Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
உங்க ஷூ 'கப்பு' அடிக்குதா? இதோ அதை எளிதில் போக்கும் சில ட்ரிக்ஸ்..!
ஆபீஸ், ஸ்கூல் செல்பவர்கள் தினமும் ஷூ அணிய வேண்டியிருக்கும். இப்படி நாள் முழுவதும் அணிந்திருக்கும் ஷூவானது அதிகப்படியான வியர்வையினால் ஒருவித துர்நாற்றமானது வீசத் தொடங்கும். இப்படி துர்நாற்றமிக்க ஷூவை அணிந்தால், அது மிகுந்த தர்மசங்கடத்தை உண்டாக்கும்.
அதோடு துர்நாற்றம் வீசும் ஷூவை சுத்தம் செய்யாமல் அல்லது கிருமி நீக்கம் செய்யாமல் அணிந்தால், அதன் விளைவாக தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. எனவே கால்களில் அணியும் ஷூவை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.

நீங்களும் இப்படி தினமும் ஷூ அணிபவரா? உங்கள் ஷூவில் இருந்தும் துர்நாற்றம் அதிகம் வீசுகிறதா? அந்த துர்நாற்றத்தை எப்படி போக்குவது என்று தெரியவில்லையா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் கீழே ஷூவில் இருந்து வீசும் துர்நாற்றத்தைப் போக்கும் சில ட்ரிக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன.
பேக்கிங் சோடா
நமது சமையறையில் காணப்படும் பொதுவான பொருள் தான் பேக்கிங் சோடா. இந்த பேக்கிங் சோடா ஒரு நேச்சுரல் டியோடரண்ட். இதற்கு பாக்டீரியாக்கள் மற்றும் துர்நாற்றத்தை உறிஞ்சும் திறன் உள்ளது. இப்படிப்பட்ட பேக்கிங் சோடாவை, சோள மாவு மற்றும் பேக்கிங் பவுடருடன் சேர்த்து பயன்படுத்தினால், ஷூவில் இருந்து வீசும் நாற்றத்தைப் போக்கலாம். அதுவும் இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து, அதை ஷூவினுள் தூவி, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். ஒருவேளை மற்ற இரண்டு பொருட்கள் இல்லாவிட்டாலும், வெறும் பேக்கிங் சோடாவை மட்டும் நேரடியாக ஷூவில் தூவி, 24 மணிநேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.
சோப்பு
ஷூவில் இருந்து வீசும் துர்நாற்றத்தைப் போக்க உதவும் மற்றொரு பொருள் சோப்பு. அதுவும் நல்ல நறுமணமிக்க சோப்பு இருந்தால், அவற்றைப் பயன்படுத்தும் போது, துர்நாற்றம் நீங்குவதோடு, கிருமிகளும் நீங்கும். அதற்கு ஒரு சிறிய துண்டு சோப்பை இரவு தூங்கும் முன் ஷூவினுள் வைத்து, இரவு முழுவதும் வைத்து, மறுநாள் காலையில் அந்த சோப்பை எடுக்க வேண்டும். இப்படி செய்யும் போது, சோப்பானது ஷூவில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் துர்நாற்றத்தை உறிஞ்சி, நல்ல மணத்துடன் வைத்துக் கொள்ளும்.
வெள்ளை வினிகர்
ஷூவில் வீசும் கடுமையான துர்நாற்றத்தை நீக்க உதவும் மற்றொரு பொருள் வெள்ளை வினிகர். இந்த வினிகர் அனைத்து சூப்பர் மார்கெட்டுகளிலும் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள். இப்படிப்பட்ட வினிகரை நீருடன் சரிசம அளவில் கலந்து, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, அந்த கலவையை இரவு தூங்கும் முன் ஷூவினுள் ஸ்ப்ரே செய்து, இரவு முழுவதும் உலர்த்த வேண்டும். இப்படி செய்வதன் மூலம் ஷூவில் வீசும் துர்நாற்றம் நீங்கும்.
நறுமண எண்ணெய்கள்
உங்கள் ஷூ எப்போதும் நல்ல மணத்துடன் இருக்க வேண்டுமானால், நறுமண எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். அதுவும் விருப்பமான நறுமண எண்ணெய்களை நீரில் கலந்து, அதை இரவு தூங்கும் முன் துர்நாற்றம் வீசும் ஷூவில் தெளித்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
சூரிய வெளிச்சம்
முக்கியமாக ஷூவில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது என்றால், ஷூவை வெயிலில் அடிக்கடி சில மணிநேரத்தை வைத்து உலர்த்த வேண்டும். சூரியக் கதிர்களானது ஷூவில் படும்போது, அதில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சி தடுக்கப்படுவதோடு, ஷூவில் இருந்து வீசும் துர்நாற்றமும் நீங்கும்.



Click it and Unblock the Notifications