For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்படி ஏதாவது புகைமூட்டம் வீட்டை சுத்திசுத்தி வந்து எரிச்சலாக்குதா?... இத செய்ங்க சரியாகிடும்...

புகை மனித சமூகத்திற்கு பெரும்பகையாக மாறி வருகிறது. சுற்றுப்புறச் சூழலை கெடுப்பதாலும், மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதாலும் தான் சில ஆலைகளையும் அணுசக்தி உலைகளையும் மூடச்சொல்லி போராட்டம் நட

By Suveki
|

புகை மனித சமூகத்திற்கு பெரும் பகையாக மாறி வருகிறது. சுற்றுப்புறச்சூழலை கெடுப்பதாலும், மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதாலும் தான் சில ஆலைகளையும் அணுசக்தி உலைகளையும் மூடச்சொல்லி போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

முன்பெல்லாம் ஆலைகள் அமைப்பதால் நாட்டில் வேலைவாய்ப்பும், பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும் என்கிற விழிப்புணர்வு இருந்தது. அதுவும் உண்மை தான். ஆனால் சுற்றுப்புறத்திற்கும் மனித சமூகத்திற்கும கேடு விளைவிக்கும் ஆலைகள் பல்லாயிரம் கோடி வருமானம் தந்தாலும், வேலை வாய்ப்பு அளித்தாலும் அது நம்மை கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் ஆலகால விஷமென்றால் அப்படி எந்த ஆலையும் நம் சமூகத்திற்குத் தேவையில்லை என்கிற விழிப்புணர்வு இப்போது ஏற்பட்டு இருக்கிறது.

வீட்டிலுள்ள புகைமூட்டத்தை எப்படி சரிசெய்வது

கேடான ஆலை புகை கழிவுகளால் காற்று மாசுபடுதல், குடிநீர் மற்றும் நமது வேளாண் வளம் பாதிக்கப்படுவதால் தான் பொதுமக்கள் மத்தியிலும் இப்போது சுற்றுபுறச்சூழல் பற்றிய கவனம் பரவி தொடங்கி இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணங்கள்

காரணங்கள்

சுற்றுப்புற சூழல் பற்றிய விழிப்புணர்வும், சுகாதார பேணுதலும் வீட்டிற்கு வெளியே மட்டும் தான் வீட்டுக்குள் தேவையில்லையா என்றால் நிச்சயம் தேவை.

எந்த ஒரு ஆரோக்கியமான அல்லது அவசியமான தேவைகள் அல்லது நடவடிக்கைகளை நாம் நம்மில் இருந்து அல்லது நம் வீட்டில் இருந்து தான் தொடங்குதல் வேண்டும்.

வீட்டை பொருத்தவரை சமையல் அறை புகை, அக்கம் பக்கத்தில் குப்பையை எரிப்பதால் வரும் புகை, அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் புகைபிடிப்பதால் உண்டாகும் சிகரெட் நிகோடின் புகை, மின்சார வயர்கள் அல்லது சாதனங்கள் தீப்பிடிப்பதால் வரும் புகை பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் வீட்டை சுத்தப்படுத்தாமல் இருப்பதால் மின் விசிறி அல்லது குளிர்சாதன கருவிகள் இயங்கும் போது கீழே வீட்டு தரையில் பரவி கிடக்கும் தூசி மேலெழுந்து காற்றில் சுற்றிக் கொண்டு இருக்கும். அதை சுவாசிப்பதால் நமக்கு ஒவ்வாமை என்கிற அலர்ஜி, சுவாசக் கோளாறு, சளி, சைனஸ், இருமல் போன்ற உடல்நலக் கோளாறுகளும் ஏற்படுகின்றன.

பொதுவாக வீடுகளில் மேலே ஏற்படும் புகை மூட்டத்தை எப்படி கட்டுப்படுத்துவது? அதன் பாதிப்பில் இருந்து நம்மை எப்படி காத்துக் கொள்வது என்பதை தான் கீழ்காணும் வழிமுறைகள் மூலம் நாம் காணலாம்.

வினிகர் முறை

வினிகர் முறை

1 கப் தண்ணீரில் 1 கப் வினிகரை சம அளவில் கலந்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும். பிறகு அந்த கரைசலை ஸ்பிரே செய்யும் பாட்டிலில் அடைத்து வீட்டை சுற்றி அதாவது துணிகள் மூடிய சோபா, திரைசீலைகள் தவிர்த்து மற்ற இடங்களில் அதை தெளிக்கவும்.

வினிகர் கரைசலின் பயன்கள்

பொதுவாக புகை துணிகள் தவிர்த்து மற்ற இடங்களில் பரவி இருக்கும் உதாரணமாக மின் விசிறிகள், கிச்சன் சிங்க், டைல்ஸ், தரை மற்றும் சுவர் பகுதிகளில் பரவி இருக்கும். அப்படி இடங்களில் வினிகர் மற்றும் தண்ணீர் கலந்த கரைசலை தெளிக்கும் போது புதை விலகுவதோடு அதனால் வரும் வாடையும் பெருமளவில் வெளியேறும். வீடு அல்லது அலுவலகத்திற்குள் சிகரெட் பிடிப்பவர்கள் ஆஷ் டிரேயை அருகில் வைத்திருப்பது போல் இந்த வினிகர் கரைசலையும் ஒரு கிண்ணத்தில் அருகில் வைத்திருந்தால் பெருமளவில் சிகரெட் புகையும் வாடையும் கட்டுப்படுத்தபடும். முயற்சி செய்து பாருங்கள்.

பேக்கிங் சோடா முறை

பேக்கிங் சோடா முறை

மேலே வினிகர் முறை துணிகள் சார்ந்த சோபா, மெத்தை, திரைசீலைக்கு பயன்படுத்த முடியாத சூழலில் இந்த பேக்கிங் சோடா முறையை பயன்படுத்தலாம். அதாவது சோபா, கார்பெட், மிதியடி மற்றும் திரைசீலையில் இந்த பேக்கிங் சோடா பவுடரை தேவையான அளவு தூவி விட்டு அதை ஒரு நாள் முழுக்க அப்படியே விட்டு விடுங்கள். மறு நாள் வாக்குவம் க்ளீனர் என்கிற தூசி உறிஞ்சியை பயன்படுத்தி ஏற்கனவே பேக்கிங் சோடா தூவிய இடங்களில் பயன்படுத்தி துப்புரவாக க்ளீன் செய்து விடுங்கள்.

பேக்கிங் சோடாவின் பயன்கள்

பேக்கிங் சோடா புகை சார்ந்த வாசனையை நீக்குவதோடு, துணியோடு சேர்ந்து அதுவே தன்னார்வ நறுமணத்தை கமலச் செய்து புகை வாடையை துணிகளிலிருந்து வெளியேற்றி விடும்.

நிலக்கரி துண்டுகள்

நிலக்கரி துண்டுகள்

ஒரு சின்ன கிண்ணத்தில் நிலக்கரி துண்டுகளை போட்டு புகை மூளும் அறைக்குள் காற்றோட்டம் குறைவாக உள்ள இடத்தில் வைத்து விடுங்கள். அதுவே காற்றை சுத்திகரித்து, புகை வாசனையை நீக்கிவிடும். இப்போது இதை அமேசான் போன்ற ஆன்லைன் விற்பனை தளங்களில் குட்டி குட்டி சாக்கு பைகளில் அடைத்து காற்று சுத்திகரிப்பானாக விற்பனை செய்வதை நீங்களே காணலாம். அவர்கள் கரியை காசாக்கும் போது நாம் இதை செய்து நம் காசை கரியாக்காமல் நம் காற்றையும் சுத்திகரித்து கொள்ளலாம்.

நிலக்கரியின் பயன்கள்

பொதுவாக நிலக்கரி காற்று மற்றும் நீரில் உள்ள மாசு பொருட்களை நீக்கி சுத்திகரிக்க பயன்படுகிறது. தண்ணீர் மற்றும் காற்று சுத்திகரிப்பான் எனும் வாட் ஃபில்டர் மற்றும் ஏர் ஃப்யூரிஃபையர்களில் இதை பயன்படுத்துவதை நாம் காணலாம். சுத்திகரிப்பதோடு புகை வாடையையும் நீக்கி விடும் வல்லமை நிலக்கரிகளுக்கு உண்டு.

காற்று தாவரங்கள்

காற்று தாவரங்கள்

வீடு மற்றும் அலுவலகங்களுக்கு உள்ளே வைத்து வளர்க்கப்படும் காற்று தாவரங்கள் இப்போது நிறைய நர்சரி மரம் வளர்ப்பு மையங்களில் கிடைக்கிறது. அவைகளும் காற்று சுத்திகரிப்பானாக செயல்பட்டு புகை மற்றும் அதனால் வரும் வாடைகளை நீக்குகிறது.

காற்று தாவரங்களின் பயன்கள்

புகையில் நமக்கு ஒவ்வாத வாடையும், கனிமங்களும் இந்த தாவரங்களுக்கு தீனியாக பயன்படுவதால் இத்தகைய தாவரங்கள் நமக்கு தீங்கிளைக்க கூடிய கனிமங்களை அது தீனியாக்கி காற்றி சுத்திகரித்து, நல்ல ஆரோக்கியமான காற்றை நாம் சுவாசிக்க உதவுகிறது.

டிஃப்யூசர் என்கிற விரவி

டிஃப்யூசர் என்கிற விரவி

கார் மற்றும் வீடுகளில் நாம் பயன்படுத்தும் திரவத்தால் இயங்கும் வாசனை பரப்பும் கருவி தான் இது. அதாவது 4 முதல் 5 துளிகள் ஆரோமாடிக் ஆயிலை தண்ணீரில் கலந்து இந்த விரவியில் நிரப்பி ஸ்விட் ஆன் செய்து விட்டால் அது மின்சாரத்தில் சூடாகி அந்த திரவத்தை ஆவியாக்கி நறுமணம் பரப்புவதோடு மாசான புகையை நீக்கி விடும் ஆற்றல் கொண்டது.

யூக்கலிப்டஸ் ஆயில் ஸ்பிரே

யூக்கலிப்டஸ் ஆயில் ஸ்பிரே

ஒரு கப் தண்ணீரில் 15 முதல் 20 துளிகள் இக்வலிப்டஸ் என்கிற கற்பூரத்தைல மர எண்ணெயை கலந்து வீடு அல்லது அலுவலகம் முழுவதும் ஸ்பிரே செய்தாலும் காற்று மாசுபடுவதை தடுத்து, நறுமணத்தோடு ஆரோக்கியமான காற்றை சுவாசிக்க உதவும்.

லாவண்டர் ஆயில் ஸ்பிரே

லாவண்டர் ஆயில் ஸ்பிரே

மேலே சொன்ன வழிமுறை படி கற்பூரத்தைலத்திற்கு பதிலாக லாவண்டர் ஆயிலை கலந்து ஸ்பிரே செய்தாலும் காற்று சுத்தமாகவதோடு மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளையும் தீர்த்து மன அமைதியான சூழலை இந்த ஆயில் நறுமணம் நமக்கு ஏற்படுத்தி உதவுகிறது.

இதே வழி முறையில் பெப்பர்மின்ட் ஆயில், ரோஸ்மேரி மர எண்ணெய், ஆரஞ்சு, லைம் போன்ற திரவங்களை கலந்தும் ஸ்பிரே செய்து மாசற்ற மற்றும் நறுமணம் கலந்த சுகாதாரமான காற்றை வீடுகளுக்குள் சுவாசித்து கொள்ள முடியும்.

வெங்காய துண்டுகள்

வெங்காய துண்டுகள்

இது மிகவும் எளிதான ஒரு வழிமுறை, வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி அறையின் மூலையில் ஒரு கிண்ணத்தில் போட்டு வைக்கலாம். அல்லது ஒரு கிண்ணம் தண்ணீரிலும் ஊறப்போடுவது போல் போட்டு வைக்கலாம். இந்த முறையிலும் காற்றில் நச்சுத் தன்மை நீக்கப்பட்டு சுகாதாரமான காற்றை அறைகளில் சுவாசிக்க முடியும். ஆனால் தினமும் வெங்காயத் துண்டுகளை மறக்காமல் மாற்ற வேண்டியது அவசியம்.

