Latest Updates
-
பஞ்சாபி பஞ்சரத்ன தால் ரெசிபி - இந்த மாதிரி பருப்பு கடைஞ்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
கொழுப்பு கல்லீரல் புற்றுநோயாக மாறுமா? யாருக்கு ஆபத்து அதிகம்? - விளக்கும் கல்லீரல் நிபுணர்! -
இராவணனை கடவுளாக வழிபடும் வித்தியாசமான 5 இந்தியக் கோவில்கள் - எங்க இருக்கு தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள்! -
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
அக்டோபர் 18, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும் - இல்லனா அவ்வளவுதான் -
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும்
கோடை வெப்பம் தாங்கலையா? அப்ப உங்க வீட்டை குளு குளுன்னு மாத்த.... நீங்க என்ன செய்யணும் தெரியுமா?
கோடை என்பது விடுமுறைகள், கடற்கரைகள் மற்றும் ஒட்டுமொத்தமான மகிழ்ச்சி விளையாட்டுக்களை குறிக்கலாம். ஆனால், கடுமையான கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதியடைந்து வருகிறார்கள். மேலும், வீட்டில் எப்போதும் ஏர் கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும் என்பதை போல நம்மை உணர வைக்கலாம். இல்லையெனில், வீட்டினுள் அனல் காற்று வீசும் இந்த கோடை வெப்பத்தில் நாம் வீட்டில் இருக்க முடியாது.
இருப்பினும், கோடையில் குளிரூட்டும் இயந்திரங்களை பயன்படுத்தும் வீடுகளின் அதிக ஆற்றல் நுகர்வு பசுமை இல்லாத வாயு வெளியேற்றம் மற்றும் புவி வெப்பமடைதலுக்கு பங்களிக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆற்றலைச் சேமிக்கவும், உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், சுற்றுச்சூழலுக்கு உதவவும் உதவிக்குறிப்புகளைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
வெப்பத்தைத் தடுக்கவும்
கோடை காலங்களில் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க முதலில் வெப்பம் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்க வேண்டும். வெப்பத்தை வீட்டிற்குள் நுழைய விடாமல் தவிர்க்கும்போது, உங்கள் வீடு குளிர்ச்சியாக இருக்கும். ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு அருகில் பெரிய பானைகளில் இருக்கும் செடிகளை வையுங்கள், கண்ணாடி ஜன்னல்களை வீட்டில் வைத்திருங்கள், வெயில் ஜன்னல்களின் வழியே நுழையாதவாறு, வெளியே சிறிய கூடாரங்களை அமையுங்கள்.
நேரடி சூரிய ஒளியைத் தவிர்க்கவும்
சூரிய ஒளி உங்கள் அறையை பிரகாசமாக்கும். ஆனால் ஒளி வெப்பத்திற்கு சமம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் வீட்டிற்குள் சூரிய ஒளி எவ்வளவு அதிகமாகப் பாய்கிறதோ, அவ்வளவு வெப்பமாக நீங்கள் உணருவீர்கள். இதனால், உங்கள் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் கடினமாக வேலை செய்ய வேண்டியிருக்கும்.
எல்லா கதவுகளையும் மூடு
பயன்படுத்தப்படாத அறைகளின் கதவுகளை மூடுவதன் மூலம், சூரிய வெப்பத்தை வீட்டிற்குள் நுழைய விட வேண்டாம். இதன் மூலம், வீட்டில் இருக்கும் குளிர்ந்த காற்று வெளியேறுவதைத் தடுக்கலாம். வீட்டிலுள்ள எல்லா பகுதிகளையும் குளிர்விக்க உங்கள் ஏர் கண்டிஷனருக்கு தேவையான ஆற்றலின் அளவையும் குறைக்கும்.
உங்கள் பெட்ஷீட்களை மாற்றவும்
கோடையில் உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க விரும்பினால், இலகுவான துணிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வெள்ளை போன்ற பிரகாசமான வண்ண துணிகளுக்கு முதலில் முன்னுரிமை அளியுங்கள். இந்த துணிகள் ஒளி மற்றும் வெப்பத்தை பிரதிபலிக்கின்றன. இதனால் உங்கள் வீட்டிற்குள் நுழையும் வெப்ப அளவு குறையும்.
மாலையில், ஹேங்கவுட் செய்யுங்கள்
பகலில் வெப்பத்திற்கு பயந்து நீங்கள் ஜன்னல்களை மூடிவிட்டு வீட்டினுள்ளே இருக்க விரும்பலாம். ஆனால் மாலையில் குளிர்ச்சியானவுடன், உங்கள் வீட்டை இயற்கையாக குளிர்விக்க ஜன்னல்களைத் திறந்து வையுங்கள். ஆனால் இரவில் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை பூட்டி வையுங்கள்.
உங்கள் வீட்டில் விசிறிக்கு அருகே அல்லது நேராக ஒரு கிண்ணம் முழுவதும் ஐஸ் கட்டிகளை வையுங்கள். பெரிய ஐஸ் கட்டியை விசிறியின் முன் வைக்கும்போது, விசிறியில் இருந்து வெளியேறும் காற்று, அதில் பட்டு குளிர்ந்த காற்றாக அறை முழுவதும் பரவும். உங்கள் வீட்டை குளிர்விப்பதில் விளக்கும் ஒரு பங்கு வகிக்கிறது. ஒளிரும் விளக்குகள் அதிக வெப்பத்தை உருவாக்குகின்றன. எனவே ஆற்றல் சேமிப்பு பல்புகளுக்கு மாறுவது நல்லது. மேலும், இது பணத்தை சேமிக்க உதவும்.
மிஷன்கள் அதிகமாக உபயோகிப்பதை தவிர்க்கவும்
உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள உபகரணங்களால் வியக்கத்தக்க அளவு கழிவு வெப்பம் உருவாகிறது. அவை பயன்பாட்டில் இல்லாதபோது அவற்றை நிறுத்திவைப்பதைத் தவிர, முடிந்தவரை அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். டிஷ்வாஷர், துணி உலர்த்தும் மிஷனை பயன்படுத்துவதற்குப் பதிலாக, உங்கள் துணிகளையும், பாத்திரங்களையும் கைகளால் சுத்தப்படுங்கள். மேலும், உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க வீட்டை சுற்றி மரம் செடிகளை வளருங்கள்.



Click it and Unblock the Notifications



