For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எவ்வளவு துணி இருந்தாலும் பத்தே நிமிசத்துல டக்குனு துவைச்சு முடிக்கணுமா?... இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்

வீட்டில் துணி துவைப்பது என்பது பலருக்கும் மிக சிரமமான வேலையாக தான் தோன்றும். ஒரு பெரிய குடும்பத்தில் துணி துவைத்து முடிக்கவே நீண்ட நேரமாகும்.

By Vathimathi S
|

வீட்டில் துணி துவைப்பது என்பது பலருக்கும் மிக சிரமமான வேலையாக தான் தோன்றும். ஒரு பெரிய குடும்பத்தில் துணி துவைத்து முடிக்கவே நீண்ட நேரமாகும். இதற்கு உதவும் வகையில் இங்கே சில ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்களது வீட்டில் சேரும் அழுக்கு துணிகளை விரைந்து துவைத்து அழுக்கு கூடையை காலி செய்துவிடலாம்.

home tips

ஆடைகளின் நிறம் மங்காமலும், துணி வெளுக்காமலும், வெள்ளை நிறம் பழுப்பாகாமல் தடுப்பதோடு, உங்களது பணத்தை மிச்சப்படுத்தக் கூடிய ஆலோசனைகளும் இதில் இடம்பெற்றுள்ளது. கறை நீக்க வல்லுனர்களின் ஆலோசனையும், பொதுவான ஆலோசனையும் அதிகளவில் இடம்பெற்றுள்ளது. துணி துவைத்தலுக்கு அடிமையாக இருக்க வேண்டும். அதை உங்களது கட்டுப்பாட்டில் எடுத்து இங்கே கொ டுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பற்றவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. கிரீஸ் கறை

1. கிரீஸ் கறை

கிரீஸ் உணவு வகைகள் எப்படி இருக்கும் என்பது நமக்கு நன்றாக தெரியும். இதன் மூலம் ஏற்படும் எண்ணெய் கறைகளை நீக்க சுண்ணாம்பு உதவி செய்கிறது. வெள்ளை சுண்ணாம்பை ஆடையில் படி ந்துள்ள எண்ணெய் கறையின் மீது தேய்த்து சில நிமிடங்கள் காயவிட வேண்டும். சுண்ணாம்பை எண்ணெய் கறை உறிஞ்சிய பின்னர் அந்த இடத்தில் பிரஷ் செய்து பின்னர் வழக்கம் போல் துவைக்கவும்.

2. மழையில் நனைந்த ஷூ

2. மழையில் நனைந்த ஷூ

மழை நீரில் நனைந்த ஷூவை செய்திதாளை கொண்டு ஒத்தி எடுத்தால் அதில் உள்ள ஈரப்பதம் நீங்கிவி டும். ஷூவை சில பேப்பர்களில் சுற்றி இரவு முழுவதும் வைத்துவிட வேண்டும். மறுநாள் காலை ஷூ அணிவதற்கு தயார் நிலையில் இருக்கும்.

3. இனிப்பு கறைகள்

3. இனிப்பு கறைகள்

இனிப்பு சாப்பிடும் போது சட்டை உள்ளிட்ட ஆடைகளில் அது ஒட்டிக் கொள்வது இயற்கை. இதில் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை. இனிப்பு கறைகள் ஆடைகளில் படிந்துவிட்டால் பலரும் கவலை அடை ந்துவிடுவார்கள். இதை நீக்க எளிதான வழி உள்ளது. 4 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்து கால் கப் வெண்ணீரில் கலக்க வேண்டும். பின்னர் அந்த கலவையை கறையின் மீது தேய்க்கவும். ஒரு மணி நேரம் வரை அதை ஊறவிட வேண்டும். பின்னர் ஆடையை எடுத்து துவைத்து பார்த்தால் கறை மாயமாகியிரு க்கும்.

