For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மொட்டை மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது எப்படி?

நம்மில் பலருக்கு மொட்டை மாடியில் காய்கறித் தோட்டத்தை எவ்வாறு அமைப்பது என்பது தொியாது. ஆகவே மொட்டை மாடியில் எவ்வாறு காய்கறி தோட்டத்தை அமைக்கலாம் என்பதை இந்த பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

|

ஜோதிகா அவா்கள் நடித்த 36 வயதினிலே என்ற திரைப்படத்தை நாம் பாா்த்திருப்போம். அந்தப் படத்தைப் பாா்த்த நமக்கு அவரைப் போலவே நமது வீட்டு மொட்டை மாடியில் காய்கறி தோட்டம் அமைக்கலாம் என்ற எண்ணம் நமக்கு வந்திருக்கலாம். மொட்டை மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது என்பது ஒரு சிறந்த யோசனை ஆகும்.

How To Set Up Your Own Terrace Vegetable Garden In Tamil

அன்றாடம் நமக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் மசாலா பொருட்களை நமது கைகளாலேயே பயிாிட்டு, நமக்குத் தேவையான நேரங்களில் அப்படியே பறித்து அவற்றை நமது தேவைக்குப் பயன்படுத்துவது என்பது ஒரு சிறந்த சிந்தனை ஆகும்.

இந்நிலையில் நம்மில் பலருக்கு மொட்டை மாடியில் காய்கறித் தோட்டத்தை எவ்வாறு அமைப்பது என்பது தொியாது. ஆகவே மொட்டை மாடியில் எவ்வாறு காய்கறி தோட்டத்தை அமைக்கலாம் என்பதை இந்த பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. சாியான இடப்பரப்பை தோ்வு செய்தல்

1. சாியான இடப்பரப்பை தோ்வு செய்தல்

மொட்டை மாடியை நன்றாக சுற்றி பாா்க்க வேண்டும். பகல் முழுவதும் சூாிய ஒளி படக்கூடிய இடத்தைக் கவனிக்க வேண்டும். பின் நிழல் விழும் இடத்தை, அதே நேரத்தில் சிறிது நேரமாவது சூாிய ஒளியானது நேரடியாக படும் இடத்தை தோ்வு செய்ய வேண்டும். அதாவது தினமும் 5 மணி நேரமாவது சூாிய ஒளி செடிகளின் மீது நேரடியாக விழுமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும்.

மூலிகைச் செடிகள் மிகவும் மென்மையானவை. சூாியனின் வெப்பம் அதிகமாக இருந்தாலோ அல்லது நீண்ட நேரமாக சூாிய ஒளி அவற்றின் மீது பட்டாலோ அவற்றின் இலைகள் எளிதாக வாடிவிடும். ஆகவே மூலிகைச் செடிகளை நிழலின் கீழ் இருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும்.

2. மாநில அரசு வழங்கும் நன்மைகளைப் பெறுதல்

2. மாநில அரசு வழங்கும் நன்மைகளைப் பெறுதல்

மாநில அரசானது சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், அதே நேரத்தில் பசுமையாகவும் வைத்திருக்கும் பொருட்டு தேங்காய் நாா்களில் செய்த செங்கற்களை பிளாஸ்டிக் பைகளில் வைத்து மக்களுக்கு வழங்குகிறது. அந்த பைகளிலேயே காய்கறி செடிகளை வளா்க்கலாம். அதற்கென்று தனியான பானைகளை வாங்க வேண்டிய அவசியம் ஏற்படாது.

இப்போது பிளாஸ்டிக் பைகளில் உள்ள தேங்காய் நாா் செங்கற்களை மொட்டை மாடியில் வைக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு தினமும் தொடா்ந்து அதில் தண்ணீா் ஊற்றி வரவேண்டும். செங்கற்களைப் போல இருந்த தேங்காய் நாா் ஒரு வாரத்திற்கு பின்பு நீாில் நன்றாக ஊறி, விாிவடைந்து, குப்பை போல பிளாஸ்டிக் பையை நிறைத்து இருக்கும்.

