Latest Updates
-
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்..
பழைய தங்க நகைகளை வீட்டிலேயே எளிய முறையில் சுத்தம் செய்வது எப்படி-ன்னு தெரியுமா?
Gold Jewellery Cleaning Hacks In Tamil: பெண்களுக்கு நகைகளின் மீது எப்போதுமே ஆசை இருக்கும். அதுவும் தங்க நகைகளை அணிவது என்றால் ரொம்பவும் பிடிக்கும். அதனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தங்களுக்கு பிடித்த டிசைன்களில் தங்க நகைகளை வாங்கி வீட்டில் அடுக்கி வைப்பார்கள்.
ஆனால் தற்போது தங்கத்தின் விலை எளிதில் வாங்க முடியாத அளவில் அதிகரித்துள்ளது. இதனால் புதிய நகைகளை வாங்குவது என்பது எளிதானது அல்ல. அதேப் போல் வீட்டில் இருக்கும் நகைகளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டியும் உள்ளது.

சில நேரங்களில் தங்க நகைகளை அணிந்து கொண்டே இருப்பதால், அதில் எண்ணெய் மற்றும் அழுக்குகள் ஊடுருவி, தங்கத்தின் நிறத்தை மங்க வைத்துவிடும். இந்நிலையில் நகைகளை புதிது போன்று ஜொலிக்க வைக்க பல பெண்களும் தங்க நகைகளை கடைகளில் கொடுத்து பாலிஷ் செய்வார்கள். இப்படி நகைகளை பாலிஷ் செய்யும் போது, அதிலிருந்து சிறிது தங்கம் குறைய வாய்ப்புள்ளது.
தங்கம் விற்கும் விலைக்கு இப்படி தங்கம் குறைந்தால் எப்படி இருக்கும்? இதைத் தவிர்க்க சிறந்த வழி வீட்டிலேயே சுத்தம் செய்வது தான். ஆம், தங்க நகைகளை வீட்டிலேயே எளிய முறையில் சுத்தம் செய்யலாம். கீழே தங்க நகைகளை எப்படி பாதுகாப்பாகவும், ஈஸியான முறையிலும் புதிது போன்று ஜொலிக்க வைப்பது என்பதைக் காண்போம்.
வழி #1
ஸ்டெப் 1 : முதலில் ஒரு பெளலில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சில துளிகள் டிஷ்வாஷ் திரவத்தை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 2 : பின்பு அதில் தங்க நகைகளைப் போட வேண்டும். அந்நீரில் குறைந்தது 10-15 நிமிடம் நகைகளை ஊற வைக்க வேண்டும்.
ஸ்டெப் 3: 15 நிமிடம் நன்கு ஊறியதும், மென்மையான டூத் பிரஷ் கொண்டு நகைகளின் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். டூத் பிரஷ் இல்லாவிட்டாலும், பெயிண்ட் பிரஷ் கொண்டும் தேய்க்கலாம்.
ஸ்டெப் 4: நகைகளின் இடுக்குகளில் உள்ள அழுக்கை நீக்கியதும், ஓடும் நீரில் நகைகளை கழுவ வேண்டும். அதன் பின் அதில் உள்ள அதிகப்படியான நீரை துணியால் ஒத்தி உலர்த்த வேண்டும்.
வழி #2
வெளிர் நிற பீர் தங்க நகைகளில் உள்ள அழுக்குகளை திறம்பட வெளியேற்ற பெரிதும் உதவி புரியும். அதற்கு சிறிது வெளிர் நிற பீரை துணியால் நனைத்து, அந்த துணியால் தங்க நகைகளை தேய்க்க வேண்டும். பின் அதை உலர்த்த வேண்டும். பீரில் உள்ள ஆல்பா அமிலங்கள் தங்கத்தில் இருந்து அழுக்குகளை தனியே பிரித்தெடுக்கும்.
வழி #3
அம்மோனியா ஒரு சக்தி வாய்ந்த பொருள். இது தங்க நகைகளில் படிந்துள்ள அழுக்குகளை திறம்பட போக்கும். ஆனால் அம்மோனியாவைக் கொண்டு அடிக்கடி தங்க நகைகளை சுத்தம் செய்யக்கூடாது. இதைப் பயன்படுத்தும் போது, ஒரு பகுதி அம்மோனியாவில் 6 பகுதி நீரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் தங்க நகைகளைப் போட்டு, 30 நொடிகளில் எடுத்துவிட வேண்டும். அதன் பின் அந்த நகையை ஓடும் நீரில் கழுவ வேண்டும். அப்படி ஓடும் நீரில் கழுவும் போது வடிகட்டியைப் பயன்படுத்துங்கள். இதனால் நகை நழுவி விழுவதைத் தடுக்கலாம். பின்பு அந்த நகையை துணியால் துடைக்க வேண்டும்.
நினைவில் கொள்ள வேண்டியவை
தங்க நகைகளை வீட்டில் சுத்தம் செய்யும் போது, அதை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பொருளை கவனிக்க வேண்டும். ப்ளீச் போன்ற சுத்தப்படுத்தும் பொருட்களை பயன்படுத்தும் போது, அதை சிறு பகுதியில் பரிசோதனை செய்த பின் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. மேலும் அழுக்கை தேய்க்க பயன்படுத்தும் பிரஷ் மிகவும் மென்மையானதாக இருக்க வேண்டும். இதனால் அதில் சேதம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











