Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
உங்க பழைய வெள்ளி கொலுசு புதுசு போல மின்னணுமா? அப்ப இத வெச்சு சுத்தம் பண்ணுங்க...
ஒவ்வொரு வீட்டின் பூஜை அறையிலும் நிச்சயம் வெள்ளி விளக்கு, வெள்ளி கலசம் போன்ற வெள்ளிப் பொருட்கள் இருக்கும். அதேப் போன்று பெண்கள் தங்க நகைகளுக்கு அடுத்தப்படியாக வெள்ளி நகைகளைத் தான் அதிகம் பயன்படுத்துவார்கள்.
இந்த வெள்ளிப் பொருட்கள் காலப்போக்கில் அவற்றின் பொலிவை இழந்து, நிறம் மாறத் தொடங்கி, பழையது போன்று காட்சியளிக்கும். ஆனால் உங்கள் வெள்ளிப் பொருட்கள் மற்றும் வெள்ளி நகைகள் எப்போதும் புதிது போன்று பிரகாசிக்க வேண்டுமானால், அதை சரியான முறையில் சுத்தம் செய்து, சரியாக பராமரிக்க வேண்டும்.

அதிர்ஷ்டவசமாக, வெள்ளி பொருட்களை புதிது போன்று ஜொலிக்க வைக்க சிரமப்பட வேண்டியதில்லை. நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்தாலே, வெள்ளிப் பொருட்கள் புதிது போன்று ஜொலிக்கும். இப்போது வெள்ளிப் பொருட்களை எப்படி புதிது போன்று ஜொலிக்க வைப்பது என்பதைக் காண்போம்.
1. பேக்கிங் சோடா மற்றும் அலுமினியத் தாள்
இது மிகவும் பிரபலமான மற்றும் ஈஸியான வழி. இந்த வழியின் மூலம் மஞ்சள் அல்லது கருப்பு நிறத்தில் மாறியுள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் நகைகளை புதிது போன்று மாற்றலாம். அதுவும் 30 நொடிகள் முதல் 3 நிமிடத்திற்குள் ஜொலிக்க வைக்க முடியும். அதற்கு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பின் ஒரு பௌலில் அலுமினியத் தாளை விரித்து, அந்த பௌலில் சுடுநீரை ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவைப் போட வேண்டும். அப்படி போடும் போது நீரில் இருந்து நுரை வரும். இந்நிலையில் அதில் உடனே வெள்ளி நகைகளை அதில் போட்டு, 2-5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
ஒருவேளை வெள்ளி நகை மிகவும் மோசமான நிலையில் இருந்தால், 10 நிமிடம் வரை ஊற வைக்கலாம். இறுதியாக ஊற வைத்த நகைகை குளிர்ந்த நீரில் கழுவி, ஒரு சுத்தமான துணியால் துடைத்து எடுத்தால், பழைய வெள்ளி நகை புதிது போன்று ஜொலிக்கும்.
2. எலுமிச்சை மற்றும் கல் உப்பு
இது பெரும்பாலான வீடுகளில் தினசரி பூஜை அறையில் உள்ள பாத்திரங்களை கழுவ பயன்படுத்தும் பொருட்களாகும். அதற்கு ஒரு பௌலில் எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து, 3 டேபிள் ஸ்பூன் கல் உப்பு மற்றும் சுடுநீரை ஊற்றி கலந்து, அந்நீரில் வெள்ளி பொருட்கள் அல்லது நகைகளைப் போட்டு 5 நிமிடம் ஊற வைத்து, பின் அதை வெளியே எடுத்து சுத்தமான துணியால் துடைத்தால், அதில் உள்ள அழுக்குகள் நீங்கி, புதிது போன்று காணப்படும்.
3. கெட்சப்
உங்கள் வீட்டில் கெட்சப் உள்ளதா? அப்படியானால் அந்த கெட்சப் கொண்டே வெள்ளி நகைகள் அல்லது பாத்திரங்களை ஜொலிக்க வைக்கலாம். அதற்கான ஒரு பேப்பர் டவலில் கெட்டப்பை வைத்து, அதை வெள்ளிப் பொருட்களின் மீது தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான துணியால் துடைத்து, கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலமும், வெள்ளிப் பொருட்கள் மின்னும்.
4. துணி துவைக்கும் சோப்புத் தூள்
துணி துவைக்கும் சோப்புத் தூள் அழுக்குகளை நீக்குவதில் சிறந்தது. அதற்கு ஒரு பௌலில் 1 சிறிய கப் துணி துவைக்கும் சோப்புத் தூளை எடுத்து, அதில் சுடுநீரை ஊற்றி, வெள்ளி ஆபரணங்களைப் போட்டு, 5-7 நிமிடம் ஊற வைத்து, பின துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி செய்வதனால் வெள்ளைப் பொருட்கள் பளிச்சென்று ஜொலிக்கும்.
5. டூத் பேஸ்ட்
இன்னும் எளிமையான வழியைத் தேடினால், டூத் பேஸ்ட் கொண்டு செய்யலாம். அதற்கு சிறிது டூத் பேஸ்ட்டை எடுத்து, அதை வெள்ளி ஆபரணங்களின் மீது தடவி வட்ட சுழற்சியில் தேய்த்து, 5 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
6. வினிகர்
வினிகர், தண்ணீர் மற்றும் பேக்கிங் சோடா ஆகிய பொருட்கள் வெள்ளிப் பொருட்களை புதிது போன்று மின்ன பெரிதும் உதவி புரியும். அதற்கு ஒரு பௌலில் சுடுநீரை எடுத்து, அதில் 1/2 கப் வினிகருடன் 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, அந்த கலவையில் வெள்ளிப் பொருட்களைப் போட்டு 2-3 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவி, சுத்தமான துணியால் .துடைத்து எடுக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications