For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாய் அன்னாசிப்பழம் சாப்பிடுமா?... சாப்பிட்டா என்ன ஆகும்னு தெரியுமா?

நிச்சயமாக, உங்கள் நாய் அன்னாசி சாப்பிட முடியும். அது , அவைகளுக்கு ஒரு நல்ல சிற்றுண்டி. அன்னாசி நாய்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதில்லை மற்றும் நச்சு அல்லது ஆபத்தானதும் அல்ல. இருப்பினும், முதல் முறைய

|

உங்க செல்லக்குட்டி நாய்கள் அன்னாசிப்பழம் சாப்பிடுமா? கண்டுபிடிக்கலாம் வாங்க!!
உங்கள் நாய் சுவையை நேசிக்கும் என நினைத்து நீங்கள் அதற்கு அன்னாசிப்பழம் கொடுக்க நினைக்கலாம். எனினும், அதை நாய் எப்படி எடுத்துக் கொள்ளும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. எவ்வளவு அன்னாசிப்பழம் கொடுக்க வேண்டும், எப்பொழுது கொடுக்க வேண்டும் என்பது போன்ற பல கேள்விகள் உங்களுக்குள் வட்டமிடுவதை நங்கள் உணர்கிறோம்!.

home and garden

இந்தக் கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதில் கீழே உள்ள பத்திகளில் கொடுக்கப்பட்டுள்ளது, எனவே உங்கள் நாய் அன்னாசிப்பழத்தைச் சுவைக்க கீழே தொடரவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நாய்கள் அன்னாசிப்பழம் சாப்பிடுமா?

நாய்கள் அன்னாசிப்பழம் சாப்பிடுமா?

ஆமாம், நிச்சயமாக, உங்கள் நாய் அன்னாசி சாப்பிட முடியும். அது , அவைகளுக்கு ஒரு நல்ல சிற்றுண்டி. அன்னாசி நாய்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதில்லை மற்றும் நச்சு அல்லது ஆபத்தானதும் அல்ல. இருப்பினும், முதல் முறையாக உங்கள் நாய்க்கு அன்னாசிப்பழம் கொடுக்கும் போது எச்சரிக்கையாக இருக்கவும். பொதுவாக, அனைத்து நாய்களும் அதை வசதியாக எடுத்துக் கொள்கின்றன. எனினும், உங்கள் நாய்களில் வயிற்று வலி அல்லது வயிற்றுப்போக்கு அறிகுறியைக் காட்டினால், அன்னாசி அதற்கேற்ற உணவு இல்லை.

ஆரோக்கியமானதா?

ஆரோக்கியமானதா?

பழுத்த அன்னாசி அதிகப்படியான வைட்டமின் சி , த்யாமின், நியாசின், ரிபோப்லாவின், ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி 6 ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது மாங்கனீசு, பொட்டாசியம், இரும்பு, தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் ஆகியவற்றையும் பெருமளவில் கொண்டுள்ளது.

இவை அனைத்தும் மனித மற்றும் நாய்களுக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவாகின்றன. இவை நாய்களின் நோய் எதிர்ப்பு நிலைகள் மற்றும் செரிமான ஆரோக்கியத்தை அதிவேகமாக மேம்படுத்த முடியும்.

எனவே இது நாய்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கிறது, ஆனால் நாய்களுக்கு அன்னாசிப்பழம் கொடுக்கும் முன்பு நீங்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. பைனாப்பில், அதிக அளவு சர்க்கரை கொண்ட ஃபைபர் நிறைந்த உணவாகும். இது சிறிய அளவுகளில் கொடுக்கப்படும்பொழுது ஆரோக்கியமான சிகிச்சையாக இருக்கும் என்று அறிவுறுத்தப்படுகிறது.வரம்புக்கதிகமாக அன்னாசி சாப்பிட்டால் உங்கள் நாயின் செரிமான அமைப்பு மீது எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம்

எந்தப்பகுதியை நாய்க்கு கொடுக்க வேண்டும் ?

எந்தப்பகுதியை நாய்க்கு கொடுக்க வேண்டும் ?

