For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதுசா சமையல் செய்ய ஆரம்பிச்சிருக்கீங்களா? இதோ நீங்க கவனிக்க வேண்டியவை!!

புதிதாக சமையல் செய்யும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்று இந்த கட்டுரையில் காணலாம்.

By Ambika Saravanan
|

சமையலறையில் நேரத்தை செலவு செய்வது அடிப்படை உணவையும் சிற்றுண்டியையும் சமைக்க கற்றுக் கொள்வதற்கான நல்ல வழி. குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் சமைக்க உதவுவதற்கு நீங்கள் நேரம் செலவிட்டால், நீங்கள் வாழ்க்கையில் பிற்பாடு சமையல் நடவடிக்கைகளில் நிச்சயம் ஈடுபட்டிருப்பீர்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உதவும் ஒரு திறமை சமையல்.

அடிப்படை அறிவு :

பொருட்கள் பெயரை தெரிந்து கொள்ளுதல், பொருட்களை அளவிடுதல், மூலப்பொருட்களின் மாற்றங்களை செய்தல், ஒழுங்காக அடுப்பு மற்றும் ஓவென் போன்றவற்றை பயன்படுத்துவது. சமையல் பற்றி படித்து கற்று கொள்ளுதல். ஒவ்வாமை அல்லது உணவு விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் சமையலில் மாற்றங்கள் செய்தல் போன்றவற்றை நீங்கள் தெரிந்து கொள்வது புத்திசாலித்தனம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சமைக்க கற்றுக் கொள்ளுதல்

சமைக்க கற்றுக் கொள்ளுதல்

பல இளம் வயதினர் தங்கள் பெற்றோரை அல்லது பிற குடும்ப உறுப்பினர்களைக் கவனிப்பதன் மூலம் சமையலறையில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

சமைப்பதில் ஈடுபடுவது உங்கள் சுவைக்கு ஏற்ற உணவை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதை அறிய ஒரு நல்ல வழி. அடிப்படை உணவுகள், இனிப்பு வகைகள் மற்றும் தின்பண்டங்கள் எப்படி சமைக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்வது ஒரு கல்லூரி தங்குமிடம் அல்லது உங்கள் முதல் குடியிருப்பைப் பெற உங்களை தயார் செய்யும்.

எப்படி சமைக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும் என்பதால் மனதளவில் நீங்கள் மேலும் சுதந்திரமாக இருப்பீர்கள்.

வெளியிடங்களில் விற்கும் உணவுகளால் ஏற்படும் வயிறு பிரச்சனைகளில் இருந்தும் உங்களுக்கு விடுதலை கிடைக்கும். உங்கள் நண்பர்களுக்கும் ஒரு மிக சிறந்த உணவை உங்களால் படைக்க முடியும்.

சிறுவர்களின் சமையல் வேலைகள்:

சிறுவர்களின் சமையல் வேலைகள்:

சில பதின் பருவத்தினர் தம் இளம் வயதிலேயே சமைக்க ஆரம்பித்திருப்பர். அம்மாவிற்காக குழம்பு கிளறுவதோ, பால் காய்ச்சுவது போன்ற விஷயங்கள் செய்திருந்தாலோ நீங்கள் ஒரு குறைந்த பட்ச குக் என்று கூறி கொள்ளலாம். சிறு வயதில் எந்தளவுக்கு நீங்கள் சமயலறையில் இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் வளர்ந்தவுடன் சமையலில் ஆர்வம் இருக்கும்.

பதின் பருவத்தில் சமையல் கற்க விரும்புவோர் முதலில் எளிதான சமையல் குறிப்புகளை செய்து பார்க்க வேண்டும். எளிய பொருட்களை கொண்டு சமையல் பழகிய பின், பலவிதமான மூல பொருட்கள்கொண்டு பல வண்ண சமையல் செய்து வீட்டில் இருப்பவர்களையும் நண்பர்களையும் அசத்தலாம்.

சமையலறை பாதுகாப்பு யோசனைகள்:

சமையலறை பாதுகாப்பு யோசனைகள்:

சமைக்க தொடங்குவதற்கு முன் சமையல் பாதுகாப்பு பற்றி அறிந்திருப்பது மிகவும் அவசியம். ஏனென்றால் நாம் சமைக்கும் போது எப்படி வேண்டுமானாலும் நமக்கு காயங்கள் ஏற்படலாம்.

அதாவது நாம் காய்கறி நறுக்குவதற்கு கூர்மையான கத்தியை உபயோகிப்போம். கத்தியை சரியாய் கையாளாமல் போகும் போது நமக்கு காயங்கள் ஏற்படலாம். பெற்றோரின் அறிவுரைகளை செவிமடுத்து நிதானமாக சமைக்க பழக வேண்டும்.

தீ பாதுகாப்பு :

தீ பாதுகாப்பு :

இளம் வயதினர் சமைக்கும் போது தீ பாதுகாப்பு முறைகளை அறிந்து கொள்ள வேண்டும். பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனை ஆய்வின்படி வீடுகள் தீப்பிடிப்பதற்கு முக்கிய காரணங்கள் சமைக்க தேவைப்படும் உபகரணங்கள் தான் என்று கூறுகிறது. சமையல் செய்வதற்கு ஸ்டவ், ஓவென், டோஸ்டர் போன்றவற்றை பயன் படுத்துகிறோம்.

இவற்றை சிறந்த முறையில் பயன்படுத்த கற்று கொள்ள வேண்டும்.காகிதம் அல்லது துணிகளை நெருப்புக்கு அருகில் வைத்து கொள்ள கூடாது.

அவற்றில் விரைவாக நெருப்பு பிடித்து விடும். அதிக சூடான எண்ணெய் தயாரிப்புகளை ஆரம்ப கட்ட சமையலில் செய்வது சிறந்தது இல்லை. சிறிது பழக்கம் ஏற்பட்டவுடன் எண்ணையில் பொறிப்பது போன்ற சமையலில் இறங்கலாம் .

நெருப்பில்லாத சமையல்:

நெருப்பில்லாத சமையல்:

சமையலில் தீ காயங்கள் ஏற்படாமல் தடுக்க மற்றொரு வழி நெருப்பில்லாத சமையல். நெருப்பை பயன்படுத்தாமல் சமைக்கும் வழிகளை உங்கள் பிள்ளைகளுக்கு கற்று கொடுங்கள். சாலட், கட்லெட் , ரைத்தா போன்றவற்றை நெருப்பின் உதவியின்றி சமைக்கலாம்.

இதன் மூலம் பிள்ளைகள் பெற்றோரின் உதவியின்றி தானாகவே சமைக்க முடியும். பெற்றோருக்கும் எந்த ஒரு பயமும் தேவையில்லை.

சமையல் உபகரணங்களின் உதவி இல்லாத இடங்களில், பிள்ளைகள் இந்த வகை உணவை அருந்தி பலம் பெறலாம். சின்ன பிள்ளைகள் முதல்பெரியவர்கள் வரை இந்த வகை சமயலினால் பயன் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Cooking tips for beginners

Cooking tips for beginners
Story first published: Thursday, August 24, 2017, 13:04 [IST]
Desktop Bottom Promotion