For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டிலேயே உங்களுக்கு பிடிச்ச பழங்களையெல்லாம் வளர்க்கணுமா ? அப்ப இதை செய்ங்க

வீட்டிலேயே பழங்களை வளர்க்க முடியுமா என்றால் நிச்சயம் வளர்க்க முடியும். ஏன் தொட்டியில் வளரக்கூடிய பழ வகைகளும் இருக்கின்றன. கடையில் வாங்குகிற பழங்களில் கெமிக்கல் கலந்திருப்பாங்களோ அப்டிங்கிற கவலை இருந்த

|

இன்றைய காலக்கட்டத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் ஆரோக்கியமான உணவுகளில் பழங்கள் என்பது மிகவும் இன்றியமையாதது. அந்த பழங்களை பழுக்க வைப்பதற்காக எண்ணற்ற கெமிக்கல்கள் கலக்கப்படுவதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப்படுகிறோம். அந்த பயத்தாலேயே பாதி பேர் பழங்கள் சாப்பிடுவதை நிறுத்தி விட்டார்கள்.

Best Vegetables to Grow at Home this Summer

உங்கள் வீட்டிலேயே உங்கள் கண் முன்னாடியே பழங்களை வளர்க்க முடியும் என்றால் யார் தான் வேணாம் என்பார்கள். ஆனால் என்ன பழ வகைகளை வீட்டில் வளர்க்க முடியும் என்று தானே உங்கள் அடுத்த கேள்வி இருக்கிறது. அதற்கான பதிலையும் எப்படி வளர்ப்பது போன்றவற்றிகான குறிப்புகளை இக்கட்டுரையை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொட்டியை தேர்வு செய்யுங்கள்

தொட்டியை தேர்வு செய்யுங்கள்

உங்கள் பழச்செடியை ஆரம்பத்தில் இருந்து பழம் காய்த்து தொங்கும் வரைத் தாங்கபோவது தொட்டி தான். எனவே உங்கள் பழத்திற்கான தொட்டியை தேர்வு செய்யும் போது தொட்டியின் அளவு, எடை போன்ற அமைப்புகளை மனதில் வைத்துக் கொண்டு தேர்வு செய்ய வேண்டும். பொதுவாக பயிர்கள் 8 இன்ச் தொட்டியில் வளரும். அதே சமயத்தில் உயரம் அதிகமாக வளரக்கூடிய பயிர்கள் 36-37 இன்ச் வரை கொண்ட அகலமான தொட்டிகளையும் பயன்படுத்துகிறார்கள்.

உரக்கலவை

உரக்கலவை

பழ வகைகளுக்கு உரக்கலவை தயாரிக்கும் போது அது சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். மேலும் அது நல்ல காற்றோட்டமாகவும், வடிகால் அமைப்பை பெற்றதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக பயன்படுத்தும் பழத்தொட்டி மண்களில் உண்மையான மண் இருப்பதில்லை மாறாக உரக்கலவைகளின் மண்ணாகத் தான் அது காட்சியளிக்கிறது.

அதே சமயத்தில் நீங்கள் சொந்த உரக்கலவையையும் நீங்கள் தயாரிக்கலாம். ஒரு கன சதுர அடிக்கு கரி பாசிகளை அல்லது பைன் பட்டையை எடுத்துக் கொள்ள வேண்டும். கூம்பு வடிவ கலனில் கனிமங்களை இணைத்து குலுக்க வேண்டும்.

MOST READ:கல்யாண வாழ்க்கை சந்தோசமா அமைய இந்த 9 ஸ்டேஜை கம்ப்ளீட் பண்ணிருக்கனுமாம்

தண்ணீர் பாசனமுறை

தண்ணீர் பாசனமுறை

தொட்டிகளில் வளரக்கூடிய பழங்கள் அதீத தண்ணீரை பயன்படுத்தி வளரக்கூடியது. அதே சமயத்தில் வேர் முழுக்க சென்றடையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் பானைகளில் உள்ள துளைகள் மூலமாக நீர் அதிகமாக போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வேர் பராமரிப்பு

வேர் பராமரிப்பு

என்னதான் தொட்டியில் வளர்த்தாலும் வேர்களின் வளர்ச்சி அதிகமாகும் போது தொட்டியில் இருந்து வெளிவருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. வேர்களுக்கான இடம் இல்லாத போது வேர்பந்துகள் தண்ணீரால் கடினத்தன்மை ஆகிறது. இது பழச் செடியின் வளர்ச்சியை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் பழங்களின் உற்பத்தியையும் பெருமளவில் பாதிக்கிறது. இந்த மாதிரி சூழல்களில் தான் வேர் கத்தரிப்பு முறை பயன்படுத்தப்படுகிறது.

