Just In
- 18 min ago
இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி?
- 3 hrs ago
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
- 3 hrs ago
மிஸ் யுனிவர்ஸ் 2019 பட்டம் பெற்ற தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..
- 5 hrs ago
திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் - எந்த ராசிக்காரர்கள் எந்த லிங்கத்தை கும்பிடணும் தெரியுமா?
Don't Miss
- Sports
நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்!
- Movies
சன்னி லியோனை பின்னுக்குத் தள்ளிய சோனாக்ஷி.. இந்த ஆண்டு ட்விட்டரை கலக்கிய டாப் 10 பெண்கள் இவங்கதான்!
- Automobiles
போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகிய அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!
- News
தாய்ப்பால் ஊட்டும் வாலிபால் வீராங்கணை.. வைரலாகும் போட்டோ.. சல்யூட் அடித்த அமைச்சர்
- Finance
பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளரா நீங்க.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..!
- Education
பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம்! தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்!
- Technology
அட்டகாசமான ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எவ்வளவு சுத்தமா வெச்சிருந்தாலும் உங்க வீட்டு மெத்தை நாற்றம் அடிக்குதா? இத ட்ரை பண்ணுங்க
உங்கள் படுக்கை துர்நாற்றம் வீசுகிறதா? நீங்கள் எப்போதாவது உங்கள் மெத்தையின் கிருமிகளை அழித்திருக்கிறீர்களா? அப்பொழுது நீங்கள் மோசமான வாசனைகளைக் கவனித்திருந்தால், உங்கள் மெத்தையை புதியதாக வாசனை வீசச்செய்ய இந்தத் தந்திரங்களைப் பயன்படுத்தவும்.
எல்லாவற்றிற்கும் மேலாக இவை உங்கள் மெத்தையை புதிதாக்குகிறது மற்றும் மெத்தைக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய இரசாயனங்கள் இவற்றில் இல்லை.

கட்டில் மெத்தை
உங்கள் மெத்தையிலிருந்து கெட்ட வாசனைகளை நீக்க, நீங்கள் வாசனை திரவியங்கள் அல்லது விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை. சந்தையில் இதற்கான சில தீர்வுகள் இருப்பினும், இயற்கைப் பொருள்களின் மூலமாக வீட்டை சுத்தம் செய்யும் தந்திரங்களைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.
இந்த இயற்கை முறை மாற்றுக்கள் மலிவானவை மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்காது. மேலும், அவை கிருமிகள், பூஞ்சை மற்றும் பிற நுண்ணுயிரிகளை அகற்ற உதவுகிறது.
அவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதால் உங்கள் மெத்தையின் மேற்பரப்பு குறைபாடு மற்றும் ஒவ்வாமைப் பிரச்சனைகள் சரி செய்யப்படுகிறது. கண்ணுக்குத் தெரியாத வியர்வை மற்றும் இறந்த செல்கள் மூலமாக உருவாகும் கறைகளை அகற்றவும் உதவுகிறது. இன்றைக்கே இதை உங்கள் வீட்டு மெத்தையில் முயற்சி செய்து பாருங்கள்.
MOST READ: தலைக்கு எண்ணெய்க்கு பதிலா ஹேர் ஜெல் யூஸ் பண்றீங்களா? அப்போ இத மொதல்ல படிங்க...

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா என்பது மெத்தைகளில் இருந்து மோசமான வாசனைகளை அகற்று உதவும் மிகவும் பயனுள்ள கரிம பொருட்களில் ஒன்றாகும். அதன் deodorant பண்புகள் mold மற்றும் உடல் திரவங்கள் காரணமாக ஏற்படும் மோசமான வாசனைகளை நீக்க உதவுகின்றன.
இது ஒரு இயற்கை சோப்பு போல செயல்படுகிறது, கறை அல்லது எதிர்பாராத சிந்திய திரவங்களை அகற்றுவதில் திறம்படச் செயல்படுகிறது.மெத்தைத் துணியைப் பாதுகாப்பதின் மூலம் அதன் ஆயுளை நீடிக்கச் செய்கிறது. இந்த விஷயத்தில், பேக்கிங் சோடாவின் பண்புகளைக் கூட்டி ஒரு ஆழ்ந்த சுத்திகரிப்புக்காக ஹைட்ரஜன் பெராக்சைடை சேர்க்கலாம்,

தேவையான பொருட்கள்
• ¼ கப் பேக்கிங் சோடா (50 கிராம்)
• 1 கப் 3% ஹைட்ரஜன் பெராக்சைடு (250 மிலி)
• 2 சொட்டு திரவ சோப்
தயாரிப்பு
• பேக்கிங் சோடாவை ஒரு வாளிக்குள் ஊற்றவும். பின்னர், ஹைட்ரஜன் பெராக்சைடு சேர்க்கவும்.
• இதை நன்கு கலந்து பின் திரவ சோப்பைச் சேர்க்கவும்.
• நன்கு கலந்த கலவையைப் பெற்ற பிறகு, கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேமிக்கவும்.
எப்படி உபயோகிப்பது
• பயன்பாட்டிற்கு முன்னர் இதை நன்கு கலக்கி மெத்தையின் மீது தெளிக்கவும்.
• தெளித்த திரவம் முற்றிலும் வறண்டுபோகும் வரை காத்திருங்கள் . முடிந்தால், மெத்தையை தூய்மையான காற்று கிடைக்கக்கூடிய இடத்தில் வைக்கவும்.
• காய்ந்தவுடன் பேக்கிங் சோடாவின் எச்சத்தை நீக்க ஒரு பிரஷ்ஷைக் கொண்டு துடைக்கவும்.
• குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ஒருமுறை இதைச் செய்யவும்.
MOST READ: ஒரே வாரத்தில் சர்க்கரை நோய் குணமாகணுமா? அப்போ நீங்க குடிக்க வேண்டிய ஜூஸ் இதுதான்

