For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க ஷூ நாத்தம் உங்களாலயே தாங்க முடியலையா?... என்ன பண்ண நாத்தம் போகும்...

ஷூ துர்நாற்றத்தால் பலரும் சங்கடமான நிலையை எதிர்கொள்வதை நம்மால் பார்க்க முடிகிறது. காலில் வியர்வை நீங்காமல் இருப்பதே பாக்டீரியா வளர்ச்சிக்கு காரணம்.

By Gayathri Kasi
|

ஷூ துர்நாற்றத்தால் பலரும் சங்கடமான நிலையை எதிர்கொள்வதை நம்மால் பார்க்க முடிகிறது. காலில் வியர்வை நீங்காமல் இருப்பதே பாக்டீரியா வளர்ச்சிக்கு காரணம். மோசமான விஷயம் என்னவென்றால், பொது இடங்களில் நம் ஆளுமையை பாதிக்க இது ஒரு காரணமாக அமைகிறது. எனினும் இது கவலைக்கொள்ளும் அளவிற்கு பெரும் பிரச்சன்னை இல்லை. துர்நாற்றத்தை அகற்ற இதோ சில எளிய வீட்டு வைத்தியம் உங்களுக்காக. ஷூ ஓடோர் / கால் துர்நாற்றத்தை அகற்ற இதோ 25 வீட்டு வைத்தியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா உங்கள் உடலின் வியர்வை சிந்தும் பகுதியின் pH நிலையை நடுநிலைப்படுத்த உதவுகிறது. மேலும் இது பாக்டீரியாவின் எழுச்சியையும் குறைக்கிறது. நீங்கள் செய்யவேண்டியவை , குவார்ட் அளவு வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து அதில் 10-15 நிமிடம் உங்கள் கால்களை ஊற விடவும். இதை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வரவும். மாறாக, உங்கள் காலணிகள் மற்றும் சாக்ஸ் ஆகியவற்றில் பேக்கிங் சோடாவை நீங்கள் தெளிக்கலாம். இது பாக்டீரியாவை எதிர்கொள்வதோடு, துர்நாற்றத்தையும் தடுக்கும். அல்லது, எட்டு கப் தண்ணீரை சூடாக்கி, அதனுடன் 1/4 கப் சமையல் சோடா, மற்றும் துளி எலுமிச்சை சாறு பிழிந்து உங்கள் கால்களை ஊற விடவும்.

பிறகு ஒரு மென்மையான துண்டு கொண்டு உங்கள் கால்களை துடைக்கவும்.

இல்லையெனில், பேக்கிங் சோடாவை உங்கள் பாதத்தில் தேய்த்து வர கால் துர்நாற்றம் குறையும்.

வினிகர்

வினிகர்

வினிகர் அசிடிக் தன்மை கொண்டதால், பாக்டீரியாவைக் கொல்ல உதவுகிறது.

1/2 கப் வினிகரை 8 கப் சுடு தண்ணீரில் சேர்க்கவும். பிறகு, 15 நிமிடங்களுக்கு உங்கள் கால்களை அதில் நனைத்தபடி வையுங்கள். பின்பு சோப்பு பயன்படுத்தி கால்களை கழுவவும்.

பிளாக் டீ பேக்

பிளாக் டீ பேக்

பிளாக் டீயில் டன்னிக் ஆசிட் இருப்பதால், அது பாக்டீரியாவைக் கொல்வதோடு, அது அதிகரித்து வருவதையும் தடுக்கிறது. 2 பாக் பிளாக் டீயை 3 கப் தண்ணீரில் கொதிக்கவைத்து அதை 1/2 பக்கெட் சாதாரண தண்ணீரில் கலந்து குறைந்த வெப்பநிலைக்கு கொண்டு வரவும். பிறகு, 15 நிமிடங்களுக்கு உங்கள் கால்களை அதில் நனைத்தபடி வையுங்கள். இதை ஒரு வாரத்துக்கு தினமும் செய்து வரவும்.

நீங்கள் பிளாக் டீ பாக்க்கு பதிலாக க்ரீன் டீ பாக்கையும் பயன்படுத்தலாம் .