4. ஆடைகள் வேகமாக காய

4. ஆடைகள் வேகமாக காய

ஒரு குறிப்பிட்ட ஆடையை அணிந்து செல்ல முடிவு செய்துவிடுவோம். வீட்டிற்கு வந்து பார்க்கும் போது தான் அந்த ஆடை ஈரமாகவோ அல்லது அழுக்காகவோ இருக்கும். இந்த அனுபவம் நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். பெரும்பாலான வாஷிங் மெஷின்களில் ‘குயிக் வாஷ்' முறை இருக்கும். ஆனால், ஈரத்தை காயவைக்க என்ன வழி?. குறிப்பிட்ட அந்த ஆடையை ஒரு துண்டில் சுற்றி போடுங்கள். 15 நிமிடங்கள் பின்னர் அதை அவிழ்த்து பார்த்தால் குறிப்பிட்ட அளவு நீரை அந்த துண்டு உறிஞ்சி எடுத்திருக்கும். இதன் பின்னர் அந்த ஆடையை விரைந்து காயவைத்துவிடலாம்.

5. நெயில்பாலிஷ் ரிமூவர்

5. நெயில்பாலிஷ் ரிமூவர்

பயிற்சி காலணிகளை அணிந்து வெளியில் சென்று திரும்பி வந்தவுடன் அதில் ஏதேனும் கறை ஒட்டியிரு க்கும். இதை கண்டு கவலை அடைய வேண்டாம். ரப்பர் அடிப்பகுதியை கொண்ட அந்த காலணியில் ஏற்படும் அழுத்தமான கறைகள் என்பது நக வார்னிஷோடு ஒப்பிட முடியாது. செய்திதாளில் உங்களது ஷூவை வைக்கவும். பின்னர் சிறிய பருத்தி கம்பளி உருண்டையை கொண்டு கறையை துடைக்கவும். அரை மணி நேரம் வரை அதில் ஊறவிட்டுவிட்டு பின்னர் மீண்டும துடைத்தால் கறை காணாமல் போய்விடும்.

6. கறைகளை நிரந்தரமாக நீக்க

6. கறைகளை நிரந்தரமாக நீக்க

உடனடியாக ஸ்டெய்ன் ரிமூவர் தான் நமது நினைவுக்கு வரும். இதன் ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டுமா?. சூரிய ஒளி. கறை படிந்த ஆடைகளை சூரிய ஒளியில் படும் வகையில் தொங்க விட வேண்டும். இந்த ஒளி கறையை அகற்றி ஆடைகளையும் பளிச்சிட செய்யும் அதிசயத்தை உங்களால் பார்க்க முடியும். இது இலவசமாக கிடைக்ககூடியது. அதோடு சிரமப்பட வேண்டிய அவசியமும் இல்லை.

7. வேகமாக இஸ்திரி செய்ய

7. வேகமாக இஸ்திரி செய்ய

ஸ்திரிக்கு வரும் வரை 100 சதவீத பருத்தி ஆடை என்பது அற்புதமான விஷயமாகும். பருத்தி மேல் ஆடை, துண்டு, விரிப்பான் போன்றவற்றை சற்று ஈரப்பதத்துடன் இருக்கும் போது ஸ்திரி செய்ய வேண்டும். அல்லது அவை ஏற்கனவே காய்ந்துவிட்டது என்றால் சிறிது தண்ணீரை தெளித்து ஸ்திரி செய்யவும். தண்ணீரும், சூ டும் சேர்ந்து ஆவியை உண்டாக்கும். இதனால் துல்லியமான சுருக்கம் இல்லாத ஆடைகளை ஒரு சில விநாடிகளில் பெற்றுவிடலாம்.

8. வாஷிங் மெஷின்

8. வாஷிங் மெஷின்

கேன்வாஸ் போன்ற காலணிகளை வாஷிங்மெஷினில் கழுவுவது தான் சிறந்த வழி. 20 டிகிரி அளவில் சாதாரண சோப்பு பயன்படுத்தி கேன்வாஸ் மற்றும் நையிலான் ஷூக்களை கழுவ வேண்டும். அதோடு ஷூவின் லேஸை மெஷின் கதவில் கட்டிவிட்டு வாஷிங் மெஷினை இயக்கினால் ஷூ அசையாமல் ஒரே இடத்தில் நின்று கழுவ வசதியாக இருக்கும்.