வெள்ளை வினிகர்
வெள்ளை வினிகருக்கு இனிமையான வாசனை இல்லை. இருப்பினும், மெத்தைகளில் இருந்து மோசமான வாசனைகளை சீராக்க சிறந்த வீட்டு வைத்தியம் இதுவே. கூடுதலாக, இது அலர்ஜிக்கு சிறந்த தீர்வு ஏனெனில் அது மெத்தைப் பரப்புகளில் வாழும் பூச்சிகள் மற்றும் பாக்டீரியாக்களை நீக்குகிறது.
இருப்பினும், நீங்கள் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். மிகவும் இனிமையான வாசனைக்கு, இதனுடன் லாவெண்டர் அல்லது எலுமிச்சை அத்தியாவசிய எண்ணெய்களை இணைக்கலாம்
.
தேவையான பொருட்கள்:
• ½ கப் வெள்ளை வினிகர் (125 மிலி)
• 1 கப் சூடான நீர் (250 மிலி)
• அத்தியாவசிய எண்ணெயில் 10 சொட்டுகள்
தயாரிப்பு
• ஒரு கப் சூடான நீரில் வெள்ளை வினிகரை சேர்க்கவும் .
• பின்னர், அத்தியாவசிய எண்ணெயைச் சேர்த்து வரும் கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேர்க்கவும்.
எப்படி உபயோகிப்பது:
• மெத்தை மீது இதைத் தெளிக்கவும் மற்றும் காற்றில் உலரச் செய்யவும்.
• விரும்பத்தகாத வாசனையைக் கவனிக்கும்போதெல்லாம் இதைப் பயன்படுத்தவும்.
குறிப்பு: இந்த தீர்வால் கறையை நீக்க முடியாது. எனவே, உங்கள் மெத்தையை முழுவதுமாக சுத்தம் செய்வதற்கு, நீங்கள் அதை மற்ற தீர்வுகளோடு சேர்த்துக் கொள்ளலாம்.

பேக்கிங் சோடா, லாவெண்டர் எண்ணெய்:
லாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய் தேவையற்ற நாற்றங்களை மறைக்க வல்ல ஒரு இயற்கையான காற்று சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இதனால்தான் இதை பேக்கிங் சோடாவுடன் இணைக்கும் போது மோசமான மெத்தையின் வாசனையை எளிதாக நீக்கலாம். மேலும் இந்தக் கரைசல் கிருமி நாசினி மற்றும் பூச்சிகளை அகற்றும் வேலையை சிறப்பாகச் செய்கிறது.
தேவையான பொருட்கள்
• 1 கப் பேக்கிங் சோடா (200 கிராம்)
• 20 சொட்டுகள் லாவெண்டர் எண்ணெய்
தயாரிப்பு
• பேக்கிங் சோடாவை ஒரு கிண்ணத்தில் ஊற்றவும்.
• அடுத்து, லாவெண்டர் எண்ணெயை அதனுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
• இந்த பேஸ்ட் ஈரமாக இருந்தால், ஒரு சில நிமிடங்களுக்கு காயவையுங்கள்.
எப்படி உபயோகிப்பது
• மெத்தை மீது இந்தத் தயாரிப்பை பரப்பவும்
• 10 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு ப்ரெஷ் கொண்டு துடைக்கவும்.
• இறுதியாக vacuum கொண்டு பேக்கிங் சோடாவின் எச்சங்களை நீக்கவும்.
• ஒரு மாதத்திற்கு ஒரு முறை இதை உபயோகிக்கவும்.

பெட்ஷீட்
படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் மெத்தையின் பெட்ஷீட்களை அகற்றிவிட்டு இரண்டு மணி நேரத்திற்கு அதற்கு ஓய்வு கொடுங்கள். என்ன முறைகளை உபயோகித்தாலும் ஈரப்பதமும் வெப்பமும் காரணமாக உருவாகும் கிருமிகளை தடுக்க உங்கள் மெத்தைகளை காற்றோட்டமான இடத்தில் வைப்பது சிறந்தது.
உங்கள் படுக்கை துர்நாற்றம் வீசுகிறதா? நீங்கள் எப்போதாவது உங்கள் மெத்தையின் கிருமிகளை அழித்திருக்கிறீர்களா? அப்பொழுது நீங்கள் மோசமான வாசனைகளைக் கவனித்திருந்தால், உங்கள் மெத்தையை புதியதாக வாசனை வீசச்செய்ய இந்தத் தந்திரங்களைப் பயன்படுத்தவும்.