Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
வீடு எப்பொழுதும் நல்ல நறுமணத்துடன் இருக்கணுமா? அப்ப இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...
வீட்டை அழகாக வைப்பது ஒரு பக்கம் இருந்தாலும் வீட்டை கெட்ட துர்நாற்றம் இல்லாமல் எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பதும் அவசியமாகிறது. அதற்காக நாம் நிறைய மெனக்கெடல்களையும் செய்வதுண்டு. ஆனால் என்னவோ கெட்ட துர்நாற்றம் மட்டும் நீங்குவதில்லை.
நீங்கள் கண்ட கண்ட கெமிக்கல்கள் நிறைந்த பொருட்கள், வாசனை திரவியங்கள் இவற்றை பயன்படுத்துவதை விடுத்து மிக எளிய முறையில் உங்கள் வீட்டில் உள்ள துர்நாற்றத்தை நீக்க முடியும்.

உங்கள் வீட்டின் அறை, பாத்ரூம் மற்றும் சமையலறை என பல இடங்களில் இதை நீங்கள் செய்யலாம். உங்கள் வீட்டை என்றும் கெட்ட துர்நாற்றம் இல்லாமல் நல்ல நறுமணத்துடன் வைக்க கீழ்க்கண்ட டிப்ஸ்கள் உங்களுக்கு பெரிதும் உதவி புரியும்.
குப்பை தொட்டிகளை அடிக்கடி காலி செய்ய வேண்டும்
வீட்டில் இருக்கும் கெட்ட துர்நாற்றத்தை போக்க குப்பை தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம். ஏனெனில் குப்பைகள் தேங்கும் போது கெட்ட துர்நாற்றம் இருந்து கொண்டே இருக்கும். எனவே குப்பைகளை அடிக்கடி அகற்றி எல்லாவற்றையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
குளிர் சாதனப் பெட்டியை சுத்தம் செய்யுங்கள்
உங்கள் குளிர் சாதனப் பெட்டியில் அழுக்கு தேங்கு இருந்தால் அதுவும் கெட்ட துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது உங்கள் வீட்டு பிரிட்ஜ்யை சுத்தம் செய்யுங்கள். குளிர் சாதனப் பெட்டியில் உள்ள கெட்ட துர்நாற்றத்தை போக்க பேக்கிங் சோடாவை நீங்கள் பயன்படுத்தி வரலாம். பேக்கிங் சோடா கெட்ட துர்நாற்றத்தை உறிஞ்ச உதவுகிறது.
பேக்கிங் சோடாவை தூவி விடுங்கள்
உங்கள் வீட்டில் கெட்ட துர்நாற்றம் ஏற்படும் இடங்களில் பேக்கிங் சோடாவை தூவி விடுங்கள். பேக்கிங் சோடா மற்றும் அத்தியாவசிய எண்ணெய் துளிகளை உங்கள் வீட்டு கம்பளம் மற்றும் கால் மிதியடிகளில் தெளிக்கலாம். இது கெட்ட துர்நாற்றத்தை உறிஞ்சிக் கொள்ள உதவுகிறது.
கதவை நன்றாக திறந்து வையுங்கள்
உங்கள் வீட்டினுள் புத்தம் புதிய காற்று நுழையும் போது துர்நாற்றம் நீங்குகிறது. எனவே உங்கள் வீட்டில் உள்ள ஜன்னல்களை திறந்து வையுங்கள். வீட்டின் அறை முழுவதும் சுத்தமான காற்று வீசும் போது அறையில் உள்ள கெட்ட துர்நாற்றம் எளிதில் நீங்கிவிடும்.
