Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
வாழைப்பழம் ரொம்ப நாள் கெட்டுப்போகாம இருக்கணுமா? இந்த ஈஸியான வழிகளை யூஸ் பண்ணுங்க...!
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் என்பது அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய அனைவரும் விரும்பும் பழங்களில் ஒன்றாகும். வாழைப்பழம் சுவையானது மட்டுமல்ல அதில் வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து போன்ற அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் நிரம்பியுள்ளன.
விலை குறைவாக இருப்பதால் அதனை அதிக அளவில் வாங்குவது எளிது. ஆனால் அதிலுள்ள பிரச்சினை என்னவெனில் வாழைப்பழங்கள் விரைவில் கெட்டுப்போகத் தொடங்கும். நீங்கள் அவற்றை சரியான முறையில் சேமிக்கவில்லை என்றால், அவை வழக்கத்தை விட விரைவாக கெட்டுப்போக வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டவசமாக சில எளிய வழிகள் மூலம் வாழைப்பழத்தை ஒரு வாரம் வரை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கலாம். அந்த வழிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

அலுமினியத் தாளில் வாழைப்பழத்தின் காம்புகளை சுற்றி வைக்கவும்
வாழைப்பழங்களை நீண்ட காலம் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க, அவற்றின் காம்புகளைச் சுற்றி அலுமினியத் தாள் கொண்டு சுற்றி வைக்கவும். வாழைப்பழங்களை தனித்தனியாக பிரித்து, ஒவ்வொன்றின் காம்புகளையும் மூடவும். வாழைப்பழத்தை முழுவதுமாக மறைக்க வேண்டாம், காம்புகளை மட்டும் மூடினாலே போதும். உங்களிடம் அலுமினியத் தாள் இல்லையென்றால், பிளாஸ்டிக் பேப்பரை பயன்படுத்தலாம்.
வாழைப்பழங்களை தொங்க விடவும்
வாழைப்பழங்கள் தரையில் இல்லாமல் இருந்தால் நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்கும். மாறாக, அவற்றை தொங்க விடவும். வாழைப்பழத்தின் மேல் பகுதியில் நூல் அல்லது கயிற்றைப் பயன்படுத்தி உங்கள் சமையலறையில் ஒரு மூலையில் தொங்கவிடவும்.
மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து விலக்கி வைக்கவும்
வாழைப்பழங்களை மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் ஒருபோதும் சேமித்து வைக்காதீர்கள். ஆப்பிள் மற்றும் தக்காளி போன்ற பழங்கள் எத்திலீன் வாயுவை வெளியிடுகின்றன, இது பழங்களை பழுக்க வைக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. தனித்தனியாக சேமித்து வைப்பதன் மூலம் உங்கள் வாழைப்பழங்கள் நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்கும்.
குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக்கூடாது
பொதுவாக பழங்கள் கெட்டுப்போகாமல் இருக்க குளிர்சாதனப் பெட்டி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வாழைப்பழம் இதற்கு விதிவிலக்காகும். குளிர்சாதனப் பெட்டியில் வாழைப்பழத்தை ஒருபோதும் வைக்கக்கூடாது. குளிர்ந்த வெப்பநிலை வாழைப்பழங்கள் விரைவாக கெட்டுப்போக வழிவகுக்கும். பொதுவாக வாழைப்பழத்தை உலர்ந்த இடத்தில் அறை வெப்பநிலையில் அவற்றை விட்டுவிடுவது நல்லது.
பழுத்த வாழைப்பழங்களை வாங்கக்கூடாது
வாழைப்பழங்களைப் வாங்கும் போது, பச்சை நிற அல்லது சற்று உறுதியான மற்றும் புள்ளிகள் இல்லாத வாழைப்பழங்களைத் தேர்ந்தெடுக்கவும். அதிகம் பழுத்தப் பழங்களைத் தவிர்க்கவும், மேலும் அவை விரைவில் கெட்டுபோவதைத் தடுக்க உங்களுக்கு தேவையான அளவில் மட்டும் பழங்களை வாங்கவும்.
பழச்சாறை பயன்படுத்தவும்
வாழைப்பழம் உரிக்கப்பட்டு காற்றில் வெளிப்பட்டு விட்டால், அது விரைவில் பழுப்பு நிறமாக மாறும். நீங்கள் நறுக்கிய வாழைப்பழத்தின் துண்டுகளை ப்ரெஷாக வைத்திருக்க விரும்பினால், அவற்றில் சிறிது எலுமிச்சை சாறு அல்லது அன்னாசி பழச்சாறு தெளிக்கவும். அதேபோல பழத் துண்டுகளையும் காற்றுப் புகாத பைகளில் போட்டு குளிர்ந்த இடத்தில் வைத்திருந்தால், அவை நீண்ட நேரம் பிரெஷாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
