For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தோட்டங்களில் வளர்க்கக்கூடிய சிறந்த பூச்செடிகள்!!!

By Maha
|

தோட்டங்களில் பூச்செடிகளை வைத்து பராமரித்தால், தோட்டமே மிகுந்த அழகுடன் காணப்படும். பொதுவாகவே ஒவ்வொரு பூக்களும், அவற்றின் புவியியல் இடஅமைவு, தட்பவெப்பநிலை ஆகியவற்றிற்கேற்ப, அந்தந்த இடங்களில் வளர்ந்து வரும். ஆனால் இதயங்களைக் கொள்ளை கொள்ளும் அழகினை உடைய சில பூக்கள் எல்லாவிதமான சூழல்களிலும் வளரும். இந்த மலர்கள் பல்வேறு விதமான செயல்பாடுகளுக்கும் பயன்படுகின்றன.

சிலவகை பூக்கள் தோட்டங்களுக்கு மிகவும் ஏற்றவையாகவும், தோட்டத்திற்கு சென்றால் கண்களுக்கு குளிர்ச்சியை தரக்கூடியதாகவும் இருக்கும். அத்தகைய பூக்களில் எந்த வகையான பூக்களை தோட்டங்களில் வளர்த்தால் நன்றாக இருக்கும் மற்றும் அவை வேறு எவற்றிற்கெல்லாம் பயன்படுகிறது என்று சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்கள் வீட்டு தோட்டத்தை அழகாக்குங்கள்.

List of Common Flowers For Your Garden

ரோஜாப்பூ: தோட்டங்களில் வளர்ப்பதற்கும், பரிசாகக் கொடுப்பதற்கும் புகழ் பெற்ற பூ தான் ரோஜா. முட்களைக் கொண்ட காம்புகளையுடைய ரோஜாக்கள் பல்லிதழ் பூ வகையைச் சேர்ந்தவையாகும். இந்த உலகில் நிறங்களாலும், அளவினாலும், நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளில் ரோஜாப்பூக்கள் இருக்கின்றன. சிவப்பு, வெள்ளை, ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் பல்வேறு வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் ரோஜாக்பூக்கள் அதன் மாறுபட்ட நிறங்களால், பூங்கொத்துக்கள் மற்றும் அலங்காரங்களில் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் ரோஜாப்பூக்களை வைத்து, பல்வேறு வாசனை திரவியங்கள், அழகுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

டெய்ஸி பூக்கள்: பொதுவாக மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் காணப்படும் டெய்ஸி பூக்கள், மத்தியில் தடிமான வட்டவடிவ மொட்டுகளையும், அதைச் சுற்றி தட்டையான இதழ்களையும் கொண்டிருக்கும். டெய்ஸி பூக்களின் பளிச்சென்ற வண்ணமும், அதைச் சுற்றி வீசும் நறுமணமும் பட்டாம் பூச்சிகளையும், தேனீக்களையும் மகரந்தச் சேர்க்கைக்கு அழைப்பு விடுப்பது போல இருக்கும். வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் ஜான் கீட்ஸ் போன்ற ஆங்கிலக் கவிஞர்கள் டெய்ஸி பூக்களைப் பற்றி தங்களுடைய கவிதைகளில் எழுதியுள்ளார்கள்.

பூவரசம் பூ: கிராமங்கள் மற்றும் நகரங்களில் சாதாரணமாக காணப்படும் பூக்களில் ஒன்று தான் பூவரசம் பூ. இந்தப் பூ கோப்பை வடிவில், ஒன்றன் மேல் ஒன்றாக இதழ்களைக் கொண்டு ஒரு மணியைப் போல காட்சியளிக்கும். பூவரசம் பூவானது சிவப்பு, ஊதா, இளஞ்சிவப்பு, வெள்ளை, ஆரஞ்சு மற்றும் அனைத்தும் கலந்த ஒரு நிறத்திலும் பூத்துக் குலுங்கும். பூவரசம் பூ ஹாலந்து நாட்டின் தேசிய மலராகவும் மற்றும் ஹாலந்து நாட்டிலிருந்து அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் மலராகவும் உள்ளது. எந்த ஒரு தட்பவெப்ப சூழலுக்கும் ஏற்றவாறு தகவமைந்து கொள்வதும், அறுவடை செய்வதற்கு எளிதாகவும் இருப்பதால், பூவரசம் பூக்கள் தோட்டங்களில் பயிரிட மிகவும் ஏற்றவையாகும்.

நந்தியார்வட்டை : கார்னேஷன் என்றழைக்கப்படும் நந்தியார்வட்டை பூக்கள் சிறு சிறு கொத்துகளாகவும், ரிப்பனைப் போன்ற பட்டையான இதழ்கள் ஒன்றோடொன்று அடுக்குகளாக சேர்ந்து, ஒரு முழுமையான பூவாக பூக்கும் பூக்களுள் ஒன்றாகும். ரோமர்களின் பூமாலைகளில் நந்தியார்வட்டை பூக்கள் எப்பொழுதுமே பயன்படுத்தப்படும். எனவே நந்தியார்வட்டை பூக்கள் அவர்களுடைய கடவுள்களுக்கான பூக்கள் என்று அழைக்கப்படுகின்றன. கார்னேஷன் பூக்கள் அவற்றின் மாறுபட்ட வண்ணங்களுக்காகவும், வளர்ச்சிக்காகவும் மிகவும் விரும்பப்படுபவைகளாக இருக்கின்றன. இந்த பூக்கள் மஞ்சள், இளஞ்சிவப்பு, பச்சை, சிவப்பு மற்றும் ஊதா நிறங்களில் வளர்கிறது. நந்தியார்வட்டை பூக்கள் செடிகளிலிருந்து பறிக்கப்பட்ட பிறகும், அதிக நேரம் வாடாமல் இருப்பதால், பெரும்பாலான பூங்கொத்துகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

English summary

List of Common Flowers For Your Garden | தோட்டங்களில் வளர்க்கக்கூடிய சிறந்த பூச்செடிகள்!!!

Common flower types vary significantly by geographical location, climate and culture, but some hearty varieties of flowers remain universal. Common flowers serve different purposes. Some varieties are ideal for gardens while others are more common in bouquets or arrangements.
Desktop Bottom Promotion