But True! 4 Expert Tips That Make Bathroom Cleaning A Dream

Housekeeping personnel in the hotel or service industry usually have closely guarded cleaning secrets which help them clean a bathroom with minimal time and effort. We bring you four of these expert bathroom cleaning tips. Warm water clean, vinegar uses, bleaching tips and so on.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more