Latest Updates
-
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா?
மைக்ரோவேவ் ஓவனை எளிதில் சுத்தம் செய்வது எப்படி? இதோ சில எளிய வழிகள்...!
தற்போது நிறைய வீடுகளில் மைக்ரோவேவ் ஓவன் பயன்பாடு வந்து விட்டது. மைக்ரோவேவ் ஓவனை சுத்தம் செய்வது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. மைக்ரோவேவ் ஓவனில் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகளைக் கூட நாம் சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் துர்நாற்றம் வீச ஆரம்பித்து விடும்.
எனவே மைக்ரோவேவ் ஓவனில் உள்ள எண்ணெய் பிசுக்கு, அழுக்கு மற்றும் துர்நாற்றம் நீங்க வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி வரலாம். மைக்ரோவேவ் ஓவனில் இருக்கும் துர்நாற்றத்தை நீங்கள் கண்டுக்காமல் விட்டால் அது காலப்போக்கில் உங்கள் உணவின் வாசனையை மாற்ற வாய்ப்புள்ளது. எனவே மைக்ரோவேவ் ஓவனை எப்படி எளிதான முறையில் சுத்தம் செய்யலாம் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

மைக்ரோவேவ் ஓவனில் ஏன் துர்நாற்றம் ஏற்படுகிறது?
உங்கள் மைக்ரோவேவ் ஓவனில் சிக்கி இருக்கும் உணவுத் துகள்கள், வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற உணவுகளின் வாசனை இதில் பாக்டீரியாக்கள் பெருகி வலுவான துர்நாற்றத்தை உண்டாக்குகிறது. மைக்ரோவேவ் ஓவனில் வைக்கக் கூடாத சில பிளாஸ்டிக் பொருட்களை வைத்து சமைப்பது உண்டு. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து உருகி மோசமான வாசனை ஏற்படும்.
மைக்ரோவேவ் ஓவனை எப்படி சுத்தம் செய்யலாம்?
மைக்ரோவேவ் ஓவனை நீங்கள் இரண்டு விதமாக சுத்தம் செய்யலாம். நீராவியை உருவாக்கி சுத்தம் செய்தல், டியோடரைஸ் முறை மூலம் சுத்தம் செய்யலாம்.
1. நீராவி முறை மூலம் சுத்தம் செய்தல்
லெமன் மற்றும் நீராவி முறை:
ஒரு கண்ணாடி பெளலில் 3-4 கப் சூடான நீரில் லெமன் சாற்றை பிழிந்து கொள்ளுங்கள். இப்பொழுது இந்த பெளலை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து பெளலில் உள்ள தண்ணீர் கொதிக்கும் வரை சூடுபடுத்த வேண்டும். 3-5 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும். நீராவி வெளியே வர ஆரம்பிக்கும். குறைந்தது ஒரு 5 நிமிடத்திற்காவது கதவை திறக்காதீர்கள். பிறகு ஒரு மைக்ரோ ஃபைபர் துணியை பயன்படுத்தி மைக்ரோவேவ் ஓவனை நன்றாக துடைத்து எடுங்கள். லெமன் சாற்றின் வாசனை மைக்ரோவேவ் ஓவனில் உள்ள கெட்ட துர்நாற்றத்தை போக்கி விடும்.
வினிகர் மற்றும் நீராவி முறை:
உங்கள் மைக்ரோவேவ் ஓவனில் எண்ணெய் பிசுக்கு அழுக்கு போன்றவை அதிகமாக இருந்தால் இதை பின்பற்றி வரலாம். மைக்ரோவேவ் ஓவனின் உட்புறத்தில் வொயிட் வினிகரை தெளிக்க வேண்டும். இப்பொழுது 15 நிமிடங்கள் வரை காத்திருங்கள். பிறகு மைக்ரோவேவ் ஓவனை சிறிய துணியைக் கொண்டு துடைத்து எடுங்கள். மைக்ரோவேவ் ஓவனில் உள்ள கண்ணாடி தகட்டை அகற்றி கழுவி நன்றாக உலர்த்தி சுத்தம் செய்ய வேண்டும்.
சோப்பு மற்றும் நீராவி முறை:
மைக்ரோவேவ் ஓவனில் ஒரு பெளலில் ஒரு கப் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீ ஸ்பூன் டிஷ் சோப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது மைக்ரோவேவ் ஓவனை 2 நிமிடங்கள் சூடாக்கி நீராவியை உருவாக்க வேண்டும். தண்ணீரை அதிகமாக கொதிக்க விட வேண்டாம். பிறகு 3 நிமிடங்கள் கழித்து துணியைக் கொண்டு மைக்ரோவேவ் ஓவனை துடைத்து எடுங்கள்.
ஸ்பான்ச் மற்றும் நீராவி முறை:
இந்த முறையில் ஸ்பான்சை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இப்பொழுது அதனுடன் ஒரு துளி டிஷ் சோப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு 1-3 அவுன்ஸ் தண்ணீரில் 3-5 துளிகள் அத்தியாவசிய எண்ணெய் சேர்த்து மைக்ரோவேவ் ஓவனில் தெளிக்க வேண்டும். பிறகு 2-3 நிமிடங்கள் அந்த ஸ்பான்சை கொண்டு மைக்ரோவேவ் ஓவனை சுத்தம் செய்யுங்கள்.
ஈரமான துணி மற்றும் நீராவி முறை:
இது ஒரு எளிய வகையில் சுத்தப்படுத்தும் முறையாகும். ஒரு சிறிய துண்டை எடுத்து தண்ணீரில் நனைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதை 1 - 2 நிமிடங்கள் மைக்ரோவேவ் செய்ய வேண்டும். பிறகு அந்த துணி குளிர்ந்த பிறகு மைக்ரோவேவ் ஓவனின் உட்புறத்தை துடைத்து எடுங்கள்.
2. டியோடரைஸ் முறை மூலம் மைக்ரோவேவ் ஓவனை சுத்தம் செய்தல்
பேக்கிங் சோடாவை பயன்படுத்துதல்:
பேக்கிங் சோடா வீட்டில் உள்ள துர்நாற்றங்களை உறிஞ்சுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உங்கள் மைக்ரோவேவ் ஓவனில் உள்ள கெட்ட துர்நாற்றத்தை நீக்கி நல்ல வாசனையுடன் இருக்க உதவுகிறது. ஒரு சிறிய பெளலில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பேக்கிங் சோடாவை கலந்து கொள்ளுங்கள். இந்த பெளலை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து 60 விநாடிகள் சூடுபடுத்த வேண்டும். இந்த பேக்கிங் சோடா வாசனை மைக்ரோவேவ் ஓவனில் உள்ள கெட்ட துர்நாற்றத்தை உறிஞ்சி விடும்.
காபி பொடியை பயன்படுத்துதல்:
மைக்ரோவேவ் ஓவனில் உள்ள கெட்ட துர்நாற்றத்தை நீக்க காபி பொடியை பயன்படுத்தி வரலாம். 2 டீ ஸ்பூன் காபி பொடியுடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து அந்த கிண்ணத்தை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சூடாக்க வேண்டும். பிறகு 3-4 நிமிடங்கள் கழித்து கிண்ணத்தை எடுத்து விட்டு மைக்ரோவேவ் ஓவனை துடைத்து எடுங்கள்.



Click it and Unblock the Notifications