டால்கம் பவுடர்

டால்கம் பவுடர்

டால்கம் பவுடர் உங்கள் பாதத்தின் துர்நாற்றத்தை அகற்றுவது மட்டுமல்லாம் நல்ல நறுமணத்தையும் தரும். சாக்ஸ் அணிவதற்கு முன்னர் உங்கள் பாதத்தில் கொஞ்சம் பவுடர் தடவுங்கள். நீங்கள் டால்கம் பவுடர்க்கு பதிலாக பேபி பவுடர் கூட பயன்படுத்தலாம்.

குறிப்பு: நல்ல நறுமணம் கொண்ட பவுடரை பயன்படுத்த வேண்டாம். ஏன்னெனில் அது ஷூ நாற்றத்தை அதிகப்படுத்தும்.

MOST READ: இந்த பவுடர் மட்டும் கொஞ்சம் தூவினா போதும்... இனி வீட்ல வடிகால் அடைப்பு பிரச்னையே வராது...

பும்மிஸ் ஸ்டோன் / படிகக்கல்

பும்மிஸ் ஸ்டோன் / படிகக்கல்

பும்மிஸ் ஸ்டோன் / படிகக்கல், ஸ்கின்னை கிளியர் செய்து டெட் செல்சை அகற்ற பயன்படும். தினமும் குளிக்கும் பொழுது இந்த கல்லைக் கொண்டு உங்கள் பாதத்தை தேய்த்து வரலாம். டெட் செல்சை அகற்றுவதன் மூலம் பாக்டீரியா அதிகரித்து வருவதை தடுக்கும்.

கிட்டி லிட்டர்

கிட்டி லிட்டர்

கிட்டி லிட்டர் ஷூ நாற்றத்தை போக்க உதவுகிறது. சாக்ஸ்சில் கிட்டி லிட்டரை வைத்து அதை ஷூவில் வைக்கவும். மறுநாள் கிட்டி லிட்டரை அகற்றி ஷூவை சுத்தம் செய்தபின் காலில் அணியவும்.

ரப்பிங் ஆல்கஹால்

ரப்பிங் ஆல்கஹால்

ரப்பிங் ஆல்கஹால், கால் துர்நாற்றத்தை போக்க ஒரு சிறந்த வீட்டு வைத்தியம். இது துர்நாற்றத்தை நீக்குவது மட்டுமல்லாமல், ஒரு கிருமியாகவும் செயல்பட்டு பாக்டீரியாவை அழிக்கும். ஸ்பிரே பாடெல்லில் தண்ணீர் மற்றும் ரப்பிங் ஆல்கஹால் சேர்த்து அதை ஷூவில் தெளிக்கவும். இதை தினமும் செய்து வர பாக்டீரியாவின் வளர்ச்சி குறையும். உங்கள் ஷூ கழுவக்கூடியதாக இருந்தால் நீங்கள் இந்த ஸ்பிரே கொண்டு கழுவலாம்.

குறிப்பு: உங்களது ஷூ லெதர் என்றல், நீங்கள் ஸ்பிரே செய்யும்போது வெளிப்பகுதியில் படாதவாறு ஸ்பிரே செய்யவும்.

 எப்சம் சால்ட்

எப்சம் சால்ட்

துர்நாற்றத்தை போக்க எப்சம் சால்ட் ஒரு பயனுள்ள தீர்வாக அமையும். எப்சம் சால்ட் மைக்ரோபையல் இன்பக்ஷனை எதிர்த்துப் போராடுவதோடு கால் துர்நாற்றத்தையும் அகற்றும். ஒரு பக்கெட் சூடான நீரில் 2 டீஸ்பூன் சேர்த்து 10-15 நிமிடம் உங்கள் கால்களை அதில் நனைத்தபடி வையுங்கள்.

குறிப்பு: படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக இதை செய்தால், காலில் உண்டாகும் துர்நாற்றம் உங்களுக்கு முன்பாகவே எழுந்து வெளியில் சென்றுவிடும்.

கிராம்பு

கிராம்பு

கிராம்பை உங்கள் ஷூவினில் வைக்க அது துர்நாற்றத்தை நீக்கும். அல்லது நீங்கள் துளி கிராம்பு எண்ணெயை உங்கள் ஷூவில் ஊற்றி வரலாம். அப்படி கிராம்ப எண்ணெய் வீட்டில் இல்லையென்றால் கவலைப்படாதீர்கள். ஒரு அரை கப் வெந்நீரில் இரண்டு ஸ்பூன் சோம்பை போட்டு நன்கு காய்ச்சி, சுண்டியபின் எடுத்து காட்டன் அல்லது ஷூ பாலிஷ் பிரஷ்ஷில் எடுத்து நன்கு ஷூவை துடைக்கவும்.

