For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீலிங் பேன்ல ஒரே தூசியா இருக்கா?... எப்படி துடைச்சா சுத்தமாகும்...

அதுக்குப் பின்னாடி இத எப்படி சுத்தம் பண்ணப்போறோம்னு நினைச்சே தலைவலி வந்துடும்.

|

அரைமணி நேரத்துல வீட்ல இருக்குற மொத்த தூசியையும் கிளீன் பண்ணணுமா?... ரொம்ப சிம்பிள்... வீடு சுத்தம் பண்றது மாதிரி ஒரு போரடிக்கிற விஷயம் வேறென்ன இருக்கு சொல்லுங்க... தூசி எப்படி வீட்டுக்குள்ள வருதுன்னே நாம சரியா கவனிக்காம விட்டுடுவோம். அதுக்குப் பின்னாடி இத எப்படி சுத்தம் பண்ணப்போறோம்னு நினைச்சே தலைவலி வந்துடும்.

home tips

அதற்கு நம்முடைய எத்தனை ப்ளோர் கிளீனர் போட்டு வீட்டை துடைச்சாலும், உடனே கொஞ்ச நேரத்தில் உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் தூசி வந்து அப்படியே சுவர், தரையெல்லாம் அப்பிக் கொள்ளும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணம்

காரணம்

முதலில் வீட்டுக்குள் எந்தெந்த வழிகளில் தூசி உள்ளே வருகிறது என்று பார்த்து அதை தடுப்பதற்கான முயற்சியை செய்ய வேண்டும். அதேபோல் எந்தெந்த நேரத்தில் வீட்டுக்குள் தூசுக்கள் அதிகமாக வர வாய்ப்பு இருக்கிறது என்பதை கவனமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தூசுகள்

தூசுகள்

எந்தெந்த நேரத்தில் வீட்டுக்குள் தூசுக்கள் அதிகமாக வர வாய்ப்பு இருக்கிறது என்பதை கவனமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த குறிப்பிட்ட நேரங்களில் கதவு மற்றும் ஜன்னல்களை மறக்காமல் அடைத்து வைத்திருங்கள். அதன்மூலம் ஓரளவு உங்களுடைய வேலையை எளிமைப்படுத்த முடியும்.

சுவர்கள்

சுவர்கள்

மேல் சுவர் முதல் அறையின் சுவர்கள் முழுக்க வேக்கம் கிளீளர் கொண்டு சுத்தம் செய்யுங்கள். வேக்கம் கிளீனரில் தரை மட்மல்லாது சீலிங் மற்றும் சுற்றுச்சுவரை சுத்தம் செய்வதற்கான நிறைய கருவிக்ள இருக்கின்றன. சீலிங்கில் தூசுக்கள் குறைவாக இருந்தாலே வீட்டுக்குள் சுத்தம் செய்தபின், மீண்டும் மீண்டும் தூசி வராமல் பார்த்துக் கொள்ள முடியும்.

பேஸ்போர்டுகள்

பேஸ்போர்டுகள்

பேஸ்போர்டு, டேபிள்களில் எப்படி சுத்தம் செய்தாலும் காற்றில் தூசுக்கள் வந்து படிந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் வேறு வழியில்லை. தினமும் அதை சுத்தம் செய்துதான் ஆகவேண்டும். ஒரு நல்ல தண்ணீரை உறிஞ்சிக் கொள்கிற மாதிரியான துணியை தண்ணீரில் நனைத்து, அல்லது ஃப்ளோர் கிளீனர் கலந்த நீரிலோ நனைத்துக் கொள்ளுங்கள். அந்த ஈரத் துணியை வைத்து புஸ்போர்டுகளைத் துடையுங்கள். பெரிதாக மெனக்கெடாமல் தினமும் இதை செய்தாலே, பேஸ்போர்டுகள் பளிச்சென சுத்தமாக புதுசு போலவே மின்னும்.

மூலை முடுக்குகள்

மூலை முடுக்குகள்

வீட்டின் மூலை முடுக்குகளில் ஏதாவது ஒரு இடத்தில் தூசுக்கள் சென்று ஒளிந்து கொண்டிருக்கும். அதுபோன்ற இடங்களை துடைப்பம், மற்ற கருவிகள் கொண்டு முழுதாக சுத்தம் செய்ய முடியாது. அதுபோன்ற சி்க்கல் வரும்போது, மேக்கப் பிரஸ் போன்றவற்றைப் பயன்படுத்தி மூலை முடுக்குகளில் உள்ள தூசிக்களை சுத்தம் செய்து விடலாம்.

எலக்ட்ரானிக்ஸ்

எலக்ட்ரானிக்ஸ்

கம்யூட்டர், டிவி, டிவிடி பிளேயர்ஸ், ஸ்டீரியோ, பிரிண்டர்ஸ் ஆகியவற்றில் எப்படித்தான் அழுக்குகள் படியுமென்றே தெரியாது. இதுபோன்ற விலையுயர்ந்த எலக்ட்ரானிக்ஸ் பொருள்களில் தூசுக்கள் படிந்தால், நம்முடைய எரிச்சலைக் கட்டுப்படுத்தவே முடியாது. இதுபோன்ற அழுக்குகளை மைக்ரோபோபர் கிளாத் வைத்து, துடைத்தெடுங்கள்.

மென்மையான டாய்ஸ்

மென்மையான டாய்ஸ்

பீன்பேக், சிறுவர்கள் விளையாடும் பொம்மைகள் போன்றவற்றை நாம் வீடு சுத்தம் செய்யும்போது பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ஆனால் அதுபோன்ற இடங்களில் தான் அழுக்குகள் நம் கண்ணுக்குத் தெரியாமல் படியும். குழந்தைகள் மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்க ஆரம்பிக்கும். இதுபோன்ற பொருள்களை ஈரமான கிளீனர்கள் கொண்டு சுத்தம் செய்ய முடியாது. இதற்கு பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தி அழுக்குகளை துடைத்து எடுக்கலாம்.

சீலிங் ஃபேன்

சீலிங் ஃபேன்

நாம் வீட்டில் எல்லா இடத்தையும் சுத்தம் செய்தாலும் இந்த சீலிங் ஃபேனை மட்டும் துடைப்பதே இல்லை. அதனால் எல்லா வீடுகளிலும் சீலிங் பேனில் மேல்புறத்தில் அழுக்குகள் படிந்து தொங்கும். சீலிங் பேனை சுத்தம் செய்யும்போது, அதற்கு அடியில் தரையில் ஒரு பேப்பர் அல்லது துணியை விரித்து வைத்துக் கொண்டு சுத்தம் செய்தால், பேனில் இருக்கும் குப்பைகள் தென்மேலே விழும். அவற்றை அப்புறப்படுத்துவதும் மிக எளிது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

how to get rid of dust and make your home shine

The first step when it comes to dusting is knowing which tools you should and shouldn't use
Story first published: Wednesday, May 9, 2018, 15:51 [IST]
Desktop Bottom Promotion