Latest Updates
-
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம்
ஃபேன்-ல ஜில்லுன்னே காத்து வரமாட்டீங்குதா? இந்த ட்ரிக்ஸை ட்ரை பண்ணி பாருங்க...
Heatwave: கோடைக்காலம் என்பதால் அனைவரது வீடுகளிலும் 24 மணிநேரமும் ஃபேன் ஓடிக் கொண்டிருக்கும். என்ன தான் ஃபேன் ஓடினாலும், தற்போதைய வெப்ப அலை காரணமாக வீட்டிற்குள் வீசும் காற்று கூட மிகவும் அனலாக உள்ளது. வெயில் அதிகமாக உள்ளது என்று வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருந்தாலும், வெளியே அடிக்கும் வெயிலின் அளவு வீட்டினுள் தெரிகிறது.
குறிப்பாக இரவு நேரத்தில் தான் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும். மேலே ஃபேன் மட்டும் ஓடும் ஆனால் காற்று எதுவும் வந்த மாதிரி இருக்காது. இத்தகைய சூழ்நிலையில் பலரும் டேபிள் ஃபேனை வாங்கி பயன்படுத்துவார்கள். இருப்பினும் வாங்கிய சில நாட்களுக்கு அதிலிருந்து வீசும் காற்று ஜில்லென்று இருக்கலாம். ஆனால் வெயில் அதிகரிக்கும் போது அந்த டேபிள் ஃபேனில் இருந்து வீசும் காற்று கூட அனலாக இருக்கும்.

உங்கள் வீட்டிலும் இதே நிலைமை தானா? அப்படியானால் ஃபேனில் இருந்து ஜில்லென்று காற்று வர ஒருசில ட்ரிக்ஸ் உள்ளது. அந்த ட்ரிக்ஸ்களை பயன்படுத்தினால், நல்ல குளிர்ச்சியான காற்றைப் பெறலாம். இப்போது அந்த ட்ரிக்ஸ்களைக் காண்போம் வாருங்கள்.
வழி #1
வெப்பக் காற்று மேலெழும் போது, குளிர்ச்சியான காற்று தரையை ஒட்டி இருக்கும். எனவே உங்கள் டேபிள் ஃபேனில் இருந்து குளிர்ச்சியான காற்றைப் பெற விரும்பினால், அந்த ஃபேனை டேபிளில் வைத்து பயன்படுத்தாமல், தரையில் வைத்து பயன்படுத்துங்கள். இதனால் குளிர்ச்சியான காற்றினைப் பெறலாம்.
வழி #2
உங்கள் வீட்டில் உள்ள டேபிள் ஃபேனில் இருந்து ஏசி போன்ற குளிர்ச்சியான காற்றினைப் பெற விரும்பினால், ஒரு வாளி தண்ணீரை எடுத்து வந்து, டேபிள் ஃபேனின் முன்புறம் வைக்க வேண்டும். பின் அந்த அந்த வாளியில் சில ஐஸ் கட்டிகளைப் போட வேண்டும். பின் ஃபேனை ஆன் செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது டேபிள் ஃபேனில் இருந்து ஜில்லென்று காற்று வரும். இந்த ட்ரிக்ஸை இரவு தூங்கும் போது செய்து பாருங்கள், நிச்சயம் நல்ல ஜில் காற்றைப் பெறுவீர்கள்.
வழி #3
வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும் காலத்தில் வீட்டில் துவைக்கும் ஆடைகளை வாஷிங் மெஷினில் ட்ரை செய்யாமல், அந்த ஆடைகளை வீட்டினுள் கொடி கட்டி காய வைத்தால், சீலிங் ஃபேனில் இருந்து வீசும் காற்று சும்மா ஜில்லுன்னு சூப்பரா இருக்கும். வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள்.
வழி #4
உங்கள் வீட்டில் இரண்டு ஜன்னல் உள்ளதா? அப்படியானால் ஒரு ஜன்னலைத் திறந்து, அந்த ஜன்னலைப் பார்த்தவாறு டேபிள் ஃபேனை வைத்து, ஃபேனை ஆன் செய்யுங்கள். இப்படி செய்யும் போது ஒரு ஜன்னல் வழியாக குளிர்ந்த காற்று வரும் நிலையில் மற்றொரு ஜன்னல் வழியாக வெப்பக் காற்று வெளியேற்றப்படும். இந்த முறையால் நல்ல குளிர்ந்த காற்றைப் பெறுவதைத் தவிர, நல்ல தரமான காற்றினை வீட்டினுள் சுற்ற வைக்கலாம்.
வழி #5
இந்த வழி நல்ல ஜில்லென்ற காற்றினைப் பெற பெரிதும் உதவி புரியும். அதற்கு ஒரு லிட்டர் பாட்டிலில் நீரை நிரப்பி, அதை ஃப்ரீசரில் வைத்து நன்கு உறைய வைக்க வேண்டும். பாட்டில் நீர் நன்கு உறைந்ததும், ஈரத்துணியால் அந்த பாட்டிலை சுற்றி, டேபிள் ஃபேன் முன் வைத்து, ஃபேனை ஆன் செய்ய வேண்டும். இதனால் நல்ல குளிர்ச்சியான காற்றினைப் பெறலாம்.



Click it and Unblock the Notifications