நீங்கள் அன்னாசிப்பழம் சாப்பிடுவது போலவேதான். கோர் அல்லது வெளிப்புற பெரிய கூர்முனையுடன் அப்படியே சாப்பிட முடியாதென்பது மனிதர்களோடு நாய்களுக்கும் பொருந்தும். கோர் மற்றும் கூர்முனை போன்றவை நாய்க்கு உகந்ததல்ல . உங்கள் நாய் தவறாகத் தோல், மற்றும் அன்னாசியின் மையத்தை சாப்பிட்டால், அவை செரிமான பகுதியில் அடைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. அவற்றை நீக்க உங்கள் நாய்க்கு ஒரு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

எனவே, சிறிய துண்டுகளாக கொடுக்க வேண்டும். கோடை காலத்தில் பதப்படுத்தப்பட்ட அன்னாசிகள் கிடைக்கின்றன. எனவே எப்போதும் புதிய அன்னாசிப்பழத்தையே தேர்வு செய்யுங்கள். மிகவும் சர்க்கரை கொண்டிருக்கும் மற்றும் நாய்களுக்கு ஆரோக்கியமாக இல்லாத பதப்படுத்தி தகரப்பெட்டிகளில் அடைக்கப்பட்ட அன்னாசியை அறவே தவிர்க்கவும்.

பாதுகாப்பானதா?

பாதுகாப்பானதா?

ஆமாம், நிச்சயமாக, அன்னாசி உங்கள் நாய்களுக்கு பாதுகாப்பானதே.சிறிய அளவிலான ரா அன்னாசி நாய்களுக்கு ஒரு பெரிய சிற்றுண்டி. ஒரு சிற்றுண்டிக்கு தினமும் ஒரு சில துண்டுகளைக் கொடுங்கள். அன்னாசியை அறுத்து , உரித்து , துண்டுகளாக்கி கொடுக்க வேண்டும். தவறாகக் கூட முட்களை உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டாம் , அது உங்கள் நாயின் வயிற்றைப் பதம் பார்த்து விடும். மாற்றாக, நீங்கள் அன்னாசிப்பழத்திலிருந்து ருசியான உணவைக் கூட தயாரிக்கலாம் அல்லது கோடைகாலத்தில் அற்புதமானசுவை தரும் உலர் அன்னாசியையும் உருவாக்கலாம்.

கழிவு சாப்பிடுவதை நிறுத்துமா?

கழிவு சாப்பிடுவதை நிறுத்துமா?

சொந்தக் கழிவுகளை சாப்பிடுவதென்பது நாய்கள் மத்தியில் காணும் ஒரு பொதுவான பழக்கம் தான். நடத்தை மற்றும் உணவுப் பிரச்சினைகள் ஆகியவற்றிலிருந்து எழும் பொதுவான பிரச்சனை இது. இது காப்ரோப்பாகியா(தன் கழிவு உண்ணுதல்) என அழைக்கப்படுகிறது. இந்த நிலையில், நாய்கள் எந்தக் காரணமுமின்றி தங்கள் சொந்தக் கழிவைச் சாப்பிடுகின்றன. மேலும் அதே பழக்கத்தை தொடரவும் செய்யலாம். விஞ்ஞானிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் கூற்றுப்படி, நாய்கள் தங்கள் சொந்தக் கழிவைச் சாப்பிடும் பழக்கைத்தை எதாலும் நிறுத்த முடியாது.

அன்னாசிப்பழம் உண்ணும் நாயின் கழிவுகள் தரும் கெட்ட வடை அவற்றின் சொந்த மலம் உண்ணும் பழக்கத்தை குறைக்க வாய்ப்புள்ளது. இந்த விரும்பத்தகாத வாசனை உங்கள் நாயின் நடத்தையை நிறுத்தலாம் ஆனால் அது எப்போதும் உண்மை இல்லை. உங்கள் நாயின் உணவில் என்சைம் சப்ளிமெண்ட்ஸ் அல்லது ஃபைபர்ஸை சேர்ப்பதால் கூட நாய் தன்னுடைய கழிவைச் சாப்பிடக் கூடும், ஆனால் அதுவும் ஒரு சில நேரத்திற்கு மட்டுமே.

உங்கள் நாய் கழிவை வெளியேற்றிய பிறகு உடனடியாக உங்கள் நாயால் அதைக் கண்டுபிடிக்கமுடியாத இடத்தில் சேர்த்து விடுங்கள் என்பதே இந்தப் பழக்கத்தை மாற்ற நிபுணர்கள் கூறும் ஒரே வழி .உங்கள் நாயின் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க , நீங்கள் உங்கள் நாயின் மருத்துவரை ஆலோசிக்க முடியும்.

