For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீடுகளில் எந்த மாதிரியான செடிகளை வைத்து குளுமையாக்கலாம்?உங்களுக்கு எங்க ஐடியா!!

வீடுகளை குளுமையாக்க எந்த மாதிரியான செடிகளை வளர்க்க வேண்டும் என்பதை விரிவாக இங்கே சொல்லப்பட்டுள்ளது.

By Bala Karthik
|

இப்போதெல்லாம் தனி வீட்டை கட்டுவதை விட ஃப்ளாட்டாக வாங்குவதைத்தான் எல்லாரும் விரும்புவார்கள். ஆனால் ஃப்ளாட்டில் என்ன அப்படி பெரிதாக வளர்த்துவிட முடியுமென சிலபேர் நினைப்பதூண்டு.

Top 10 Plants That Can Keep Your House Cool During Summer

மனமிருந்தால் போதும். வழியிருக்கு. சின்ன சின்ன செடி களை வைக்கலாம். இதில் பெரியப்ளஸ் பாயின்ட் என்னவென்றால் இவற்றால் நமது வீடு குளுமையடையும். வெயிலின் தாக்கும குறையும். அப்படி எந்த மாதிரி செடிகள் வீட்டில் வளர்க்கலாம் என உங்களுக்கு ஐடியா வேண்டுமா? இதைப் படிங்க!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 கற்றாழை தாவரம்:

கற்றாழை தாவரம்:

இது உங்கள் அடுக்குமாடி குடியிருப்பை புத்துணர்ச்சி பொங்க வைத்துகொள்வதோடு, பல பயன்பாடுகளையும் கொண்டதாக இருக்கிறது.

இது உட்புற வெப்ப நிலையை குளுகுளுவென வைப்பதோடு மட்டுமல்லாமல், காற்றிலிருக்கும் தீங்குவிளைவிக்க கூடிய ஃபார்மால்டிஹைடையும் நீக்க வல்லதாகும். அத்துடன் இந்த தாவரத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் பல உடல் நலப் பயன்பாடுகளையும் தெரிந்துகொள்ள முயற்சி செய்து இன்புற்று உங்கள் வாழ்வில் மகிழலாம்.

புடலங்காய் கொடி:

புடலங்காய் கொடி:

இதனை தனி வீடு இருந்தால் வைக்கலாம். இது தனித்தன்மை கொண்ட ஒரு தாவரமாகும். இரவு நேரத்தில் ஆக்சிஜனை வெளியேற்ற கூடியதாகும்.

அத்துடன் வழக்கமான நிலையை காட்டிலும் வெப்பத்தை குறைத்து கூலாகவும் வைத்துகொள்ள கூடிய ஒரு தாவரமாகவும் இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், இந்த தாவரம், நச்சுத்தன்மை கொண்ட நைட்ரஜன் ஆக்சைடு, டிரைக்குளோரோஎதிலின், பென்ஸின், டொலுவீன், என பலவற்றில் இருக்கும் நஞ்சினை உறிஞ்சிகொண்டு தூய காற்றினை நமக்கு அளிக்கிறது.

பாக்கு பனை மரம்:

பாக்கு பனை மரம்:

சுற்றுசூழலை பாதுகாக்கும் உட்புற தாவரத்தை நீங்கள் தேடுகிறீர்களா? அப்படி என்றால் இந்த மரத்தினை தேர்ந்தெடுப்பது சிறந்ததோர் யோசனையாக அமையும்.

இந்த தாவரத்தில் இயற்கையிலே காணப்படும் ஈரப்பதம் தன்மை, உங்கள் இல்லறத்தை குளுகுளுவெனவும் இனிமையாகவும் வைத்துகொள்ள உதவுகிறது. அதோடு, காற்றில் இருக்கும் தீய பொருள்களை நீக்கிவிட்டு நல்லதோர் காற்றினை சுவாசிக்க நமக்கு வழிவகை செய்கிறது.

 பைக்கஸ் தாவரம்:

பைக்கஸ் தாவரம்:

இதனை ‘அழுகை அத்தி' என்றும் அழைப்பர். இது உங்கள் அறையில் இருக்கும் காற்றினை தூய்மைபடுத்தி, வெப்பத்தினை உள்வாங்கி கொள்கிறது.

குறைந்த வெப்பம் மற்றும் மிதமான தண்ணீர் தேவைப்படும் இந்த தாவரத்தை பராமரிப்பது என்பது எளிதானதோர் வழியாகவும் இருக்கிறது.

இது வெப்பத்தை குறைத்து குளுகுளுவென வைப்பதோடு, காற்றினால் உண்டாகும் மாசையும் குறைக்கிறது.

 பேபி ரப்பர் தாவரம்:

பேபி ரப்பர் தாவரம்:

உட்புற தாவரங்களையும் அவற்றினால் ஏற்படும் மாசு குறைபாடுகளையும் பற்றி நாம் பார்த்துகொண்டிருக்கிறோம். மேலும் அவை மூலமாக உங்கள் வீட்டு அறை குளிர்ச்சியாக காணப்படுவதனையும் நாம் பார்த்து கொண்டிருக்கிறோம்.

இந்த பேபி ரப்பர் தாவரத்தினை பற்றி நாம் பேசிக்கொண்டே போகலாம் என்கின்றனர். ஆம், இந்த தாவரத்திற்கு தண்ணீர் என்பது அடிக்கடி தேவைப்படாமல் போனாலும்...அதிகளவில் மணலும், வடிக்கட்டப்பட்ட ஒளியும் இந்த தாவரத்திற்கு தேவைப்படுகிறது.

பன்னம் தாவரம் (பெர்ன்):

பன்னம் தாவரம் (பெர்ன்):

நாசாவின் சொற்கள் படி, இந்த பன்னம் செடி, சிறந்ததோர் காற்று ஈரப்பதமூட்டியாக விளங்குகிறது என்கின்றனர். இது உங்கள் அறையின் உள்ளே இருக்கும் காற்றினை புதுப்பிப்பதோடு தூய்மையாகவும் வைக்க உதவுகிறது. மேலும், இது வெப்பத்தை கட்டுபடுத்த கூடியதாகும். உங்கள் வீட்டு பால்கனியில் இந்த பன்னம் செடி இருக்குமாயின்...அது பார்ப்பதற்கு அழகிய காட்சியையும் கண்களுக்கு சமர்ப்பிக்கிறது.

கோல்டன் பாத்தோஸ்:

கோல்டன் பாத்தோஸ்:

‘சில்வர் வைன்' அல்லது ‘டெவில் இவி' என்னும் பெயர்களால் இந்த தாவரத்தை, உங்களால் அடையாளம் காண முடிகிறது. பசுமையான இலைகளை கொண்ட இந்த தாவரம், உங்கள் அறையினை அழகுபடுத்த பெரிதும் உதவுகிறது. அத்துடன், காற்று மாசுபடுவதையும் தடுக்கும் இந்த தாவரம், கோடைக்காலத்தில் உங்கள் வீட்டை குளுகுளுவென வைத்துகொள்ள உதவுகிறது. இதனை பராமரிப்பது என்பது எளிதாக இருக்க...தண்ணீரும் நமக்கு அவ்வளவு தேவைப்படுவதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 10 Plants That Can Keep Your House Cool During Summer

Top 10 Plants That Can Keep Your House Cool During Summer
Story first published: Friday, June 9, 2017, 17:05 [IST]
Desktop Bottom Promotion