Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
லஞ்ச் பாக்ஸில் துர்நாற்றம் வீசுகிறதா? இதோ சுத்தம் செய்ய டிப்ஸ்..!
ஒரு நல்ல மதிய உணவு, நாள் முழுவதும் உடலுக்கு ஆற்றலையும் ஊட்டச்சத்துக்களையும் நமக்கு வழங்குகிறது. அதனால்தான் நாம் அனைவரும் ஒரு சிறந்த மதிய உணவை எதிர்நோக்குகிறோம். வேலை அல்லது பள்ளிக்கு செல்லும் போதும், மற்றவர்களுடன் பழகவும், வேலைக்கு நடுவே சிறிது நேரம் ஓய்வெடுக்கவும் மதிய உணவு ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
உங்கள் மதிய உணவு பாக்ஸில் ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவு விருப்பங்களை எடுத்து செல்வது முக்கியமான ஒன்று.. அதுபோலவே தண்ணீர் குடிப்பதும், நமது வாழ்க்கை முறையின் ஒரு முக்கிய அங்கமாகும்.

எனவே எப்போதும் எங்கு சென்றாலும் சொந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வது நல்லது. ஆனால், வீட்டுக்குத் திரும்பி வந்து அவற்றைக் கழுவும்போது, சில சமயங்களில் லஞ்ச் பாஸிலும் பாட்டிலிலும் துர்நாற்றம் வரும்.. சாதாரணமாக கழுவினால் அந்த துர்நாற்றம் போகாமல் வீசுகிறது. இந்த துர்நாற்றத்தை போக்க உதவும் சில எளிய வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
1. சுத்தம் செய்த முன்னும் பின்னும் திறந்தே வைக்க வேண்டும்:
கழுவிய பின் பாட்டில்களையும், லஞ்ச் பாக்ஸ்களையும் மூடுவது பலரின் பழக்கம். இருப்பினும், இது உடனடியாக வாசனையை அகற்றாது. நீங்கள் அவற்றை ஒரு குறிப்பிட்ட இடத்தில் தலைகீழாக கவிழ்த்து வைக்க வேண்டும்.. அப்படி கழுவிய பின் திறந்து வைக்க வேண்டும். மேலும், நீங்கள் வீட்டிற்கு வந்தவுடன் அந்த மதிய உணவுப் பாக்ஸ் மற்றும் பாட்டில்களைத் திறப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
2. ஒயிட் வினிகர் உதவியை நாடுங்கள்:
ஒயிட் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் துர்நாற்றத்தை உருவாக்க கூடிய பாக்டீரியாவை அழித்து, லஞ்ச் பாக்ஸில் இருந்து வீசும் கெட்ட வாசனையை அகற்ற உதவுகிறது. பருத்தி துணி அல்லது பேப்பர் டவலை வினிகர் கலந்த தண்ணீரில் நனைத்து, லஞ்ச் பாக்ஸுக்குள் சிறிது நேரம் வைத்திருக்கவும். அதன் பின்னர் திறந்து பார்த்தால் துர்நாற்றம் மாயமாய் மறைந்திருப்பதை உணர முடியும்
3. உருளைக்கிழங்கு வைத்து சுத்தம் செய்யலாம்:
துர்நாற்றம் வீசக்கூடிய லஞ்ச் பாக்ஸை உப்பு சேர்க்கப்பட்ட உருளைக்கிழக்கு துண்டுகளைக் கொண்டு அழுத்தி தேய்க்க வேண்டும். பின்னர் 15-20 நிமிடங்கள் உருளைக்கிழங்கு தேய்க்கப்பட்ட லஞ்ச பாக்ஸை மூடி வைக்கவும். அதனைத் தொடர்ந்து லஞ்ச் பாக்ஸை தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்தினால் அதில் இருந்த துர்நாற்றம் காணாமல் போய் இருக்கும்.
4. இலவங்கப்பட்டை வைத்து சுத்தம் செய்தல்:
டிபன் பாக்ஸில் இருந்து வரும் துர்நாற்றத்தையும் இலவங்கப்பட்டையை உபயோகிப்பதன் மூலம் எளிதாக நீக்கலாம். இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது டிபன் பாக்ஸ் மற்றும் பாட்டில்களில் இருந்து வரும் வாசனையைக் குறைக்க உதவுகிறது. இதற்கு ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் மற்றும் இலவங்கப்பட்டை போட்டு கொதிக்க விடவும். இந்த தண்ணீரை டிபன் பாக்ஸில் அல்லது பாட்டிலில் ஊற்றி, பத்து முதல் பதினைந்து நிமிடங்களுக்கு அப்படியே விடவும். அதன் பிறகு, அவற்றை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்..
5. எலுமிச்சம்பழம்
எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து அதன் தோலைத் தூக்கி எறிவோம். உண்மையில், எலுமிச்சை தோல்கள் சுத்தம் செய்வதில் உதவியாக இருக்கும். எலுமிச்சைத் தோலில் உள்ள சிட்ரிக் அமிலம் டிபன் பாக்ஸில் இருந்து வரும் துர்நாற்றத்தை சுத்தம் செய்வது மட்டுமின்றி aதனை முழுவதுமாக நீக்குகிறது. இந்த முறைக்கு, புதிய எலுமிச்சை தோல்களை தண்ணீரில் கொதிக்க வைத்து, இந்த தண்ணீரை டிபன் பாக்ஸில் வைத்து, சுமார் அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். இறுதியாக, தண்ணீர் உதவியுடன் டிபன் பாக்ஸை சுத்தம் செய்யவும்.
6. பேக்கிங் சோடாவை பயன்படுத்தவும்:
ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் எளிதாக கிடைக்கக்கூடிய பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தி கறைகளை மட்டுமல்ல, லஞ்ச் பாக்ஸில் இருந்து வரும் துர்நாற்றத்தையும் அகற்ற முடியும். பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து கெட்டியான பேஸ்ட்டை தயார் செய்து கொள்ளவும். அதனை லஞ்ச் பாக்ஸிற்குள் அப்ளே செய்து, 10-12 நிமிடங்கள் ஊறவிடவும். அதன் பின்னர் பேப்பர் டவல் கொண்டு லஞ்ச் பாக்ஸை சுத்தப்படுத்தினால், துர்நாற்றமும் அதனுடன் சேர்ந்து வெளியேற்றப்படும்



Click it and Unblock the Notifications