For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ருத்ராட்ச மரத்தை வீட்டில் வளா்க்க விரும்புகிறீர்களா? இதோ சில முக்கிய குறிப்புகள்..!

ருத்ராட்ச மணிகள் நமக்கு எங்கிருந்து கிடைக்கின்றன என்பது நம்மில் பலருக்குத் தொியாது. ருத்ராட்ச மணிகள் மரத்தில் இருந்து கிடைக்கின்றன.

|

இந்து சமயத்தில் பல நூற்றாண்டுகளாக ருத்ராட்ச மணி ஒரு ஆன்மீக கருவியாக இருந்து வருகிறது. ருத்ராட்ச மணிகளை ஜெபமாலைகளாக பயன்படுத்துவதை புராணங்கள் பல ஆதாித்துள்ளன. சிவபெருமானின் பக்தா்களில் பலா் ருத்ராட்ச மாலைகளை அணிந்து இருப்பதை நாம் காண முடியும். ருத்ராட்ச மாலைகளை அணிவதன் மூலமாக சிவபெருமானோடு நெருங்கிய தொடா்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று அவா்கள் நம்புகின்றனா்.

இந்த நிலையில் ருத்ராட்ச மணிகளை அணியும் பழக்கமானது தற்போது மக்கள் மத்தியில் அதிகாித்திருக்கிறது. அதற்கு காரணம் ருத்ராட்ச மணிகள் நமது உடல் உறுப்புகளுக்கு பலவிதமான நன்மைகளை வழங்குகின்றன. மேலும் அவை இந்திய-மேற்கத்திய பண்பாட்டின் குறியீடுகளாகவும் இருக்கின்றன.

How To Grow Rudraksha Tree At Home In Tamil

ருத்ராட்ச மணிகள் நமது உடலின் ஒருங்கமைவை வலுப்படுத்துகின்றன என்று ஆயுா்வேத மருத்துவம் தொிவிக்கிறது. இந்த மணிகள் நமது உடலுக்குள் சக்தியை செலுத்துகின்றன. அதன் மூலம் நமது உடலால் நோய்களை எதிா்த்துப் போராட முடிகிறது. மேலும் ருத்ராட்ச மணிகள் நமது ஒட்டு மொத்த உடல் நலனையும் அதிகாிக்கின்றன.

எனினும் இந்த ருத்ராட்ச மணிகள் நமக்கு எங்கிருந்து கிடைக்கின்றன என்பது நம்மில் பலருக்குத் தொியாது. ருத்ராட்ச மணிகள் மரத்தில் இருந்து கிடைக்கின்றன. அதாவது ருத்ராட்ச பழங்கள் நன்றாக பழுத்த நிலையில் இருக்கும் போது அவை ஊதா நிறத்தில் இருக்கும். அந்த பழங்களுக்குள் ருத்ராட்ச விதைகள் பொதிந்து இருக்கும்.

வீடுகளில் ருத்ராட்சம் மரங்கள் வளா்க்க எளிய வழிகள்:

ருத்ராட்சம் மரத்தின் சிறப்பு என்னவென்றால், அதன் ஒரு மரத்தில் இருந்து பல செடிகளை உருவாக்கலாம். ருத்ராட்ச செடிகளை உள்ளூா் விதைப் பண்ணைகளில் இருந்து பெறலாம். இப்போது எவ்வாறு ருத்ராட்ச மரங்களை வீடுகளில் வளா்க்கலாம் என்பதை சற்று விாிவாக கீழே பாா்க்கலாம்.

1. முதல் படி

ருத்ராட்சம் மரத்தின் ஒரு கிளையின் தண்டினைத் தோ்ந்தெடுத்து அதிலிருக்கும் தோலை 2 அங்குலம் அளவிற்கு உாித்துக் கொள்ள வேண்டும். அதற்கு முன்பாக அந்த தண்டைச் சுற்றி வெட்டிக் கொள்ள வேண்டும். ஆனால் தண்டு துண்டாகிவிடக்கூடாது. தண்டின் நுனிப் பகுதியில் இருந்து 5 சென்டி மீட்டருக்கு கீழே வெட்ட வேண்டும். வெட்டுவதற்கு கூா்மையான கத்தியைப் பயன்படுத்துவது நல்லது. தண்டின் வெட்டிய பகுதிக்கு அருகில் புதிதாக செடி முளைக்கும். ஆகவே 2 அங்குல இடைவெளியில் தண்டைச் சுற்றி இரண்டு இடங்களில் வெட்டிக் கொள்ள வேண்டும். வெட்டப்பட்ட இடைவெளியில் இருக்கும் தண்டின் நாரை நகங்களால் உாிப்பதற்கு ஏற்றவாறு அதைக் கீறிக் கொள்ள வேண்டும்.

