For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேனீ கடிச்சிடாம தேன்கூட்டை எப்படி கலைக்கணும்னு தெரியுமா?... இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க...

தேன் கூட்டை கலைப்பது அவ்வளவு சாதாரணமான காரியமல்ல என்பது நமக்குத் தெரியும். தேனீக்கள் கடித்தால் உயிருக்கே ஆபத்து என்பதும் நமக்குத் தெரியும். ஆனால்தேனீக்கள் கடிக்காமல் தேன்கூட்டை எப்படி கலைப்பது என்பது

By Suganthi Rajalingam
|

தேன் கூட்டை கலைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. இதில் நிறைய ஆபத்துகள் நிறைந்திருக்கிறது. ஆனால் இந்த தேனீக்கள் சுற்றுச்சூழல் இருப்பு, மகரந்த சேர்க்கை மற்றும் சுகாதாரம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது.

how to get rid of a beehive

நாம் தினமும் சாப்பிடும் காய்கறிகளிலிருந்து பழங்கள் வரை எல்லாம் உற்பத்தியாகுவது இந்த தேனீக்களால் மட்டுமே சாத்தியமாகுகின்றன. அதுமட்டுமல்லாமல் தேன் நமக்கு கிடைத்த ஒரு அருமருந்தாகும். எனவே அப்படிப்பட்ட தேனீக்களை அழிக்காமல் அபாயத்தை விளைவிக்கும் தேன் கூட்டை கலைப்பது எப்படி என்று தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தனியாக வேண்டாம்

தனியாக வேண்டாம்

தேன் கூட்டை கலைக்கும் போது தனியாக செயல்படாதீர்கள். ஏனெனில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான தேனீக்கள் உங்களை தாக்க நேரிடலாம். இது உங்களை மட்டும் தாக்காது. உங்களை சுற்றி இருப்பவர்களையும், குடும்ப உறுப்பினர்கள் என்று அனைவரும் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். இது ஒரு பயமுறுத்தும் செயலாக இருந்தாலும் கீழ்க்கண்ட டிப்ஸ்களை பயன்படுத்தி தேனீக்களை ஒன்றும் செய்யாமலே தேன் கூட்டை எளிதாக கலைக்கலாம்.

இடத்தை கண்டறிதல்

இடத்தை கண்டறிதல்

முதலில் சுற்றியுள்ள பகுதிகளை ஆராய்ந்து தேனீக்களை கண்டறிந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் ஒன்று அல்லது இரண்டு தேனீக்கள் அலைவதை பார்த்தால் உங்கள் அருகில் கண்டிப்பாக தேன் கூடு இருப்பதை உறுதிபடுத்தி கொள்ளுங்கள். எனவே உடனடியாக தேன் கூட்டை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுங்கள். அதற்கு தேவையான கருவிகள் மற்றும் பொருட்களை எடுத்து ஆயத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

தேன் சேகரிப்பவர் உதவியை நாடுங்கள்

தேன் சேகரிப்பவர் உதவியை நாடுங்கள்

உங்கள் உள்ளூரிலே தேனை சேகரிக்கும் தொழில் பார்க்கும் நபரை நாடுங்கள். அவர் உங்களுக்கு அவரின் அனுபவம் மூலம் நிறைய உதவிகளை செய்து தருவார். அவர்கள் இதை தொழிலாகவே செய்து வருவதால் எளிதாக செயல்பட வசதியாக அமையும். அவர் அந்த தேனீக்களை கொல்லாமலே தேன் கூட்டை கலைத்து உதவி செய்வார். சில கம்பெனிகள் இந்த தொழிலை இலவசமாகவும் செய்து தருகிறார்கள். எனவே அருகில் இருக்கும் அனுபவம் வாய்ந்த கம்பெனியை நாடுங்கள்.

புகை போட்டு கலைத்தல்

புகை போட்டு கலைத்தல்

தேனீக்களை தேன் கூட்டிலிருந்து வெளியேற்ற இந்த புகை அல்லது தூபம் போடும் முறைகளை செய்கின்றனர். இதை பயன்படுத்தும் போது தேனீக்கள் மெதுவாக தேன் கூட்டிலிருந்து வெளியேற ஆரம்பித்து விடும். பிறகு தேனீக்கள் இல்லாத தேன் கூடு மட்டுமே இருக்கும். அதை கவனமாக எளிதாக அகற்றி விடலாம். தேனை சேகரித்து விட்டு அந்த இடத்தை எந்த தடயமும் இல்லாமல் நன்றாக சுத்தம் செய்து விடுங்கள். இதனால் மறுபடியும் அந்த இடத்திற்கு தேனீக்கள் ஈர்க்கப்படாது. இதன் மூலம் மறுபடியும் தேன் கூடு கட்டுவதை தடுக்கலாம்.

எரித்த காகிதம் மற்றும் மரக்கட்டை

எரித்த காகிதம் மற்றும் மரக்கட்டை

தேன் கூட்டிற்கு கீழே இரவில் காகிதம் அல்லது மரக்கட்டையை எரித்து வைத்து விடுங்கள். இதைச் செய்வதற்கு முன் கண்டிப்பாக பாதுகாப்பான உடையை அணிந்து கொள்ளுங்கள். ஏனெனில் எல்லா தேனீக்களும் உங்கள் வீட்டினுள் வர வாய்ப்புள்ளது. ஒரு பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டால் தேனீக்களிடமிருந்து எஸ்கேப் ஆகி விடலாம்.

