For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் பிள்ளைகளின் கான்சட்ரேட் திறனை அதிகரித்து, டாப்பர் ஆக்க உதவும் வாஸ்து குறிப்புகள்!

பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்ட வைக்க, அவர்களை படி படி என்று 24 மணி நேரமும் படிக்க வைத்து அவர்தம் உயிரை வாங்குவதோ, ட்யூசன் அனுப்புவதோ அல்லது டிவி போன்ற பிள்ளைகளின் பொழுதுபோக்குகளை தடை செய்வதோ இதற்கு

|

ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கும் மிகப்பெரிய கனவு, தன் பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்கி, பேரும் புகழும் பெற்று நீடுழி வாழ வேண்டும் என்பது தான். அந்த வகையில் பெற்றோரான உங்களின் கனவு நிறைவேற அடித்தளமாக இருப்பது படிப்பு. குழந்தைகளை நல்ல பள்ளியில் சேர்த்து, தேவையான அனைத்து புத்தகங்களையும், பொருட்களையும் வாங்கிக் கொடுத்தாலும் பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டினால் மட்டுமே பெற்றோரின் கனவு நிறைவேறும்.

பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்ட வைக்க, அவர்களை படி படி என்று 24 மணி நேரமும் படிக்க வைத்து அவர்தம் உயிரை வாங்குவதோ, ட்யூசன் அனுப்புவதோ அல்லது டிவி போன்ற பிள்ளைகளின் பொழுதுபோக்குகளை தடை செய்வதோ இதற்கு தீர்வை தராது. பிள்ளைகளை படிப்பில் ஆர்வம் காட்ட வைக்க நாங்கள் என்னதான் செய்வது என்று நீங்கள் கேட்பது புரிகிறது? இதற்கு ஒரு எளிமையான தீர்வு, பிள்ளைகளின் மனதை படிப்பை பற்றி சிந்திக்க வைப்பது தான்.

vastu tips for students

இதற்கு சில வாஸ்து குறிப்புகள் உதவுகின்றன. வஸ்துவால் பிள்ளையை எப்படி படிக்க வைக்க முடியும் என்ற கேள்வி மனதில் எழுகிறதா? ஆம் உண்மையில், சரியான வாஸ்து முறையை பின்பற்றி பிள்ளையின் அறையை, அவர்தம் பழக்கத்தை மாற்றினால் போதும். அது எப்படி என்று இந்த பதிப்பில் படித்து அறிந்து கொள்வோம் வாருங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
படிக்காமல் போவதற்கான காரணங்கள்

படிக்காமல் போவதற்கான காரணங்கள்

பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்தாது, அதாவது படிக்கும் போது ஒருமுகத்தன்மை காட்டாமல் இருப்பது குழந்தையின் படிப்பில் தடையாக உள்ளது. மற்றொரு முக்கிய காரணம் படித்ததை குழந்தைகள் சீக்கிரம் மறந்துவிடுவது; அதிலும் முக்கியமாக பரீட்சை அறையில் சுத்தமாக மறந்து போய் அமர்ந்திருத்தல். குழந்தையின் இந்த குறைபாடுகளை போக்க, வாஸ்து குறிப்புகள் மற்றும் சாஸ்திரங்கள் மிக எளிய தீர்வுகளை அளிக்கின்றன. அவை என்ன என்று இப்பொழுது படித்தறியலாம்.

அதிக மதிப்பெண் பெறுவதற்கான குறிப்புகள்

அதிக மதிப்பெண் பெறுவதற்கான குறிப்புகள்

பிள்ளைகள் அதிக மதிப்பெண்கள் பெற, கீழ்கண்ட வாஸ்து குறிப்புகளை பின்பற்றுதல் அவசியம். அவையாவன:

1. படிக்கும் அறை வடக்கு அல்லது மேற்கு பக்கம் நோக்கியதாக அமைதல் அவசியம்.

2. படிக்கும் பொது கிழக்கு அல்லது வடக்கு புறம் பார்த்து அமர்ந்து படித்தல் அவசியம்.

3. பிள்ளைகளின் கான்சன்ட்ரேசன் அதிகமாக நீலம் அல்லது பச்சை நிறங்களை படிக்கும் மேஜையின் நிறத்தை பச்சையாக மற்றும் சுவர் நீலமாக அல்லது ரிவர்ஸாக பயன்படுத்துதல் வேண்டும்.

4. குழந்தையின் ஸ்டடி ரூமின் கதவு வட கிழக்கு திசையை நோக்கியதாக இருத்தல் வேண்டும்.

5. குழந்தை பீம் போன்ற மேற்கூரையின் கீழாக அமர்ந்து படித்தல் கூடாது; எனவே, பால்ஸ் சீலிங்காக மேற்கூரையை அமைப்பது அவசியம்.

