Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை சுத்தம் செய்யணுமா? இதோ டிப்ஸ்..
நகைகளைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இன்று பல நவீன வடிவமைப்புகளில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.. அதன் மதிப்பு அதிகரித்தாலும் மக்கள் அதனை வாங்கி அணியாமல் இருந்ததில்லை. தங்கத்தை விரும்பாத பெண்களே கிடையாது... அத்தகைய தங்கம் மற்றும் வெள்ளியை பயன்படுத்தும் பெண்கள் அவற்றை நன்றாக பராமரிக்க வேண்டும்.. நம் உடலை எப்படிக் கவனித்துக்கொள்கிறோமோ அதுபோல தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கும் கவனிப்பும் பராமரிப்பும் தேவை.
தூசி மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசு காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மாசுபடுகின்றன. இந்த நகைகளில் நீண்ட நேரம் அழுக்கு இருந்தால், நகைகள் பொலிவை இழக்கும். தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை சுத்தம் செய்வதற்கான சில எளிய குறிப்புகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

1. சோப்பு பொடி அல்லது திரவம்
பொதுவாக அனைவரும் வீட்டில் பாத்திரங்களை கழுவுவதற்கு சோப்பு பொடி அல்லது திரவத்தை பயன்படுத்துகின்றனர். தங்க நகைகளை சுத்தம் செய்வதற்கு டிடர்ஜென்ட் பவுடர் ஒரு முக்கியமான மற்றும் சக்திவாய்ந்த பொருளாக இருக்கிறது.. ஒரு பாத்திரத்தில் சோப்பு தூள் அல்லது திரவத்தை வெதுவெதுப்பான நீரில் கலக்கவும். இந்தக் கலவையில் தங்க ஆபரணங்களைப் போட்டு சிறிது நேரம் வைத்திருந்தால் அழுக்குகள் நீங்கும். நகைகளின் ஓரங்களை டூத் பிரஷ் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு, நகைகளை நல்ல தண்ணீரில் கழுவி, மென்மையான உலர்ந்த துணியால் துடைக்கவும். தங்க நகைகளை சுத்தம் செய்வதற்கான எளிமையான வழி இதுதான் என்று கூறலாம்.
2. பேஸ்ட்
தங்க நகைகளை சுத்தம் செய்வதற்கான மலிவான மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியம் பேஸ்ட் ஆகும். நகைகளில் சிறிதளவு பேஸ்ட்-ஐ தடவி, டூத் பிரஷ் மூலம் ஓரங்களிலும் மூலைகளிலும் தேய்க்கவும். லேசான பேஸ்ட்டை பயன்படுத்துவதன் மூலம் நகைகளின் பொலிவை இழக்காமல் அழுக்குகளை எளிதில் அகற்றலாம். அதன் பிறகு 10 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் வைத்து உலர்ந்த துணியால் துடைக்கவும்.
3. அம்மோனியா
வெதுவெதுப்பான நீரில் சிறிது அம்மோனியா தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கரைசலில் தங்க ஆபரணங்களை சேர்த்து ஒரு நிமிடம் கழித்து ஒரு பிரெஷ் உதவியுடன் விளிம்புகள் மற்றும் மூலைகளை தேய்க்கவும். தங்க நகைகளை எளிதில் சுத்தம் செய்ய அம்மோனியா உதவுகிறது. ஆனால் தங்க நகைகளில் முத்து, ரத்தினங்கள் சேர்க்கப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
4. உப்பு
உப்பு வெள்ளி நகைகளை சுத்தம் செய்ய உதவுகிறது. வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து அதில் வெள்ளி நகைகளை சேர்த்து சிறிது நேரம் அப்படியே வைக்கவும். பிறகு டூத் பிரஷ் மூலம் ஓரங்களையும் மூலைகளையும் தேய்த்து, நல்ல தண்ணீரில் கழுவவும். வெள்ளி நகைகளை சுத்தம் செய்வதற்கான மலிவான, வேகமான மற்றும் மென்மையான வழிகளில் இதுவும் ஒன்றாகும்.
5. வெள்ளி
நகைகளை சுத்தம் செய்யும் முறைகளில் சில்வர் பாலிஷ் ஒன்றாகும். வெள்ளி நகைகளை சுத்தம் செய்ய உதவும் சில்வர் பாலிஷ் சந்தையில் கிடைக்கிறது. இது நகைகளில் இருந்து கடினமான கறைகளை அகற்ற உதவுகிறது மற்றும் தூசியை எளிதாக நீக்குகிறது. நகையின் மீது சிறிது சில்வர் பாலிஷ் தடவி, மென்மையான துணியால் தேய்க்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.
6. அலுமினியம் ஃபாயில்
ஒரு பாத்திரத்தில் அலுமினிய ஃபாயிலை போட்டு அதில் வெள்ளி ஆபரணங்களை சேர்த்து பேக்கிங் சோடாவை தூவவும். பின்னர் வெள்ளி நகைகளின் மீது வெதுவெதுப்பான நீரை ஊற்றவும். படலம் சூடான நீரை நகைகளிலிருந்து மாற்ற அனுமதிக்கிறது. இவ்வாறு பலமுறை செய்வதால் நகைகளின் பொலிவு குறையாமல் சுத்தமாகும்.



Click it and Unblock the Notifications