For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தக்காளியை நீண்ட நாள் வரை கெட்டுப்போகாமல் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?... ரொம்ப சிம்பிள்

லிகோபீன் கொழுப்பைக் குறைப்பதற்கும், கண்கள் மற்றும் தோலை பாதுகாப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் தேவையான ஒன்று.

|

இந்தியாவில் பெரும்பாலும் அனைத்து கார உணவு வகைகளிலும் சேர்க்கப்படும் ஒன்றாக தக்காளி உள்ளது. தக்காளி நீங்கள் தினமும் தயாரிக்கும் கறி, சாலட், புலாவ் மற்றும் இதர உணவுகளுக்கும் தனிச்சுவை தருகிறது. கண்ணைக் கவரும் இந்த சிவப்பு நிறப் பழம் நமக்குத் தரும் ஆரோக்கிய, அழகுப் பலன்கள் எண்ணற்றவை. டி.கே. பதிப்பகத்தின் "ஹீலிங் புட்ஸ்" புத்தகத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்றால் தக்காளியில் அதிக அளவில் பீட்டா கரோட்டின், வைட்டமின் C, லிகோபீன் நிறைந்து, கண்ணைக் கவரும் சிவப்பு நிறத்துடன் மருத்துவ பலன்களும் நிறைந்து உள்ளதாகக் கூறுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நன்மைகள்

நன்மைகள்

லிகோபீன் கொழுப்பைக் குறைப்பதற்கும், கண்கள் மற்றும் தோலை பாதுகாப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் தேவையான ஒன்று. உங்களுக்கு ஆரோக்கியம் அதிகம் தரும் இப்பழம் அதிக நாட்கள் கெடாமல் இருப்பதில்லை. காற்று மற்றும் ஈரப்பதம் தக்காளியை விரைவில் அழுகச் செய்து விடும். அவற்றை சரியான வழியில் சேமிக்கும் போது, அவற்றை நீண்ட நாட்கள் புத்துணர்ச்சியுடன் பயன்படுத்தலாம். உங்களுக்கு அது தெரியவில்லையா? வாருங்கள் அதற்கான வழிகளைக் கீழே பார்ப்போம்.

நீண்ட நாட்கள் கெடாமல் வைத்திருக்க

நீண்ட நாட்கள் கெடாமல் வைத்திருக்க

தக்காளியை பிரிட்ஜ் போன்றவற்றில் வைக்காமலேயே நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் வைத்திருந்து எப்படி நாம்சமையலுக்குப் பயன்படுத்தலாம் என்ற சில வழிமுறைகளைப் பார்ப்போம்.

தக்காளியை உறைய வைத்தல்

தக்காளியை உறைய வைத்தல்

1. புதிய நல்ல தக்காளிகளை எடுத்துக் கொண்டு, காம்புகளை நீக்கி, அவற்றை குழாய் தண்ணீரில் அழுக்குகளின்றி சுத்தமாகக் கழுவ வேண்டும். சிறு அழுக்கு கூட மீதி இருக்கக் கூடாது.

2. அவற்றை காய வைக்க வேண்டும். சுத்தமான சமையலறைத் துண்டால் சுத்தமாகத் துடைக்க வேண்டும். ஏதாவது ஈரம் இருக்கிறதா என்று சோதனை செய்வது நல்லது. பழங்களில் ஈரம் துளியும் இருக்கக் கூடாது.

3.தக்காளியின் காம்பைப் பிய்த்த மேல் பகுதியை நறுக்க வேண்டும்.

4. தக்காளியின் கீழ்ப் பகுதியை சிறிய அளவில் பாதி வரை நறுக்க வேண்டும். இது தோல் உரிக்க எளிதாக இருக்கும்.

5. ஒரு ஜிப்-லாக் பையில் அனைத்து தக்காளிகளையும் போட்டு, இறுக்கமாக மூட வேண்டும். இவற்றை குளிர் சாதனப் பெட்டியில் உள்ள பிரீஸரில் வைக்க வேண்டும்.

6. இவற்றை நாம் வேண்டும் போது எடுத்து உபயோகப் படுத்திக் கொள்ளலாம். தக்காளிகள் வெது வெதுப்பாக மாறும் வைத்திருந்து அல்லது ஓவனில் சில வினாடிகள் வைத்து எடுத்து பிறகு உபயோகிக்க வேண்டும்.

7. . உறைந்த தக்காளி ஒரு மாதம் வரை நீடிக்கும்.

பதப்படுத்தப்படுதல்

பதப்படுத்தப்படுதல்

1. ஒரு பாத்திரம் நிறைய கொதிக்க வைத்த தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் சில தாக்கிகளைப் போடவும்.

2. தக்காளியின் தோல் எளிதில் உரிந்து வரும் வரை அதைக் கொதிக்க வைக்கவும்.

3. அடுப்பிலிருந்து பாத்திரத்தை எடுத்துக் குளிர வைக்கவும். குளித்தவுடன் தக்காளியின் தோலை உரிக்கவும்.

4. ஒரு கண்ணாடி ஜாடியை எடுத்துக் கொண்டு, சிறிதளவு உப்பை சேர்க்கவும்.

5. தக்காளிகளை கண்ணாடி ஜாடியில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்கவும்.

6. இந்த தக்காளிகளை நாம் தக்காளி ப்யூரி செய்ய உபயோகப் படுத்தலாம்.

7. கண்ணாடி ஜாடி நுண்கிருமிகள் நீக்கப்பட்டு தூய்மையாக உள்ளதா என சோதனை செய்து கொள்ளவும்.

தண்டுகளை அகற்றுதல்

தண்டுகளை அகற்றுதல்

தொய்ந்த மென்மையான தக்காளிகளை யாரும் விரும்புவதில்லை. தண்டுடன் இருக்கும் தக்காளி பழங்கள் அவற்றிலுள்ள ஈரத்தன்மை நீங்கி, அழுகி கருத்துப் போக காரணமாகிறது. நீளமான தண்டுகளை எடுத்து விட்டு தக்காளியை தண்டுப் பகுதி கீழே இருக்குமாறு, சமமான தளத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு வைத்தால் ஈரத்தன்மை வெளியேறுவது ஓரளவு குறைந்து, சாறுடன் இன்னும் சிறிது நாட்கள் கெடாமல் இருக்கும்.

தக்காளி ப்யூரி செய்ய

தக்காளி ப்யூரி செய்ய

தக்காளிகள் நீண்ட நாட்கள் சேமிக்க, அவற்றை ப்யூரி செய்து உபயோகிக்க வேண்டும். அதை எவ்வாறு செய்வது எனப் பார்ப்போம்.

1. தண்டுகள் நீக்கிய தக்காளியை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

2. நறுக்கிய தக்காளிகளை பிரஷர் குக்கரில் வைத்து இரண்டு அல்லது மூன்று விசில் வரும் வரை வேக விடவும்.

3. அவை வெந்தவுடன் குளிர விடவும். குளிர்ந்தவுடன் அதை கூழாக்கிக் கொள்ளவும்.

4. மசித்த தக்காளியை வடிகட்டிக் கொள்ளவும். கசடுகளை நீக்கி விடவும்.

5. வாணலியில் தக்காளிக் கூழை சிறு தீயில் வைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

6. குறைந்தது பத்து நிமிடங்கள் அவை கெட்டியாகும் வரை வேக வைக்கவும்.

7. மிக நீண்ட நாட்கள் ப்யூரியை உபயோகிக்க விரும்பினால் அத்துடன் சோடியம் பென்ஸ்சோயேட் சிறிதளவு சேர்க்கவும்.

8. இதை காற்றுப் புகாத ஜாடியில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் இருப்பது முதல் முப்பது நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

குளிர்சாதனப் பெட்டி

குளிர்சாதனப் பெட்டி

நீங்கள் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து தக்காளியை உபயோகப்படுத்தும் பொது, அவற்றை அறையின் வெப்ப நிலைக்கு வரும் வரை காத்திருந்து உபயோகிக்கவும். அப்போதுதான் அதன் சுவை பிரெஷ் ஆக இருக்கும்.

இதுவரை தக்காளியை அதன் புத்துணர்ச்சி மாறாமல் நீண்ட நாட்கள் உபயோகப் படுத்தும் வகையில் சேமிக்கும் வழிமுறைகளைப் பார்த்தீர்கள். நீங்களும் இதே போன்று தக்காளிப் பழங்களை சரியான வழிகளில் சேமித்து, அதன் சிலிர்ப்பூட்டும் சுவையை அனுபவியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Store Tomatoes The Right Way To Increase Their Shelf Life

tomatoes are an important ingredient in most delicacies prepared in India. These fruits add tang to your curries, salads, pulao and other delicacies that are savoured almost every day.
Story first published: Thursday, July 12, 2018, 20:46 [IST]
Desktop Bottom Promotion