அமோனியா வழிமுறை

அமோனியா வழிமுறை

வெங்காயம், நிலக்கரி போல அமோனியாவை சின்ன சின்ன கிண்ணங்களில் புகை வாடை அடிக்கும் அறைகளில் வைத்து விட்டார் அமோனியா ஆவியாகி காற்றை சுத்தப்படுத்தி, வாடையை நீக்கிவிடும். அமோனியாவை தண்ணிர் அல்லது வினிகரில் கலந்தும் அறைக்குள் வைத்து பயன்பெறலாம்.

காற்று சுத்திகரிப்பான்

காற்று சுத்திகரிப்பான்

மேலே சொன்ன எதுவும் எனக்கு செட் ஆகாது. அதுக்கெல்லாம் நேரமில்லை என்று முனகுபவரா நீங்கள். ஒன்றும் கவலை வேண்டாம். ஏர் ப்யூரிஃபையர் என்கிற காற்று சுத்திகரிப்பான் பல தரமான பிராண்டகளில், விலைகளில் மார்கெட்டில் அல்லது ஆன் லைன் சந்தையில் கிடைக்கிறது. அதை வாங்கி மின்சார ப்ளக்கில் இணைத்து ஸ்விட் ஆன் செய்து விட்டு ஹாயாக உட்கார்ந்து கொள்ளுங்கள். மேலே சொன்ன மாசற்ற காற்றும், நறுமணமும் உங்களுக்கு நிவாரணமாக கிடைக்கலாம். மேலே சொன்ன வழிமுறைகளில் தான் இந்த காற்று சுத்திகரிப்பானும் இயங்குகிறது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

எல்லாவற்றையும் தாண்டி சுத்தமும், சுகாதாரமுமான காற்று இயற்கை நமக்கு அளித்த கொடை. காற்று தானே எங்கும் தன்னை மாசுபடுத்தி கொள்வதே இல்லை. மனித சமூகம் தான் அதை மாசுபடுத்தி நம்மை நாமே நஞ்சுக்காற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள படாத பாடு படுகிறோம். பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டும் கதை போல் சுற்றுப்புற சூழலுக்கு நாமே எதிரியாக இருப்பது கூட நம்மை நாமே அழித்துக் கொள்வதோடு வருங்கால சந்ததியினரையும் நமது தவறான வாழ்வியல் மூலம் வஞ்சித்து வருகிறோம்.

ஜன்னல்கள்

ஜன்னல்கள்

வீட்டுக்கு வெளியே காற்றை சுத்தமாக அனுபவிப்பது போல் வீட்டுக்குள்ளும் அனுபவிக்க ஜன்னல்களை திறந்து வையுங்கள். சுத்தமான காற்று வீட்டுக்குள் பரவி அதுவே நம் சுவாசத்திற்கு தேவையான மாசற்ற காற்றை பரவச் செய்யும். வீட்டை அடிக்கடி சுத்தபடுத்தி, குப்பைகளை சேரவிடாமல் சுத்தமாக வைத்திருங்கள். அதன் மூலமும் வீட்டுக்குள் பரவும் புகை மற்றும் நச்சுக் காற்றை தடுக்க முடியும்.

எல்லாவற்றுக்கும் மேலாக எமனே நாமே வீட்டுக்குள் அழைப்பது போல் கோவிலாக கருதப்படும் வீட்டுக்குள் சிகரெட் போன்ற புகைபிடிப்பான்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அது உங்களை மட்டும் அல்ல உங்களைச் சார்ந்தோர்களையும் சந்தோஷப்பட வைக்கும். சுத்தமும், சுகாதாரமும் மட்டும் வரும் தலைமுறைக்கு நாம் சேர்த்து வைத்துவிட்டு போகும் விலைமதிப்பில்லா சொத்து என்பதை அனைவரும் நினைவில் கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: home and garden வீடு
English summary

How To Get The Smell Of Smoke Out Of Your House

The smell of smoke and nicotine can stick to interior walls, window screens, and household linens and carpets, creating an unpleasant smell throughout the home.
Desktop Bottom Promotion