Latest Updates
-
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்!
மன நிம்மதி வேணுமா? அப்ப கலர் சைக்காலஜியை பயன்படுத்தி வீட்டுக்கு வண்ணம் தீட்டுங்க...
Home Painting Ideas In Tamil: வீடு அழகாக இருந்தால் நம்முடைய மனமும் மிக அழகாக இருக்கும். நம்முடைய மனதை அழகாக வைப்பதில் நம்முடைய வீட்டின் நிறமும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. நம் வண்ணங்களுக்கும் நம் உணர்வுகளுக்கும் நிறைய பங்கு உண்டு. வண்ணங்கள் எப்பொழுதுமே நம்முடைய உளவியல் சார்ந்தது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
கலர் சைக்காலஜி மூலம் நம் எண்ணங்களை மாற்றியமைக்க முடியும். எனவே உங்கள் வீட்டிற்கு வாங்கும் ஒவ்வொரு பொருட்கள் மீதும் கவனம் இருப்பது போல உங்கள் வீட்டின் வண்ணங்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் இருப்பது நல்லது. அதைப்பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

அமைதியான வண்ணங்களை தேர்ந்தெடுங்கள்
மனதை அமைதிப்படுத்துவதில் வண்ணங்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. எப்பொழுதும் வண்ணங்களை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வீட்டிற்கு நீலம் மற்றும் பச்சை நிற வண்ணங்களை தேர்ந்தெடுத்தால் அது உங்களுக்கு ஒரு குளிர்ச்சியான உணர்வை கொடுக்கும். நீலம் மற்றும் பச்சை போன்ற கலர்கள் மனதை குளிர்ச்சியாக வைக்க கூடிய நிறங்கள். எனவே உங்கள் வீட்டிற்கு பிடித்த நிறமாக இதை தேர்ந்தெடுக்கலாம்.
நீல நிறத்தின் சக்தி
நீல நிறம் உங்கள் மனதை அமைதிப்படுத்தக் கூடிய நிறமாகும். இது நரம்புகளை அமைதிப்படுத்துகிறது. உடலை தளர்த்துகிறது. உங்கள் மனதிற்கு ஓய்வையும் புத்துணர்ச்சியையும் அளிக்க கூடியது. எனவே உங்கள் வீட்டிற்கு நேவி ப்ளு, நீல நிற ஷேட்ஸ் போன்றவற்றை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.
பச்சை நிறம்
பச்சை நிறம் இயற்கையுடன் இணைக்கப்பட்ட ஒரு வகை நிறமாகும். இது உங்களுக்கு நிதானமான சூழலை தரக் கூடியது. புல் வெளி போன்ற வெளிர் பச்சை நிறங்கள் மற்றும் இருண்ட பச்சை நிறங்களை நீங்கள் தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். இது உங்கள் வீட்டின் செழுமையையும் ஆழத்தையும் அதிகரிக்கும்.
ஆடம்பரத்தை தரும் ஊதா நிறம்
ஊதா நிறம் என்றாலே ஆன்மீகம், படைப்பாற்றல் மற்றும் ஆடம்பரத்தை குறிக்கிறது. லாவெண்டர் போன்ற நிறங்கள் உங்களுக்கு அமைதியான உணர்வை தூண்டும். எனவே அந்த மாதிரியான ஆடம்பர நிறத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
பழுப்பு மற்றும் சாம்பல் நிறங்கள்
பழுப்பு மற்றும் சாம்பல் நிறங்கள் உங்களுக்கு நல்லிணக்க உணர்வை வழங்குகிறது. எனவே உங்கள் வீட்டிற்கு பழுப்பு மற்றும் சாம்பல் நிறங்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி வரலாம்.
ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்கள்
மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியையும், நேர்மறையான உணர்வையும் தருகிறது. எனவே வீட்டிற்கு ஒரு பளீச்சென்ற லுக்கை கொடுக்க நினைத்தால் இந்த ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.
அறைக்கு ஏற்ற வண்ணங்களை எப்படி தேர்ந்தெடுப்பது?
பெட்ரூம்
உங்கள் படுக்கையறைக்கு எப்பொழுதும் அமைதியான உணர்வை தரக் கூடிய வண்ணங்களை தேர்ந்தெடுங்கள். நீலம், லாவெண்டர் மற்றும் பச்சை போன்ற வண்ணங்களை தேர்ந்தெடுங்கள். இது உங்களுக்கு ஓய்வையும், சிறந்த தூக்கத்தையும் தருகிறது. படுக்கையறைக்கு ஆரஞ்சு மற்றும் சிவப்பு போன்ற வண்ணங்கள் வேண்டாம். இது உங்கள் தூக்கத்தில் தலையிடலாம்.
வரவேற்பறை
வீட்டின் வரவேற்பறை போன்ற அறையில் neutral கலர்கள், அமைதியான நீல நிற கலர்கள், வார்ம் கலர்கள் போன்றவற்றை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி வரலாம். இதுவும் உங்களுக்கு ஒரு வசதியான உணர்வை கொடுக்கும்.
வேலை பார்க்கும் அறை
நீங்கள் வேலை பார்க்கும் அறையில் உற்பத்தி திறனை அதிகரிக்க கூடிய கலர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். நீலம் மற்றும் பச்சை போன்ற குளிர்ச்சியான கலர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு பின்புறம் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு போன்ற ஆற்றல் நிற வண்ணங்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி வரலாம். இது உங்கள் படைப்பாற்றல் திறனை அதிகரிக்க உதவுகிறது.
பாத்ரூம்
பாத்ரூம் அறையில் அமைதியான நிறங்களை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். நல்ல கூலான நீல நிறங்கள், பச்சை, நியூட்ரல் பீச் கலர்கள் போன்ற கலர்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். மூங்கில் அமைப்புகள் அல்லது கூழாங்கல் அமைப்புகளை பாத்ரூமில் உருவாக்கலாம்.



Click it and Unblock the Notifications