Latest Updates
-
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க -
மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அத வெச்சு பஞ்சு போல சாப்ட்டான சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க.. -
சிம்ம ராசியில் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! -
இந்த 4 ராசி பெண்கள் ரொம்ப ரொம்ப பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
உங்க வீட்டில் எறும்பு தொல்லை தாங்க முடியலையா? இந்த ஈஸியான வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க...எல்லாம் ஓடிரும்!
மழைக்காலத்தில் கொசுத்தொல்லை அதிகமாக இருப்பது போல வெயில்காலம் வந்தால் எறும்புகளின் தொல்லை அதிகமாக இருக்கும். சுவரின் ஓரங்களில் ஊர்ந்து செல்வது எரிச்சலை ஏற்படுத்தும் அதே நேரத்தில், இவை சில கடுமையான சேதங்களையும் ஏற்படுத்தலாம்.
சில எறும்பு வகைகள் உணவுப் பொருட்களை முற்றுகையிடுவதுடன் நமக்கு கடுமையான அலர்ஜிகளை ஏற்படுத்தும் மேலும் சில எறும்புகள் நம்மை கடித்து உடலில் ஆங்காங்கே வீக்கங்களை ஏற்படுத்தலாம். இது மட்டுமின்றி எறும்புகள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இந்த தொல்லை தரும் எறும்புகளை விரட்டுவதற்கு சில எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளது, அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சுண்ணாம்பு
எறும்புகளை விரட்டும் வீட்டு வைத்தியங்களில் ஒன்று சுண்ணாம்பு. சுண்ணாம்பில் கால்சியம் கார்பனேட் உள்ளது, இது எறும்புகளைத் தடுக்க உதவுகிறது. எறும்புகள் நுழையும் இடங்களில் சிறிது சுண்ணாம்புத் தூளைத் தெளிக்கவும் அல்லது நுழைவாயிலில் சுண்ணாம்பு கோட்டை வரையவும்.
உங்கள் வீட்டில் எறும்புகள் வராமல் இருக்க சுண்ணாம்புக் கோடுகளை வரையவும், இதனால் பூச்சிகள் உள்ளே வராது. இந்த வரி எறும்புகள் உள்ளே வருவதை ஏன் தடுக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அது நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும்.
எலுமிச்சை
எறும்புகள் நுழையும் இடங்களில் எலுமிச்சையை பிழியவும் அல்லது எலுமிச்சை தோல்களை வைக்கவும். சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கப்பட்ட தண்ணீரில் உங்கள் வீட்டைத் துடைக்கலாம். எறும்புகளுக்கு எலுமிச்சை சாறின் வாசனை பிடிக்காது, அதனால் அவை அதிலிருந்து விலகி இருக்கும். புளிப்பு மற்றும் கசப்பான பொருட்கள் எறும்புகளைத் தடுக்கலாம்.
ஆரஞ்சு
ஆரஞ்சு எலுமிச்சைப் பழத்தைப் போன்றதுதான், அவை எறும்புகளை உங்கள் வீட்டிற்கு வரவிடாமல் தடுக்கின்றன. ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் மற்றும் சில ஆரஞ்சு தோல்களை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும், இது எறும்புகளை அகற்ற உதவும்.
இந்த பேஸ்டை எறும்புகள் நுழையும் இடங்களை சுற்றி தடவி பின்னர் துடைக்கவும். மேலும் நீங்கள் சமையலறை ஸ்லாப் அல்லது இந்த எறும்புகள் நுழையலாம் என்று நீங்கள் நினைக்கும் இடத்தில் ஆரஞ்சு தோல்களை வைக்கலாம். இது எறும்புகளுக்கு இயற்கையான தடுப்பாக செயல்படுகிறது.
மிளகு
எறும்புகள் அதிகம் வெறுக்கும் பொருட்களில் ஒன்று மிளகு. உங்கள் வீட்டிற்குள் எறும்புகள் நுழையும் இடங்களில் மிளகுத்தூளை தூவவும், இது எறும்புகளை திறம்பட விரட்ட உதவும். நீங்கள் மிளகுத்தூள் மற்றும் தண்ணீர் கரைசலை உருவாக்கி, எறும்புகள் நுழையும் பகுதிகளுக்கு அருகில் தெளிக்கலாம். மிளகு எறும்புகளைக் கொல்லாது, ஆனால் அவை உங்கள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும். நீங்கள் மிளகு கரைசலை தெளிக்கும் முன் அந்த இடத்தை சுத்தம் செய்ய மறந்து விடாதீர்கள்.
உப்பு
வீட்டிற்குள் எறும்புகள் நுழையும் மூலைகளில் உப்பைப் பரப்புவது எறும்புகளைத் தடுக்க உதவும். இயற்கையான முறையில் எறும்புகளை அகற்றுவதற்கான சிறந்த மற்றும் மலிவான வழிகளில் இதுவும் ஒன்றாகும். இதற்கு சாதாரண சாதாரண உப்பே போதும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் அதிக அளவு உப்பு சேர்த்து, கரைய வைக்கவும். இந்த கரைசலை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி எறும்புகள் நுழையும் இடங்களில் தெளிக்கவும்.
வெள்ளை வினிகர்
வெள்ளை வினிகரின் வாசனையை எறும்புகளால் பொறுத்துக் கொள்ள முடியாது. சம அளவு தண்ணீர் மற்றும் வெள்ளை வினிகர் சேர்த்து ஒரு கரைசலை உருவாக்கவும். அதில் சில துளிகள் நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக குலுக்கவும். இந்த கரைசலை சேமித்து எறும்புகள் நுழையும் இடங்களில் தெளிக்கவும். இதை தினமும் ஒரு முறை செய்யவும். இந்த வழிமுறையும் எறும்புகளைக் கொல்லாது ஆனால் அவற்றைத் தடுக்கும்.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை மற்றும் கிராம்புகளை வீட்டின் நுழைவாயிலிலும், எறும்புகள் நுழையுமிடம் என்று நீங்கள் நினைக்கும் பகுதிகளிலும் வைக்கவும். உங்கள் வீட்டை புத்துணர்ச்சியுடனும், சுத்தமாகவும் வைத்திருக்க இது ஒரு நல்ல வழி. இலவங்கப்பட்டை பெரும்பாலும் சிறந்த எறும்பு கட்டுப்பாட்டுப் பொருளாகக் கருதப்படுகிறது. எறும்புகள் கடுமையான வாசனையைத் தாங்காது என்பதால் இலவங்கப்பட்டை இயற்கையான விரட்டியாக செயல்படுகிறது.



Click it and Unblock the Notifications