படிகாரம்

படிகாரம்

படிகாரத்தில் ஆன்டிசெப்டிக் மற்றும் ஆஸ்ட்ரிஜெண்ட் பண்பு இருப்பதால் அது பாக்டீரியா அதிகரிப்பதை தடுக்கும். 1 கப் வெதுவெதுப்பான நீரில் டீஸ்பூன் படிகாரம் சேர்த்து அதை கொண்டு உங்கள் பாதத்தை கழுவவேண்டும். 10-15 நிமிடம் கழித்து பாதத்தை உலர வைத்து கொஞ்சம் படிகாரத்தை பாதத்தின் மேல் தெளிக்க வேண்டும். தினமும் ஒரு முறை இவ்வாறு செய்யவும்.

MOST READ: குழந்தைகள் கருவறையில் அழுக காரணம் என்ன? இப்படி அழுவது நல்லதா?

போராக்ஸ்

போராக்ஸ்

போராக்ஸ் துர்நாற்றத்தை அகற்ற இது ஒரு நல்ல வழி. 1/2 கப் மற்றும் வினிகரை 2 கப் நீரில் சேர்த்து அதை உங்கள் ஷூ வின் உள் பகுதியில் ஸ்பிரே செய்யவும். அல்லது, போராக்ஸ் பவுடரை தெளித்து சில மணிநேரம் அப்படியே விட்டு வைக்க வேண்டும்.

சர்க்கரை ஸ்க்ரப்

சர்க்கரை ஸ்க்ரப்

சுத்தமான தண்ணீரில் சர்க்கரை மற்றும் 90 சதவீதத்துக்கும் மேல் ரப்பிங் ஆல்கஹால் சேர்க்க வேண்டும். சர்க்கரை அளவு தண்ணீர் அளவை விட அதிகமாக இருக்க வேண்டும். ஒரே ஒரு பகுதி ஆல்கஹால் ஐந்து பகுதி தண்ணீரில் சேர்க்கப்பட வேண்டும். 10 - 15 நிமிடம் இதை கொண்டு உங்கள் பாதத்தை ஸ்க்ரப் செய்யவும். இதை வாரத்திற்கு மூன்று முறை செய்து வரவும்.

இஞ்சி

இஞ்சி

இஞ்சி பாக்டீரியா வளர்ச்சியை தடுத்து டாக்ஸினை அகற்றும். மீடியமான அளவு இஞ்சு எடுத்து அதிலிருந்து சாறு எடுத்து அதை ஒரு கப் சூடு தண்ணீரில் சேர்த்து 10-15 நிமிடம் கழித்து அதை வடிகட்டி உங்கள் கால்களில் மசாஜ் செய்யவும். இதை இரண்டு வாரத்துக்கு தினமும் மூன்று முறை செய்யவும்.

குறிப்பு : தினமும் தூங்கும் முன்பு செய்யவும்

சோளமாவு

சோளமாவு

சோளமாவு வியர்வையை உறிஞ்சும் தன்மையுடையது. உங்கள் காலில் சோளமாவு பவுடர் தடவலாம் அல்லது உங்கள் காலணிகளுக்குள் சிறிதளவு சோளமாவை தெளித்து வரவும். இது வியர்வை தடுத்து துர்நாற்றத்தை நீக்கும்.

லெமன் டீபாக்ஸ்

லெமன் டீபாக்ஸ்

லெமன் துர்நாற்றத்தை சுத்தப்படுத்தவும், நாற்றத்தைப் போக்கவும். 3 டீ பேகை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைத்து பிறகு உங்கள் பாதத்தை 15 நிமிடம் அதில் ஊறவைத்து சிறுது நேரம் கழித்து கழுவவும். பின்பு மாய்ஸ்சரைஸரைக் கொண்டு மெதுவாக மசாஜ் செய்யவும். பின்பு, தூங்கும் முன் காலில் சாக்ஸ் அணிந்து கொள்ளவும்.

MOST READ: உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

7-8 கப் வெதுவெதுப்பான நீரில் 1/2 கப் ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து, பத்து நிமிடங்களுக்கு உங்கள் பாதத்தை ஊறவிடவும். பின்பு , சூடான நீரில் உங்கள் கால்களை கழுவுங்கள். கால்கள் உலர்ந்ததும் டால்கம் பவுடர் போட்டு சாக்ஸ் அணியவும்.