பைனாப்பிள் குக்கீ ட்ரீட்:

பைனாப்பிள் குக்கீ ட்ரீட்:

தேவையான பொருட்கள்:

• 1 1/2 கோப்பை அனைத்து விதமான பயன்பாடு மாவு

• 4 தேக்கரண்டி தரை ஆளி விதைகள்

• 13-15 சிறிய துண்டுகள் புதிய பழுத்த அன்னாசி

• 1/4 கப் தேங்காய் துருவல்

• 1 முட்டை

• 1/2 கப் உடைக்கப்பட்ட ஓட்ஸ்

செய்முறை :

• முதலில், அவனை 180 ° சி சூடுபடுத்தவும்.

• காகிதத் தாளில் குக்கீ தாளை வரிசைப்படுத்தவும்.

• இதைச் செய்தபின், ஒரு பெரிய கிண்ணத்தில் அன்னாசி மற்றும் முட்டை சேர்த்து நன்றாகக் கலக்கவும்

• தேங்காய், மாவு, நசுக்கப்பட்ட ஓட்ஸ் , மற்றும் தரை ஆளி விதைகளைச் சேர்க்கவும். இந்த அனைத்தையும் சேர்த்து மாவு வடிவில் வறும்படி நன்றாகப் பிசையவும்.

• பேக்கிங் தாள் மீது சிறிய கரண்டியால், குக்கீகள் ஒன்றோடொன்று ஒட்டக்கூடாதபடி 2 அங்குல இடைவெளியை விட்டு மாவை நிரப்புங்கள் .

• இதை 30 நிமிடங்கள் பேக்கிங் அவனில் சுடுங்கள்.

• பிறகு , அடுப்பில் இருந்து தட்டை நீக்கி, ஒரு மணி நேரத்திற்கு தயாரான குக்கீகளைக் குளிர்வியுங்கள்.

• நீங்கள் இந்த குக்கீகளை ஒரு காற்றுப்புகாத பைகள் அல்லது கொள்கலனில் சேமிப்பது நல்லது. பாக்கெட்களை குளிர்சாதனப் பெட்டியிலும் வைக்கலாம்.

பைனாப்பிள் மற்றும் வெல்லப்பாகு ட்ரீட்ஸ் :

பைனாப்பிள் மற்றும் வெல்லப்பாகு ட்ரீட்ஸ் :

தேவையான பொருட்கள்:

• 14-15 துண்டுகள் அன்னாசி

• 1/4 கப் ஆலிவ் எண்ணெய்

• 1/3 கப் கத்தரிக்காய்

• 1 முட்டை

• 1 டீஸ்பூன் வெண்ணிலா சாறு

• 2 கப் அனைத்து உபயோக மாவு

• 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்

• ¼ டீஸ்பூன் சமையல் சோடா

செய்முறை :

• அடுப்பை 350F Preheat செய்யவும். ஒரு பர்ச்மன்ட் காகித்தை வைத்து ஒரு தட்டைத் தயார் செய்யுங்கள்.

• ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்து அதில் மாவு, சமையல் சோடா, மற்றும் பேக்கிங் பவுடரைச் சேர்க்கவும்.

• ஒரு சிறிய கிண்ணத்தில் வெல்லப்பாகு, ஆலிவ் எண்ணெய் மற்றும் வெண்ணிலாச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

• சிறிய கிண்ணத்தில் அன்னாசியைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.

• இப்போது, ​​சிறிய மற்றும் பெரிய கிண்ணதிலுள்ள பொருட்களை ஒன்றாகக் கலக்கவும்.

• பேக்கிங் தாள் மீது இந்தக் கலவையை தேக்கரண்டியின் உதவி மூலம் நிரப்பவும்.

• 15-20 நிமிடங்கள் பேக்கிங் அவனில் சுடவும்.

• பிறகு அதை குளிர்வித்து , காற்றுப் புகாத ஜாடியில் சேமித்து வைக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can Dogs Eat Pineapple? Find It Out

Pineapple is a favorite fruit for many people. It is tart, sweet, and tangy, and its tropical origins put us in mind of warmer climates.
Desktop Bottom Promotion