ஈர்ப்பதை தவிருங்கள்

ஈர்ப்பதை தவிருங்கள்

பொதுவாக சில இடங்கள் தேனீக்களால் ஈர்க்கப்படுகிறது. எனவே அது போன்ற இடங்களை முதலில் தவிருங்கள். திறந்த நீரூற்றுகள், திறந்த தண்ணீர் ஊற்று போன்றவை தேனீக்களுக்கு மிகவும் பிடித்தமான இடங்களாக உள்ளது. ஒரு நாள் கூட வசதியாக இருந்து விட்டால் பிறகு தேனீக்கள் அங்கிருந்து அகற்றுவது கடினம். எனவே அதற்கு ஏதுவாக இடங்களை வைக்காதீர்கள். தேன் கூட்டை அங்கிருந்து முழுவதுமாக நீக்கி விடுங்கள். இல்லையென்றால் மறுபடியும் மறுபடியும் அங்கே ஈர்க்கப்படும்.

சரியான நேரம்

சரியான நேரம்

நீங்கள் தேன் கூட்டை கலைக்க நினைத்தால் வசந்த காலம் துவக்கத்தில் அல்லது குளிர்காலத்தை தேர்ந்தெடுக்கலாம். இது தான் கலைக்க சரியான நேரமாக இருக்கும். ஏனெனில் இப்பொழுது தேனீக்களின் எண்ணிக்கை தேன் கூட்டில் குறைவாக இருக்கும். அதிகாலைப் பொழுது மற்றும் மாலை நேரத்தில் தான் ராணித் தேனீ கூட்டில் ஓய்வெடுக்கும். பூச்சிமருந்து போன்றவற்றை தெளித்து உடனடியாக கூட்டை அகற்றி விடுங்கள்.

தொழில் சார்ந்தவரை அழைத்தல்

தொழில் சார்ந்தவரை அழைத்தல்

உங்களுக்கு தேனீக்களால் எந்த அழற்சியும் ஏற்படவில்லை என்றால் நல்லது. இல்லையென்றால் உங்கள் உடம்பில் தேனீக்களால் விஷம் ஏறியுள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் தேனீக்கள் கொட்டியது தீவிர உடல் நல பிரச்சினைகளை ஏற்படுத்தும். மூச்சு விட சிரமம், வாந்தி மற்றும் பல பிரச்சினைகள் ஏற்படும். அதிக அழற்சி ஏற்பட்டால் ஆபத்து இன்னும் மோசமாக இருக்கும். எனவே இந்த மாதிரியான நிலையில் நீங்கள் தேன் கூட்டை கலைக்கும் தொழிலில் இருப்பவரை உடனடியாக அழைப்பது நல்லது.

சோப்பு மற்றும் தண்ணீர்

சோப்பு மற்றும் தண்ணீர்

தேன் கூட்டை கலைக்க மற்றொரு சிறந்த முறை சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு அதை அகற்றுவது. ஒரு பங்கு லிக்யூட் டிஷ் சோப்பு கலவையை எடுத்து தேன் கூட்டில் ஸ்ப்ரே செய்து விடுங்கள். இந்த முறையை பின்பற்றினால் எளிதாக அகற்றி விடலாம்.

ஏதுவான உடை

ஏதுவான உடை

தேன் கூட்டை அகற்றுவதில் ஈடுபடும் போது கண்டிப்பாக அதற்கான உடைகளை நீங்கள் அணிந்து கொள்ள வேண்டும். லேசான மங்கிய கலரில் மென்மையான துணியில் உடையை அணிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் தேனீக்கள் மிகவும் ஆக்ரோஷமாக உங்களை தாக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் உங்கள் உடை மிகவும் ஒல்லியாக இருக்க கூடாது. இது தேனீக்கள் உங்களை வசமாக கடிக்க ஏதுவாக அமைந்து விடும். கைக்கு கடினமான கையுறைகள் மற்றும் தலைக்கவசம் போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது. அதே நேரத்தில் நறுமணம் மிக்க பெர்மியூம், டிடர்ஜெண்ட் போன்றவற்றை தவிருங்கள். ஏனென்றால் பூக்களின் வாசனை என்று உங்களை அதிகமாக தாக்க நேரிடலாம்.

தேனீக்கள் நமது சுற்றுச்சூழல் சுழற்சிக்கு ஒரு ஆதாரமாக திகழ்கிறது. மேலும் மகரந்த சேர்க்கை நடைபெறவும் உதவுகிறது. எனவே முடிந்த வரை இதை அழிக்காமல் தேன் கூட்டை கலைக்க முற்படுங்கள். மேற்கூறிய டிப்ஸ்கள் கண்டிப்பாக உங்களுக்கு பயனளிக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

how to get rid of a honey bee and beehive

You can easily locate the beehive by inspecting the surroundings. If you see one or two bees in your home, then there is a high chance of having a beehive in your vicinity. It is important to find and destroy the beehive as early as possible. Gather the tools and try to relocate the bees rather than killing them.
Story first published: Thursday, June 21, 2018, 13:40 [IST]
Desktop Bottom Promotion