6. பிள்ளையின் அறையிலுள்ள கண்ணாடிகள் இரவில் மறைக்கப்படுதல் அவசியம்.

படிக்கும் அறையின் அமைப்பு

படிக்கும் அறையின் அமைப்பு

பிள்ளைகள் படிக்கும் அறையின் அமைப்பை கீழ்கண்டவாறு அமைக்க வேண்டும்.

1. படிக்கும் மேஜை சுவரை ஒட்டி இருக்க கூடாது; மேஜையை திறந்த வெளியாக இருக்குமாறு அமைத்து அதன் முன்னதாக குழந்தைக்கு பிடித்தமான விஷயங்களை, ஆர்வமூட்டக்கூடிய பொருள்களை வைக்க வேண்டும். பிள்ளை அமர்ந்து படிக்கும் இடத்திற்கு உடனடி பின்னணியில் கதவு இருத்தல் கூடாது.

2. தன்னம்பிக்கை அளித்து, ஆர்வத்தை தூண்டக்கூடிய படங்களை, அவ்வாக்கியம் கொண்ட போஸ்டர்களை ஒரு போர்டில் வைத்து, குழந்தையின் அறையில் வைப்பது சிறந்தது.

3. மேஜை சுத்தமானதாக இருக்க வேண்டும்; புத்தகங்கள் குவித்து வைத்ததாக இருத்தல் கூடாது.

4. கண்ணை உறுத்தாத வெளிச்சம் தரும் விளக்குகளை குழந்தையின் அறையில் அமைக்க வேண்டும்.

கான்சன்ட்ரேஷனை அதிகரிக்கும் வாஸ்து!

கான்சன்ட்ரேஷனை அதிகரிக்கும் வாஸ்து!

கான்சன்ட்ரேஷனை அதிகரிக்க வாஸ்து எப்படி உதவுகிறது என்று இங்கு பார்க்கலாம்.

1. அதிக அடர்ந்த அல்லது போரடிக்கும் வண்ணங்கள் குழந்தையின் அறையில் இருத்தல் கூடாது; நல்ல மனதிற்கு சுகந்தம் தரும் நிறங்களை பயன்படுத்த வேண்டும்.

2. பிள்ளைகள் மர நாற்காலியில் அமர்ந்து படிப்பது நல்லது; மேலும் படிக்கும் மேஜைக்கு முன்னதாகவோ, கிழக்குப்புற சுவரிலோ புத்தக அலமாரியை அமைத்தல் கூடாது.

3. குழந்தைகள் கிழக்கு அல்லது தெற்கு புறமாக தலை சாய்த்து உறங்குதல் வேண்டும்.

4. மணி பிளாண்ட்டை மேஜையின் பக்கமாக மற்றும் கடல்வாழ் உயிர் இருக்கும் தொட்டியை வாடா கிழக்கு மூலையில் வைப்பது நல்லது.

5. ஒரு சிறிய பதிகத்தை மேஜையில் வைத்தல் நல்லது.

பெற்றோருக்கான குறிப்புகள்!

பெற்றோருக்கான குறிப்புகள்!

பிள்ளைகளின் எந்தவொரு பொருளையும் அவர்கள் அனுமதி இல்லாமல் தொட வேண்டாம்;அவர்களின் புத்தகங்களை அடுக்குவது போன்ற விஷயங்களையும் கூட பிள்ளைகளின் அனுமதி பெற்ற பின் செய்வது சிறந்தது. குழந்தைகளின் படிக்கும் அறையை கிழக்கு, வடகிழக்கு, மேற்கு திசையில் அமைத்தல் வேண்டும்; குழந்தை கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி அமர்ந்து படிக்கும் படி அமைக்க வேண்டும். புத்தக அலமாரியை தென்மேற்கு அல்லது மேற்கு திசையில் அமைத்துக் கொடுங்கள். மேலும் படிப்பை விருத்தியடைய செய்யும் மந்திரங்களை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.

வீட்டில் ஐ.ஏ.எஸ் மற்றும் எம்.பி.ஏ படிக்கும் பிள்ளைகள் இருந்தால், வடக்கு பக்கம் பார்த்து படிப்பது சிறந்தது. மேலும் கழுகின் சிலையை தென்மேற்கு திசையில், உங்களது வீட்டில் வைப்பது குழந்தைகளின் வளர்ச்சிக்கும், கான்சன்ட்ரேஷனை அதிகரிக்கவும் உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The best vastu tips to improve student’s concentration in tamil.

The best vastu tips to improve student’s concentration in tamil.
Story first published: Monday, July 23, 2018, 11:04 [IST]
Desktop Bottom Promotion