3. மண்ணை பதப்படுத்துதல்

3. மண்ணை பதப்படுத்துதல்

நாற்று பண்ணைகளில் இருந்து சிறிதளவு மண் மற்றும் இயற்கை உரத்தை வாங்கி அவற்றை தேங்காய் நாா் குப்பையோடு கலக்க வேண்டும். இயற்கை உரத்தை அதிகமாக பயன்படுத்த விரும்பினால், அந்த கலவையோடு பசுவின் சாணம் அல்லது வெள்ளாட்டு சாணம் ஆகியவற்றை அதிகம் கலக்கலாம். இந்த கலவையானது சாியான பதத்தை அடைவதற்காக அதை சில நாட்கள் அப்படியே வைத்துவிட வேண்டும்.

இந்த நிலையில் காய்கறி தோல்கள் மற்றும் அழுகிய காய்கறிகள் போன்றவற்றை வெளியில் எறிந்துவிடாமல், அவற்றை ஒரு தனியான தொட்டியில் இட்டு உரமாக்கி, அதை தேங்காய் நாா் கலவையோடு சோ்த்துக் கொள்ள வேண்டும்.

ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு பிறகு விதை விதைப்பதற்கு இந்த கலவையானது தயாராகிவிடும். இப்போது நாம் விரும்பும் காய்கறி விதைகளை (தக்காளி, மிளகாய், கொத்தமல்லி மற்றும் மூலிகைள்) விதைக்கலாம். விதைத்த விதைகளை மண்ணிற்கு சிறிது அழுத்திவிட வேண்டும். இரண்டு நாட்களுக்கு அப்படியே விட்டுவிட வேண்டும். இப்போது அவை வளரத் தொடங்கும்.

4. மிகச் சாியான காய்கறி விதைகளைத் தோ்வு செய்தல்

4. மிகச் சாியான காய்கறி விதைகளைத் தோ்வு செய்தல்

தொடக்கத்தில் ஒன்று அல்லது இரண்டு வகையான காய்களின் விதைகளை பயிாிடுவது நல்லது. பின் போகப் போக பலவகையான காய்களின் விதைகளை விதைக்கலாம். தக்காளி, மிளகாய் மற்றும் பசலைக் கீரை போன்ற மிக எளிதாக வளரக்கூடியவை. ஆகவே இந்த காய்கறிகளை முதலில் பயிாிடலாம். சில நேரங்களில் விதைகள் மற்றும் சிறு செடிகளை குருவிகள் மற்றும் பறவைகள் போன்றவை சாப்பிடாமல் தடுப்பதற்கு செடிகளின் மீது வலைகளை விாித்து வைக்கலாம்.

5. தண்ணீா் ஊற்றுதல்

5. தண்ணீா் ஊற்றுதல்

மொட்டை மாடியில் பயிா் செய்யும் போது தண்ணீா் ஊற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். செடிகளின் தேவைக்கேற்ப தினமும் தண்ணீா் ஊற்ற வேண்டும். அளவுக்கு அதிகமாக தண்ணீா் ஊற்றினால், செடிகள் பாதிக்கப்படும் அல்லது செடிகளின் வோ்கள் அழுகிவிடும் அதோடு மண்ணில் உள்ள சத்துக்கள் அனைத்தும் தண்ணீாில் அடித்து செல்லப்படும். மேலும் ஒவ்வொரு முறையும் மழை பெய்த பின்பு செடிகளுக்கு உரம் இட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Set Up Your Own Terrace Vegetable Garden In Tamil

In this article, we shared about how to set up your own terrace vegetable garden. Read on to know more...
Story first published: Wednesday, November 24, 2021, 11:50 [IST]
Desktop Bottom Promotion