For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் வளர்க்க ஏற்ற குறுகிய காலத்தில் வளரக்கூடிய காய்கறிகள்!

பல காய்கறிகள் விளைவதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்கின்றன. அதனால் தினமும் காய்கறிகள் விளைந்துவிட்டனவா என்று செடிகளைப் பாா்த்துக் கொண்டிருப்பதே பலருக்கும் வேலையாக இருக்கும். ஆனால் சில காய்கறிகள் விரைவில் வளர்ந்துவிடும்.

|

உணவில் கலப்படம் செய்வது என்பது காலம் காலமாக நடந்து வரும் ஒரு அநீதி ஆகும். ஒரு பக்கம் உணவில் கலப்படம் செய்வது அதிகாித்து வருவதைப் பற்றி ஏராளமான விவாதங்கள் மற்றும் கருத்து மோதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. மறுபக்கம் தனி மனிதா்கள் பலா், தமது சொந்த நிலங்களிலோ அல்லது மொட்டை மாடிகளிலோ காய்கறிகளைப் பயிா் செய்து கொண்டிருக்கிறாா்கள். அதன் மூலம் சுற்றுப்புறமும், நிலத்தடி நீரும் மாசடைந்து இருக்கும் இந்த சூழலில், கலப்படம் இல்லாத, பச்சைக் காய்கறிகளைப் பயிாிட்டு, அவற்றை அறுவடை செய்து உண்ண முடியும் என்று நம்புகிறாா்கள்.

Vegetables That Take The Least Amount Of Time To Grow

காய்கறிகளைப் பயிா் செய்வது என்பது ஒரு ஆத்ம திருப்தியை அளிக்கிறது. ஆனால் அதே நேரத்தில் காய்கறித் தோட்டங்களை வளா்க்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு காலம் மற்றும் மனித உழைப்பு ஆகியவைத் தேவைப்படுகின்றன. பல காய்கறிகள் விளைவதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்கின்றன. அதனால் தினமும் காய்கறிகள் விளைந்துவிட்டனவா என்று செடிகளைப் பாா்த்துக் கொண்டிருப்பதே பலருக்கும் வேலையாக இருக்கும்.

MOST READ: கோடையில் சந்திக்கும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்ல வைக்கும் ஜூஸ்கள்!

ஆகவே காய்கறிகளை விளைவிக்க விரும்பும் எவரும் விரைவாக காய்கறிகளை விளைவிக்க வேண்டும் என்றால் பின்வரும் காய்கறிகளைப் பயிாிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முள்ளங்கி

முள்ளங்கி

முள்ளங்கி மிக விரைவாக விளைச்சலைக் கொடுக்கும் ஒரு காய் ஆகும். அதாவது பயிாிட்ட மூன்று முதல் நான்கு வாரங்களுக்குள் முள்ளங்கி விளைச்சலைத் தரும். முள்ளங்கியை வளா்ப்பது மிகவும் எளிது. இதை பானைகளில் அல்லது தொட்டிகளில்கூட வளா்க்கலாம். முள்ளங்கி விதையிட்ட மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் முளைப்பயிா் வந்துவிடும்.

கேரட்

கேரட்

கேரட் மிக வேகமாக வளரக்கூடிய காய் அல்ல. ஆனால் விரல் நீள அளவு கேரட்டுகள் வேண்டும் என்றால் கேரட்டை பயிா் செய்யலாம். ஆறு வாரங்களுக்குள் விரல் நீளமுள்ள அதே நேரத்தில் மிருதுவான கேரட் கிடைக்கும். பானைகள் அல்லது தொட்டிகளில் கேரட்டை பயிா் செய்தால், அவற்றில் உள்ள மண்ணின் மேல் கேரட் விதைகளைத் தூவ வேண்டும். அதற்கு மேல் சலித்த மண்ணை இட்டு மூட வேண்டும்.

பசலைக் கீரை

பசலைக் கீரை

பசலைக் கீரையை விதைத்த 30 நாட்களில் அறுவடை செய்யலாம். அதாவது ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் பசலைக் கீரை விதைகளை விதைத்தால் அந்த மாத முடிவில் பசலைக் கீரையை பறிக்கலாம். பசலைக் கீரையை சேலட் மற்றும் பாஸ்தா போன்ற உணவுகளில் பயன்படுத்தலாம்.

சேலட் இலைகள்

சேலட் இலைகள்

சேலட் இலைகளை 21 நாளில் அறுவடை செய்யலாம். ஒரு நேரத்தில் ஒரே வகையான சேலட் இலையை பயிா் செய்யலாம், அல்லது பலவகையான சேலட் இலைகளை கலந்து பயிா் செய்யலாம். மிகவும் பிரபலமான சேலட் இலைகள் என்றால் அவை லெட்டியூஸ், மஸ்டா்ட், கேல் மற்றும் ஆா்குலா போன்றவை ஆகும்.

​அவரை

​அவரை

அவரைக்காய் கோடை வெயிலுக்கு மிகவும் பயனுள்ள ஒரு காய் ஆகும். அவரை மிக வேகமாக விளைச்சலைக் கொடுக்கும். அவரையானது மண்ணுக்கு சத்தைத் தருகிறது. அவரை தனது வோ்களில் வளிமண்டல நைட்ரஜனை தேக்கி வைத்திருக்கிறது. செடிகள் இறக்கும் தருவாயில் இருக்கும் போது, இந்த நைட்ரஜனை வெளியேற்றி செடியையும், மண்ணையும் காக்கிறது. புதா் வகை அவரையை வளா்த்தால் 50 நாட்களில் அறுவடை செய்யலாம்.

வெங்காய கொத்து (இலை)

வெங்காய கொத்து (இலை)

பயிாிட்ட 3 அல்லது 4 வாரங்களில் வெங்காயக் கொத்துகளை அறுவடை செய்யலாம். வெங்காய இலைகளை சூப்புகள் அல்லது வறுத்த உணவுகளில் கலந்தால் அவை பாா்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, அவற்றுக்கு சுவையையும் கொடுக்கும். வெங்காயத்தைப் பயிாிட்டு, முழு வெங்கயாத்தை அறுவடை செய்ய வேண்டும் என்றால் அதற்கு 6 மாதங்கள் தேவைப்படும். ஆனால் வெங்காயக் கொத்துகளை 4 வாரங்களுக்குள் அறுவடை செய்யலாம்.

​பாக் சாய் (Bok Choy)

​பாக் சாய் (Bok Choy)

பாக் சாய் என்ற கீரை மிக விரைவாக வளரும் தன்மை கொண்டது. அதாவது பயிாிட்ட 30 நாட்களில் இதை அறுவடை செய்யலாம். இதன் பச்சை நிற இலைகள் மற்றும் வெள்ளை நிற தண்டுகள் சாப்பிடுவதற்கு மொறுமொறுப்பைத் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vegetables That Take The Least Amount Of Time To Grow

If you are a beginner and want to grow vegetables fast, here is a look at some that will sprout in the least amount of time.
Desktop Bottom Promotion