9. வினீகர்

9. வினீகர்

வேர்வையுடன் அழுக்கு ஆடைகளை சேகரித்து வைப்பதால் ஒரு விதமான துர்நாற்றம் வீச தொடங்கும். இதை தவிர்க்க துணி துவைக்கும் போது வினீகரை சேர்த்தால் துர்நாற்றத்தை தவிர்த்து ஆடைகள் புத்துணர்ச்சியுடன் இருப்பதை பார்க்க முடியும்.

10. பிரா

10. பிரா

மற்றொரு முக்கிய ஆலோசனையாக நீங்கள் துவைத்த பின்னர் காயவைக்கும் போது பேன்ட் மற்றும் பிராவை சுற்றி போட்டால் பேன்டில் உள்ள தண்ணீர் விரைந்து உறிஞ்சப்படும். இது காயவைக்கும் செயல்பாட்டை விரைந்து முடித்து கொடுக்கும். இது டிம்பிள் டிரையரை விட சிறந்ததாகும்.

11. ஸ்திரி போடுதல்

11. ஸ்திரி போடுதல்

ஸ்திரி போடாதவர்களுக்கு இந்த பிரச்னை இல்லை. இது போன்ற பிரச்னையை தீர்வு செய்ய ஒரு எளிய வழி சலவை ஆலோசனையில் இடம்பெற்றுள்ளது. இதற்கு அதிக முயற்சி எடுக்க தேவையில்லை. சலவை செய்த ஆடைகளை நேராக காயப்போடுவதன் மூலம் அதில் உள்ள சுருக்கம் நீங்கிவிடும். அனைத்து ஆடைகளையும் ஸ்திரி செய்ய வேண்டும் என்று யார் சொன்னது?. அவர்களிடம் இந்த வழிமுறையை கூறுங்கள்.

12. ரெட் ஒயின்

12. ரெட் ஒயின்

அனைத்து கொண்டாட்டம், விளையாட்டுகளில் நிச்சயம் சிகப்பு ஒயின் இடம்பெறும். அது உங்கள் ஆடையில் விழும் வரை அது மகிழ்ச்சிக்குறியது தான். அதனால் ஒயின் கறை ஏற்பட்டவுடன் கவலை அடைய இனி தேவையில்லை. அதற்கும் ஆலோசனை உள்ளது. இதற்கு பால் மூலம் தீர்வு உண்டு.

சுத்தமான பேப்பர் மூலம் ஒயின் கறையை உறிஞ்சி எடுக்கவும். பின்னர் அந்த பகுதியில் பால் ஊற்றவும். அதிகளவு கரை இருந்தால் அந்த பகுதியை ஒரு கின்னத்தில் பால் ஊற்றி ஊறவைக்கலாம். ஒரு மணி வரை ஊறவைக்க வேண்டும். பின்னர் வழக்கம் போது துவைத்துவிட வேண்டும். ஒயின் கறை இருக்கவே இருக்காது.

13. டிரையர்

13. டிரையர்

ஒவ்வொரு முறை துவைக்கும் போதும் நீங்கள் டிரையர் ஷீட் பயன்படுத்தினால் அது அதிகப்படியான செலவை ஏற்படுத்தும். செலவு இல்லாமல் அதே பலனை அனுபவிக்க ஒரு வழி இருக்கிறது. துவைக்கும் போது அதோடு அலுமினிய பேப்பரை உருளையாக சுருட்டி போட்டு துவைத்தால் டிரையர் ஷீட் மூலம் கிடைக்கும் பலன் செலவின்றி கிடைக்கும்.

14. ஐஸ்கட்டி

14. ஐஸ்கட்டி

இது ஒரு வித்தியாசமான ஆலோசனை தான். இதை பயன்படுத்தி சுத்தம் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்பது உறுதி. லினன் ஆடைகள் மற்றும் 100 சதவீத பருத்தி ஆடைகளை ஸ்திரி செய்வது என்பது கடினம் தான். இதை எளிமையாக்க வேண்டும் என்றால் டிரையரில் சில ஐஸ் டியூப்களை போட்டு பயன்படுத்தவும். இது ஆடைகளில் உள்ள சுருக்கத்தை நீக்கி உங்களது சலவையை எளிமையாக்கிவிடும்.