வேர் கத்தரிப்பு

வேர் கத்தரிப்பு

அதே போல் நீங்கள் கத்தரிக்கும் வேர்களுக்கு தாவரத்தின் எடையையும் சரி செய்ய வேண்டுமல்லவா, அதனால் தாவரத்தின் மேல் பகுதியை மூன்றில் ஒரு பகுதி கத்தரிக்க வேண்டும். அதன் பின்னர் பனையிலிருந்து தாவரத்தை வெளியில் எடுக்க வேண்டும். 2 அல்லது 3 இன்ச்களுக்கு அதிகமாகமால் கடினமான கத்தரியைக் கொண்டு கத்தரிக்க வேண்டும். அதன் பிறகு தாவரத்தை மீண்டும் தொட்டியில் போட வேண்டும். இதை மட்டும் சரியாக செய்தால் வீட்டின் உள்ளே பயிர்கள் வளர்ப்பது சாத்தியாமாகிறது

எப்போது எங்கே வைக்க வேண்டும்

எப்போது எங்கே வைக்க வேண்டும்

சூரிய ஒளி பிராகாசமாக கிடைக்கும் போது வெளியிலும், குளிர்காலங்களில் வீட்டின் உள்பகுதிகளிலும் பழத் தாவரங்களை வைக்க வேண்டும். ஒரு வேளை குளிர்காலங்களில் பழத் தாவரங்களை வெளியில் வைக்க நேர்ந்தால் தேவையான சூரிய ஒளி அதற்கு கிடைக்குமாறு வழிவகை செய்ய வேண்டும்.

MOST READ: என்ன செஞ்சாலும் உங்க காதலர் கண்டுக்கவே மாட்டேங்கிறாரா? இதை செய்து பாருங்கள் உங்களை சுற்றி வருவார்

பூச்சிக் கொல்லி

பூச்சிக் கொல்லி

உள் மற்றும் வெளிப்பகுதிகளுக்கு தாவரங்களை மாற்றும் போது பொறுமையைக் கையாள வேண்டும். அதே மாதிரி பழத் தாவரங்களை வீட்டிற்குள் கொண்டு வருவதற்கு முன் தாவரத்தின் இலைகளிலுள்ள தூசிகளையும் அழுக்குகளை சரிசெய்த பிறகே வீட்டிற்குள் எடுத்துவர வேண்டும். தேவைப்பட்டால் பூச்சிகளைக் கொல்லும் பூச்சி மருந்துகளை உள்ளே இடமாற்றுவதற்கு முன்னால் தாவரத்தின் மீது தெளிக்க வேண்டும்.

மற்ற பராமரிப்புகள்

மற்ற பராமரிப்புகள்

பழச்செடிகளோ அல்லது பழ மரங்களோ வீட்டிற்குள் இருக்கும் போது அதற்கு அதிக தண்ணீர் தேவைப்படாது. அதே சமயத்தில் வறண்டு போகும் அளவுக்கு அதனை விட்டு விடாதீர்கள். வசந்த காலம் வரும் வரை அதை குளிர்ச்சியாகவும், செயலற்றதாகவும் வைத்திருக்கும் போது அதற்கு சூரிய ஒளி தேவை மிகவும் குறைவாகும்.

MOST READ:மன உளைச்சல், மனச்சிதைவுக்கு நோய்க்கு வைட்டமின் பி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாமா?

சூரிய ஒளி

சூரிய ஒளி

ஆனால் உள்ளறைகளில் பழங்களை அறுவடை செய்ய விரும்பினால் அதற்கு சூரிய ஒளி என்பது மிகவும் தேவையானது. உலர்ந்த காற்றோட்டமானது கோடை காலங்களில் வீடுகளுக்குள் இருக்கும். அது பழச்செடிகளிலிருந்து இலைகளை இழப்பதற்கு காரணமாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Vegetables to Grow at Home this Summer?

Want to grow Fruit indoors then don’t worry. We have the complete list of how to grow and what fruit plant to grow indoors. Now Enjoy growing fruits indoors in container
Desktop Bottom Promotion