Latest Updates
-
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்! -
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
பாபா வாங்கா கணிப்புப்படி செப்டம்பர் மாத முதல் வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
உலகின் முதல் ஏவுகணையை உருவாக்கிய நாடு எது தெரியுமா? அமெரிக்காவும் இல்ல, ரஷ்யாவும் இல்ல -
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
எப்படி துவைச்சாலும் இந்த பேனா மை கறை போக மாட்டேங்குதா? இத ட்ரை பண்ணி பாருங்க...
நம்முடைய ஆடைகளில் பேனா மையின் கறை படிந்துவிட்டால் அதை நீக்குவது பற்றிய அற்புதமான டிப்ஸ்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
உங்களுக்கு பிடித்தமான சட்டையில் பேனா மை கறை ஒழுகி விட்டால் பின்பு அந்த சட்டையை போடமுடியாமல் போய்விடும். காரணம் பொதுவாக அந்த கரையை நீக்க முடியாமல் இருப்பது தான்.

ஆனால் அந்த பேனா கறையை நொடியில் நீக்க முடியும் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? ஆமாம், நம்பித்தான் ஆக வேண்டும். இதற்கான சில தீர்வுகள் உள்ளது. அதனை நீங்களே முயற்சித்து பாருங்கள்.

பால்பாயிண்ட் பேனா மை கறை
பால் பாயின்ட் பேனா மை கறையைப் போக்க, முதலில் கறை படிந்த சட்டையை ஒரு சுத்தமான காய்ந்த சிறிய துணி மேல் வைக்க வேண்டும். பிறகு ஆல்கஹாலை எடுத்து அந்த சட்டையில் ஊற்றி தேய்க்க வேண்டும்.
பிறகு காய்ந்த துணியால் நன்றாக தேய்க்கவும். அந்த கறை மறையும் வரை இப்படி தேய்க்கவும். பிறகு அந்த ஆடையை நன்றாக துவைக்கவும். பிறகு அந்த சட்டையில் மிதமான அளவு டிடர்ஜென்ட் பயன்படுத்தி அந்த கரையில் தேய்த்து 5 நிமிடம் ஊற விடவும். பின்பு ஆடையின் தன்மைக்கு ஏற்ற விதத்தில் வெதுவெதுப்பான நீரில் அலசி காய வைக்கவும்.

ஆல்கஹால் (ம) நெயில் ரிமூவர்
ஆல்கஹாலை தேய்ப்பதால் பலன் இல்லாமல் போனால், நக பாலிஷ் ரிமூவரை பயன்படுத்தலாம். அல்லது ஹேர் ஸ்ப்ரே, டூத்பேஸ்ட், அல்லது ஹேன்டு சனிடைசர் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். ஆல்கஹால் பயன்படுத்தாமல் மேலே கூறியவற்றை பயன்படுத்தி கறையை போக்க விரும்பினால் வேலை முடிந்தவுடன் ஆடையை முழுவதும் நல்ல தண்ணீரில் அலசி எடுக்கவும். காயும் முன், கறை முழுவதும் நீங்கி விட்டதை உறுதி செய்து கொள்ளவும். ஒருவேளை கறை போகவில்லை என்றால் மீண்டும் முயற்சிக்கவும். மேலே கூறிய ரசாயனப் பொருட்களைத் தவிர்த்து, வெள்ளை வினிகர் மற்றும் பால் கூட கறையை போக்க உதவும்.

வெள்ளை வினிகர்
கறையில் வெள்ளை வினிகரை ஊற்றவும். வெள்ளை வினிகர் மற்றும் சோளமாவு பயன்படுத்தி ஒரு பேஸ்ட் தயாரித்துக் கொள்ளவும். இந்த பேஸ்டை கறை உள்ள இடத்தில் தடவவும். சில மணி நேரம் ஊறியவுடன் அந்த துணியை வாஷிங் மெஷினில் போட்டு துவைக்கவும்.

பால்பாயிண்ட் மை கறை
ஒரு கிண்ணத்தில் பாலை நிரப்பிக் கொள்ளவும். கறை பட்ட ஆடையை ஒரு இரவு முழுவதும் பாலில் ஊற வைக்கவும். பின்பு மறுநாள் அந்த ஆடையை துவைத்து விடவும். கறை முழுவதும் நீங்கி இருப்பதை உங்களால் காண முடியும்.

வாட்டர் கலர் கறை
ஒரு சுத்தமான காய்ந்த துணி மேல் கறை பட்ட ஆடையை வைத்துக் கொள்ளவும். கறை உள்ள இடத்தில தண்ணீர் ஊற்றவும். பிறகு காய்ந்த துணியால் அந்த இடத்தை தேய்க்கவும். இதனால் ஆடையில் உள்ள கறை இந்த துணிக்கு மாறும். கடைசியாக டிடர்ஜென்ட் பயன்படுத்தி ஆடையை 5 நிமிடம் ஊற வைக்கவும். ஆடைக்கு பரிந்துரைக்கப்பட்ட வெப்பநிலையில் அதனை அலசவும். ஆடையை காய வைப்பதற்கு முன்னர் கறை முழுவதும் நீக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். திட்டு திட்டாக கறை தென்பட்டால் மறுபடி இதனை முயற்சிக்கவும்.



Click it and Unblock the Notifications