ஓட் மீல்

ஓட் மீல்

ஓட்மீல் ஒரு பெரிய எஸ்போலியட்டிங் ஏஜென்ட். ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து 10 நிமிடம் உங்கள் கால்களை ஸ்க்ரப் செய்யவும். பிறகு, வெதுவெதுப்பான நீரில் கால்களைக் கழுவிவிட்டு ஒரு மென்மையான துண்டைப் பயன்படுத்தி உங்கள் கால்களை சுத்தம் செய்யவும். இதை வாரத்திற்கு 4-5 முறை செய்து வரவும். இவ்வாறு செய்து வர பாக்டீரியா வளர்ச்சி குறைய ஆரம்பிக்கும்.

ஓட்கா

ஓட்கா

ஓட்கா பாக்டீரியாவைக் கொல்ல உதவுகிறது. இதன் நன்மை, அது உலர்ந்த பிறகு அது மனமற்றுப்போகும். இதை நீங்கள் தண்ணீரில் கலந்தோ அல்லது நேரடியாகவோ உங்கள் ஷூவில் அப்ளை பண்ணலாம். இவ்வாறு செய்ய இது உங்கள் ஷூவை புதியதாக காண்பிக்கும். மேலும், பாத நோய்களை ஏதாவது இருந்தாலும் ஓட்கா அதை குணப்படுத்தும்.

முள்ளங்கி

முள்ளங்கி

முள்ளங்கி, உங்கள் கால்களை சுத்தம் செய்து கால் துர்நாற்றத்தை குறைக்கிறது. இதில் சின்க் பாஸ்போர்ஸ் வைட்டமின் B, C போன்ற நிறைய சத்துக்கள் உள்ளது. முள்ளங்கியை அரைத்து சாறு எடுத்து அதில் சூடான தண்ணீர் சேர்த்து அதை ஓர் பேஷனில் போட்டு கால்களை 20 நிமிடம் நனைத்தவாறு வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்து வர துர்நாற்றம் நீங்கும். மாறாக துர்நாற்றம் ஏற்படும் போது 12 முள்ளங்கி கொண்டு அரைத்து எடுத்த சாறில் 1/4 டீஸ்பூன் கிளிசரின் சேர்த்து அதை உங்கள் ஷூவில் ஸ்பிரே செய்யவும்.

சாதாரண உப்பு

சாதாரண உப்பு

உப்பு நீரை உங்கள் காலில் அதிகப்படியான வியர்வையை தடுக்கிறது. இது பாக்டீரியாவின் பிரதான உணவான டெட் ஸ்கின்னை நீக்குகிறது. ஒரு டப்பில் சூடான நீர் மற்றும் கப் உப்பு சேர்த்து உங்கள் பாதத்தை 20 நிமிடம் ஊறவிடவும். அதன்பின், பாதத்தை துடைத்துக் கொள்ளலாம்.

கோஷர் உப்பு

கோஷர் உப்பு

கோஷர் உப்பு உங்கள் ஸ்கின்னை ட்ரய் செய்து அதிகப்படியான ஈரப்பதம் குறைகிறது. ஒரு லிட்டர் சூடான தண்ணீரில் 1/2 கப் சேர்த்து உங்கள் கால்களை அதில் ஊறவைக்கவும். உங்கள் கால்களை ரின்ஸ் செய்யாமல் உலர விடவும்.

MOST READ: முருங்கைக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்படுகிறது தெரியுமா?

எசன்ஷியல் ஆயில்

எசன்ஷியல் ஆயில்

அத்தியாவசிய எண்ணெய்கள் கால் மற்றும் காலணியில் இருந்து துர்நாற்றத்தை நீக்க பொருத்தமானது. உங்களுக்கு விருப்பமான எண்ணெய் எடுத்து அதை உங்கள் காலணியில் தடவி இரவு முழுவதும் வைத்தால் துர்நாற்றம் நீங்கும். மாறாக நீங்கள் அத்தியாவசிய எண்ணெய்களில் உங்கள் கால்களை ஊறவைக்கலாம். -8 ட்ரோப் லாவெண்டர் ஆயில் மற்றும் டீ ஆயிலை 1/2 பக்கெட் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து உங்கள் பாதத்தை 20 நிமிடம் நனைத்தவாறு வையுங்கள். இதை தினமும் இதை தொடர்ந்து செய்து வர துர்நாற்றம் நீங்கும்.

