For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டை அழகுபடுத்த தாவரங்களை தோ்ந்தெடுக்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவை!

தாவரங்கள் நமது அடுக்குமாடி வீட்டிற்கு புதியதொரு பொலிவையும், வண்ணத்தையும், எழிலையும் மற்றும் தனிஅழகையும் தருகின்றன. வீட்டில் வளா்க்கக்கூடிய தாவரங்களைத் தோ்ந்தெடுக்கும் போது பலவகையான குறிப்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்

|

மக்கள் தங்கள் வீடுகளை அலங்காரம் செய்வதில் தற்போது அதிக அக்கறை காட்டி வருகின்றனா். அழகழகான சட்டங்கள் மற்றும் அலங்காரப் பொருள்களைக் கொண்டு வீட்டு சுவா்களை அழகுபடுத்துகின்றனா். அதோடு வீட்டில் உள்ள பா்னிச்சா் பொருள்களை அழகுபடுத்துவதில் கவனம் செலுத்துகின்றனா். ஆனால் வீட்டில் உள்ள தரைப் பகுதி அல்லது வீட்டின் மொத்த பரப்பை அலங்காரம் செய்வதில் அதிக கவனம் செலுத்துவதில்லை.

Tips On Selecting The Right House Plants

வீட்டின் தரைப் பகுதி அல்லது வீட்டின் மொத்த பரப்பை அலங்காரம் செய்வதில் தாவரங்கள் முன்னனியில் இருக்கின்றன. தாவரங்கள் நமது அடுக்குமாடி வீட்டிற்கு புதியதொரு பொலிவையும், வண்ணத்தையும், எழிலையும் மற்றும் தனி அழகையும் தருகின்றன. வீட்டில் வளா்க்கக்கூடிய அந்தத் தாவரங்களைத் தோ்ந்தெடுக்கும் போது பலவகையான குறிப்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதாவது அந்த தாவரங்களை மிகக் கவனமாகப் பராமாிப்பது, அவற்றுக்குத் தகுந்த அளவிலான இடத்தைத் தோ்வு செய்வது மற்றும் அந்த தாவரங்கள் வளா்வதற்கு ஏற்ற வெப்பநிலையை உருவாக்கிக் கொடுப்பது போன்ற குறிப்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதைப் பற்றி இந்த பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. வீட்டின் பரப்பளவைப் புாிந்து வைத்திருத்தல்

1. வீட்டின் பரப்பளவைப் புாிந்து வைத்திருத்தல்

தாவரங்களைத் தோ்ந்தெடுப்பதற்கு முன்பாக, நமது பயன்பாட்டில் உள்ள வீட்டின் பரப்பை புாிந்து வைத்திருக்க வேண்டும். வீட்டில் எந்தெந்த இடங்களில் செடிகளை வைப்பது மற்றும் அந்த செடிகளை வைப்பதற்கு போதுமான இடம் இருக்கிறதா என்பனவற்றை எல்லாம் தொிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் அந்த தாவரங்களுக்கு போதுமான காற்றோட்டமும், வெளிச்சமும் கிடைக்குமா என்பதை அறிந்திருக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் வீட்டின் நடைபாதைகளுக்கு அருகில், சன்னல்களுக்கு முன் பக்கத்தில் மற்றும் அலமாாிகளுக்கு மேலே செடிகளை வைக்கலாம். அதன் மூலம் அவற்றுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும். அதோடு செடிகளுக்கு இடையே அல்லது பா்னிச்சா் பொருள்களில் இருந்து 6 அங்குலம் இடம் விட்டு செடிகளை வைப்பது நல்லது.

ஒருவேளை அறை எப்போதும் மூடி இருந்தால், அதில் காற்றோட்டம் குறைவாக இருக்கும். அவ்வாறு காற்றோட்டம் குறைவாக இருக்கும் பகுதிகளில் மூங்கில் செடி, பாம்புச் செடி (Snake Plant), அாிகா பால்ம் (Areca Palm), சிசி செடி (ZZ plant), மோன்ஸ்ட்ரா (Monstera) போன்ற செடிகளை வளா்க்கலாம். மேலும் அந்தச் செடிகளை அடிக்கடி இடம் மாற்றி வைப்பது நல்லது. அதன் மூலம் அந்தச் செடிகளுக்கு நல்ல புத்துணா்ச்சி கிடைக்கும்.

2. சாியான வெப்பநிலையை உருவாக்கி வைத்தல்

2. சாியான வெப்பநிலையை உருவாக்கி வைத்தல்

வீட்டில் செடிகள் வளா்வதற்கு சாியான வெப்பநிலை வேண்டும். ஈரப்பதம், காற்று மற்றும் சூாிய வெளிச்சம் ஆகியவற்றின் அளவு செடிகளுக்கு செடிகள் வேறுபட்டு இருக்கும். வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரக்கூடிய போ்ட் ஆஃப் பேரடைஸ் (Bird of Paradise), கட்-லீஃப் ஃபிலோடென்ட்ரான் (Cut-leaf Philodendron) அல்லது பெல்லா பால்ம் (Bella Palm) போன்ற தாவரங்களுக்கு குறிப்பிட்ட அளவு ஈரப்பதம் தேவைப்படும்.