துர்நாற்றத்தை நீக்க குக்கர் டிப்ஸ்
உங்கள் வீட்டில் உள்ள துர்நாற்றத்தை நீக்க இந்த குக்கர் டிப்ஸ் உதவியாக இருக்கும். உங்கள் வீட்டு எலக்ட்ரிக் குக்கரில் சிறுதளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு 3 தேக்கரண்டி அல்லது அதற்கு மேற்பட்ட அளவு பேக்கிங் சோடாவை அதில் சேர்க்க வேண்டும். பிறகு அதை குறைந்த நிலைக்கு மாற்றி மூடி போட்டு மூடி விடுங்கள். இப்பொழுது இந்த கலவை உங்கள் வீட்டில் இருக்கும் துர்நாற்றத்தை போக்க உதவுகிறது. வேண்டுமென்றால் லெமன் மற்றும் அத்தியாவசிய நறுமண எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளலாம்.
காற்று சுத்திகரிப்பு கருவியை பயன்படுத்துங்கள்
உங்கள் வீட்டை புது வாசனையுடன் வைத்திருக்க இந்த காற்று சுத்திகரிப்பு கருவி பயன்படுகிறது. இது வீட்டில் உள்ள துர்நாற்றத்தை நீக்குவதோடு காற்றில் கலந்து வரும் தூசி மற்றும் மகரந்தத்தையும் குறைக்க உதவுகிறது. எனவே ஒவ்வாமையை தடுக்க உதவுகிறது.
உங்கள் செல்லப்பிராணிகளை நறுமணத்துடன் வைத்திருங்கள்
உங்களுக்கு செல்லப் பிராணிகள் இருந்தால் அதை நன்றாக கழுவி சுத்தம் செய்து நல்ல வாசனையுடன் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். இயற்கையான செல்லப்பிராணி டியோடரெண்ட்டை நீங்கள் பயன்படுத்தி வரலாம். ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 2 தேக்கரண்டி பேக்கிங் சோடா, 2 கப் டிஸ்டில்டு தண்ணீர் மற்றும் 8-12 சொட்டுகள் அத்தியாவசிய எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை உங்கள் செல்லப்பிராணி மீதும் படுக்கையின் மீதும் தெளித்து வர வேண்டும்.
வீட்டில் உள்ள துண்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்
சில சமயங்களில் வீட்டில் பூஞ்சை வாசனை ஏற்படுவது உண்டு. துண்டில் உள்ள பூஞ்சை வாசனையை போக்க வெந்நீரில் வினிகர் சேர்த்து ஊற வைக்க வேண்டும். இவை துண்டில் உள்ள பூஞ்சை வாசனையை போக்க உதவுகிறது.
உங்கள் காலணிகளை நறுமணத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்
வீட்டை துர்நாற்றமாக ஆக்குவதில் காலணிகள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. காலணிகளின் உட்புறத்தில் உள்ள துர்நாற்றத்தை போக்க உலர் ஷாம்புவைத் தெளிப்பது, உலர் டிஸ்யூ பேப்பர்கள் போன்றவற்றை பயன்படுத்தி வரலாம்.
ஷவர் க்ளீனர் ஸ்ப்ரேயை பயன்படுத்துங்கள்
தினசரி ஷவர் க்ளீனர் ஸ்ப்ரேயை பயன்படுத்தி வரலாம். இது உங்கள் பாத்ரூமில் உள்ள பூஞ்சை காளான் வாசனையை போக்கும். இது எல்லா நேரங்களிலும் உங்களுக்கு நல்ல வாசனையை கொடுக்கும்.
உங்கள் வீட்டு ஏர் கண்டிஷனரில் அத்தியாவசிய எண்ணெயை சேர்க்கலாம்
அத்தியாவசிய எண்ணெய்கள் உங்கள் வீட்டை நல்ல வாசனையுடன் வைத்திருக்க உதவுகிறது. ஏர் கண்டிஷனரில் உள்ள வடிகட்டியில் அத்தியாவசிய நறுமண எண்ணெயை சேர்க்கலாம். இது உங்களுக்கு நல்ல நறுமணத்தை கொடுக்கும். சில துளிகள் அத்தியாவசிய எண்ணெயை அதன் வடிகட்டியில் தெளிக்கலாம். இதனால் உங்கள் அறை முழுவதும் எளிதாக நறுமணம் பரவும்.



Click it and Unblock the Notifications