ரோஸ்மேரி

ரோஸ்மேரி

ரோஸ்மேரி பாக்டீரியா அதிகரித்து வருவதை தடுக்கிறது. இது ஆஸ்ட்ரிஜெண்ட் ஆக செயல்படும். இதனால், அதிகமான வியர்வை உற்பத்தியை அது தடுக்கிறது. ஒரு பேஷனில் கொதிக்கும் நீரை ஊற்றி அதில் ஒரு டீஸ்பூன் காய்ந்த ரோஸ்மேரி மற்றும் காய்ந்த சேஜ் லீவிஸ் சேர்க்கவும். தண்ணீர் குளிர்ந்த பிறகு உங்கள் கால்களை அரை மணிநேரம் அதில் ஊறவைக்கவும். இதனை ஒன்று அல்லது இரண்டு முறை செய்யவும்.

சேஜ்

சேஜ்

சேஜ் லீவிஸ் வியர்வையினால் ஏற்படும் துர்நாற்றத்தை குறைக்கும். நீங்கள் சேஜ் லீவிஸை ஷூவில் போட்டு வர அது துர்நாற்றத்தை நீக்கும். மேலும் நீங்கள் உங்கள் கால்களை சேஜ் டீயில் ஊறவைக்கலாம்.

தேயிலை எண்ணெய்

தேயிலை எண்ணெய்

இது பூஞ்சை தொற்றுக்கள் மூலம் வரும் துர்நாற்றத்தை தடுக்கும். ஒரு பேஷனில் சூடான தண்ணீர் ஊற்றி அதில் உங்கள் பாதத்தை 10-20 நிமிடம் ஊற வைக்கவும். மென்மையான கெமிக்கல் கலக்காத ஹெர்புல் சோப்பு கொண்டு பாதத்தை கழுவவும். 6 டிராப் தேயிலை எண்ணெயில் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து அதை உங்கள் கால் விரல்களுக்கு இடையில் மெதுவாகத் தேய்க்கவும். சிறிது நேர கழித்து சூடான தண்ணீர் கொண்டு கால்களை கழுவ வேண்டும். இதை தினமும் மூன்று முறை செய்யவும்.

குறிப்பு: உங்கள் தோல் மீது நேரடியாக தேயிலை எண்ணெய்யை பயன்படுத்த வேண்டாம்.

செய்யவேண்டியவை

செய்யவேண்டியவை

எப்போதும் சுத்தமான சாக்ஸ் அணிய வேண்டும்.

காலணிகளை அணிவதற்கு முன்பும் நீக்கியதற்கு பின்பும் நன்கு கால்களை கழுவவேண்டும்.

காலணிக்குள் ட்ராய் ஷீட் வைக்கவும்.

பிளாஸ்டிக் பையில் ஷூவை போட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுக்கலாம். அதிகப்படியான குளிரானது பாக்டீரியாவைக் கொன்றுவிடும்.

ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு ஷூவில் செய்தித்தாள்களை வைக்கவும்.

ஆப்பிள், கீரை, பால் பொருட்கள், பூசணி, பீன்ஸ், காளான் போன்ற உணவை அதிகமாக சாப்பிட்டாலும் கால்களில் உண்டாகும் துர்நாற்றம் குறையும்.

சூரிய ஒளியில் உங்கள் காலணிகளை வைக்கவும்.

டெட் ஸ்கின்னை அகற்ற அவ்வப்போது உங்கள் பாதத்தை கழுவி வரவும்.

செய்யக்கூடாதவை

செய்யக்கூடாதவை

தினமும் ஒரே ஷூவை அணிய வேண்டாம்.

எப்போதும் மூடிய காலணி அணிந்து கொள்ள வேண்டாம்.

மது அருந்துவதை தவிர்க்கவும்.

மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை தவிர்க்கவும்.

சிந்தெடிக் மெட்டீரியல் கொண்டு செய்யப்பட்ட சாக்ஸ் அணிவதை தவிர்க்கவும்.

வெங்காயம், பூண்டு, மிளகு, போன்ற வலுவான ருசியுடைய உணவை தவிர்க்கவும்.

MOST READ: உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

25 Effective Home Remedies for Shoe Odor

Stinky feet or bromhidrosis is a really embarrassing situation for the ones who have it. The main cause of foot odor is the bacterial growth due to unevaporated sweat.
Desktop Bottom Promotion