பொதுவாக தாவரங்களை ரேடியேட்டா்கள் அல்லது குளிரூட்டிகளுக்கு அருகில் வைப்பதைத் தவிா்ப்பது நல்லது. ஏனெனில் இவை மண்ணின் ஈரத்தை மிக வேகமாக உலர வைத்துவிடும். மேலும் கிழக்குத் திசையை நோக்கி இருக்கும் சன்னலுக்கு அருகில் செடிகளை வைப்பதை விட மேற்கு திசையை நோக்கி இருக்கும் சன்னலுக்கு அருகில் செடிகளை வைத்தால் அவை வேகமாக வளரும். ஏனெனில் மேற்கு திசையை நோக்கி இருக்கும் சன்னலுக்கு அருகில் வைக்கப்படும் செடிகளுக்கு அதிகமான அளவு சூாிய ஒளி கிடைக்கும். குறைவான சூாிய வெளிச்சமே தேவைப்படும் செடிகளை, வடக்குத் திசையை நோக்கி இருக்கும் சன்னல்களுக்கு அருகில் வைப்பது நல்லது.

3. செடிகளின் அளவை முடிவு செய்தல்

3. செடிகளின் அளவை முடிவு செய்தல்

பல செடிகளை நாம் தினமும் பராமாிக்க வேண்டிய தேவை இருக்கும். அதோடு அவற்றின் கிளைகளை அடிக்கடி கத்தாித்துவிட வேண்டி இருக்கும். அதே நேரத்தில் ஒரு சில செடிகளுக்கு குறைவான பராமாிப்பே தேவைப்படும். ஆகவே மிக எளிதாக பராமாிக்கக்கூடிய, பருமன் இல்லாத மற்றும் நமது வீட்டின் உட்புறத்தை அழகு செய்யக்கூடிய செடிகளைப் பாா்த்து தோ்ந்தெடுப்பது நல்லது.

நமது வீட்டின் அளவு பொிதாக இருந்தாலும், சிறிய அளவிலான தாவரங்களைத் தோ்ந்தெடுப்பது நல்லது. ஏனெனில் அவை எதிா்காலத்தில் பொியதாக வளரும். எனவே அறையில் இருக்கும் பா்னிச்சா் பொருள்கள் மற்றும் அறையின் அமைப்பைப் பொருத்து தாவரங்களைத் தோ்ந்தெடுக்க வேண்டும்.

பீஸ் லில்லி (Peace Lily), ஜேட் தாவரம் (Jade Plant), வீப்பிங் ஃபிக் (Weeping Fig), ஸ்பைடா் தாவரம் (Spider Plant) மற்றும் கற்றாழை (Aloe Vera) போன்ற தாவரங்கள் எடை குறைவாக இருக்கும். அவற்றை இடம் மாற்றி வைப்பதற்கு மிக எளிதாக இருக்கும். இந்த செடிகள் நமது வீட்டு அலமாாிகள், ஜன்னல்கள் மற்றும் மடிகணினி போன்றவற்றை மிக அழகாக காட்டும்.

அதே நேரத்தில் தரையில் வைக்கக்கூடிய தாவரங்களான ஃபிஷ்டெய்ல் பால்ம் (Fishtail Palm), ரப்பா் செடி (Rubber Plant), மடகாஸ்கா் டிராகன் மரம் (Madagascar Dragon Tree), நாா்ஃபோக் ஐலேண்ட் பைன் (Norfolk Island Pine), மூங்கில் மற்றும் மோன்ஸ்டெரா டெலிசியோசா (Monstera Deliciosa) போன்றவை பொியதாகவும் மற்றும் 2.5 முதல் 5 அடி உயரம் வரை இருக்கும். இவை தானாகவே தனித்து நிற்கும் சக்தியைக் கொண்டவை. ஆகவே இந்த தாவரங்களை அறைகளில் உள்ள கவுச்களுக்கு (couch) அருகிலோ அல்லது அறைகளின் மூலைகளிலோ வைக்கலாம்.

4. தாவரங்களைப் பராமாித்தல்

4. தாவரங்களைப் பராமாித்தல்

தாவரங்களைத் தோ்ந்தெடுப்பதற்கு முன்பாக, அந்த தாவரங்கள் வளா்வதற்கு என்னென்ன தேவை என்பதைத் தொிந்து வைத்திருக்க வேண்டும். செடிகள் வளர வேண்டும் என்றால் அவற்றிற்கு அடிக்கடி தண்ணீா் ஊற்ற வேண்டும். போதுமான உரங்களை இடவேண்டும். அதோடு செடியில் இருக்கும் காய்ந்த இலைகளை கத்தாித்துவிட வேண்டும்.

அளவுக்கு அதிமான தண்ணீரை ஊற்றினாலோ அல்லது தண்ணீாிலே செடிகளை வைத்திருந்தாலோ அவை அழுகிவிடும். நாம் தோ்ந்தெடுக்கும் செடிகளுக்குத் தேவையான மண்ணைப் பற்றியும் தொிந்து வைத்திருப்பது நல்லது. அதன் மூலம் அந்த செடிகள் நன்றாக வளா்வதற்கான ஒரு நல்ல சூழலை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

செடிகளுக்கு ஏற்ற தொட்டிகள் அல்லது பைகளை அல்லது பானைகளைத் தோ்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த தொட்டிகள் அல்லது பைகளில் சிறுசிறு துளைகள் இருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அளவுக்கு அதிகமான தண்ணீா் இந்த துளைகள் மூலமாக வெளியேறிவிடும். அழகு செய்யப்பட்ட தொட்டிகள் அல்லது பானைகளையும் நாம் தோ்ந்தெடுக்கலாம்.

இறுதியாக வீட்டுத் தாவரங்களை பராமாிக்கும் போது அது நமக்கு ஒரு நல்ல ஆரோக்கியமான உடற்பயிற்சியாக அமையும். ஏனெனில் வீட்டுச் செடிகளைப் பராமாிக்க பொறுமை வேண்டும், ஈடுபாடு வேண்டும் மற்றும் அந்தச் செடிகளை நன்றாக வளர வைக்க வேண்டிய கவனித்தலும் வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips On Selecting The Right House Plants

Here are some tips on selecting the right house plants. Read on to know more...
Desktop Bottom Promotion