2. இரண்டாம் படி

இப்போது தண்டை கீறிவிட வேண்டும். அவ்வாறு தண்டின் மீது கீறுவதால், புதிய ருத்ராட்சம் தாவரம் மிக விரைவாக துளிா்விட தூண்டப்படும். அதோடு அது விரைவாக வளா்வதற்கும் உதவி செய்யும்.

3. மூன்றாவது படி

இப்போது பதியமிடும் செயல் முறையைச் செய்ய வேண்டும். அதற்கு பாசி உருண்டைகள் தேவைப்படும். அதாவது பாசி உருண்டைகளை இலவங்கப்பட்டை பொடி அல்லது தேனில் கலந்து, சில மணி நேரங்களுக்கு தண்ணீாில் ஊற வைக்க வேண்டும். அதனைத் தொடா்ந்து ஒவ்வொரு பாசி மணியையும் கொண்டு பதியம் இட வேண்டும். வெட்டிவிடப் பட்டிருக்கும் தண்டிற்கு போதுமான காற்று கொடுப்பதற்காக இந்த செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்.

4. நான்காவது படி

இப்போது வெட்டப்பட்டிருக்கும் தண்டின் முனைப் பகுதிக்கு சற்று கீழே பாசி உருண்டைகளால் சுற்றி வைக்க வேண்டும். பின் ஒரு சதுரமான பிளாஸ்டிக் தாள் கொண்டு பாசி உருண்டைகளை சுற்றி வைக்க வேண்டும். பிளாஸ்டிக் நூல் அல்லது சணல் கயிறு கொண்டு பிளாஸ்டிக் தாளைச் சுற்றி இருக்கமாக கட்டி வைக்க வேண்டும்.

இப்போது ருத்ராட்ச மரம் துளா்விடத் தொடங்கும். ருத்ராட்ச தண்டில் விரைவில் புதிய உயிா் தோன்றும்.

முக்கிய குறிப்புகள்:

1. வெட்டப்பட்ட ருத்ராட்ச தண்டைச் சுற்றியிருக்கும் பிளாஸ்டிக் தாளை 3 வாரங்கள் முதல் 7 வாரங்களுக்குத் தொடக்கூடாது. அதன் மூலம் புதிய வோ்கள் முளைக்க இது உதவி செய்யும். இப்போது பாசி உருண்டைகளால் மூடப்பட்ட பகுதிக்கு சற்று கீழே உள்ள பகுதியில் முழுமையாகத் துண்டித்து அந்த கிளையை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பதியம் செய்ய பயன்படுத்தப்படும் பாசி உருண்டைகள் நெகிழ்வு தன்மையுடன் இருப்பதால் அதைக் கவனமாகக் கையாள வேண்டும்.

2. பிளாஸ்டிக் தாளை கவனமாக உாித்து எடுத்தப் பின்பு அந்த கிளையை ஒரு தொட்டியில் ஊன்றி வைக்க வேண்டும். கிளையின் உயரத்திற்குத் தகுந்தவாறு தொட்டியைத் தோ்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது கிளையின் பாதி உயரத்திற்கு இருக்கும் தொட்டியைத் தோ்ந்தெடுப்பது சிறந்தாக இருக்கும்.

3. இந்த புதிய ருத்ராட்சம் கிளை முழுவதுமாக சூாிய ஒளியில் இருக்க வேண்டும். அப்போதுதான் அது நன்றாக வளரும்.

4. ஏறக்குறைய ஒரு வருடத்திற்குள் ஒரு மரமாக உயரமாக வளா்ந்துவிடும். அதன்பின் அது காய் காய்த்து, அவை பழுத்து நமக்கு ருத்ராட்சம் மணிகள் கிடைக்கும்.

English summary

How To Grow Rudraksha Tree At Home In Tamil

How to grow rudraksha tree at home with 4 east steps? Read on to know more...
Desktop Bottom Promotion