15. பைகார்ப்

15. பைகார்ப்

பைகார்ப் மூலம் வெண்மையான வெள்ளை மற்றும் பிரகாசமான ஆடைகள் பெறுதல். இயற்கையான முறையில் சுத்தம் செய்வது நிச்சயம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆடைகளை சலவை செய்யும் போது அதில் அரை கப் பைகார்போனேட் சோடா சேர்த்து கொள்ள வேண் டும். அவ்வாறு சேர்த்தால் வெள்ளை ஆடைகள் வெண்மையாகவும், பளிச்சிடும் பிரகாசமான ஆடைகளையும் பெற முடியும். இதற்கு முன்பு உங்களது ஆடைகளை இவ்வளவு பளபளப்பாக பார்த்திருக்க மாட்டீர்கள்.

16. உப்பு

16. உப்பு

துணிகளில் சாயம் போவது என்பது பெரிய பிரச்னையாக தான் இருக்கும். இதை தடுத்து ஆடைகளின் நிறத்தை பாதுகாக்க ஒரு டீ ஸ்பூன் உப்பு கலந்து சலவை செய்யவும். இதில் உள்ள க்ளோரைடு ஆடைகளின் நிறத்தை தக்கவைப்பதோடு மென்மையாகவும், பிரகாசமாகவும் வைத்திருக்கும்.

17. இங்க் கறை

17. இங்க் கறை

ஹேர்ஸ்ப்ரே மூலம் பலவிதமான பயன்கள் உள்ளது. இதில் ஒரு பயனை மட்டும் இங்கே அறிந்து கொள்வோம். ஆடைகளின் உள்ள இங்க் கறையை ஹேர் ஸ்ப்ரே மூலம் எப்படி நீக்குவது என்று பார்ப்போம். முதலில் உங்களது ஹேர்ஸ்ப்ரேயில் அதிக ஆல்கஹால் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். விலை மலிவானதே இதற்கு போதுமானது. ஆல்கஹால் அதிகம் இல்லை என்றால் சேனிடைஸர் ஜெல்லை கறை உள்ள இடத்தில் ஊற்றி தேய்க்கவும், 10 நிமிடம் கழித்து அந்த ஆடையை சலவை செய்யுங்கள். ஆச்சர்யப்படக்கூடிய முடிவை நீங்கள் பார்க்கலாம்.

18. பேபி பவுடர்

18. பேபி பவுடர்

ஆடைகளில் உள்ள கிரீஸ் கறைகளை நீக்க மற்றொரு எளிமையான வழிமுறை இருக்கிறது. சுண்ணாம்பை போல பேபி பவுடரை கிரீஸ் கறை உள்ள இடத்தில் கொட்ட வேண்டும். கிரீஸ் முழுவதும் பவுடரை உறிஞ்சும் வரை கொட்ட வேண்டும். பின்னர் பிரஷ் செய்து வழக்கம் போல் சலவை செய்தால் கறைகள் இல்லாததை காணமுடியும்.

19. அடர் நிறம்

19. அடர் நிறம்

கடைசி ஆலோசனையை£க இருந்தாலும் மிக முக்கிய ஆலோசனையாகும். கருப்பு மற்றும் அடர் ப்ளூ நிற ஆடைகளை துவைக்கும் போது நாம் அன்றாடம் விரும்பி குடிக்கும் காபியை ஒரு கப் கலந்து துவைத்தால் கருப்பு ஆடைகள், அடர் நிற ஆடைகளுக்கு மேலும் நிறம் கூடி ஜொலிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

19 NEW laundry tips you don't want to miss!

Washing clothes can be incredibly time-consuming, especially if you have a big family.
Story first published: Saturday, May 5, 2018, 15:39 [IST]
Desktop Bottom Promotion