For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தோட்டத்தில் காய்கறிகளை வளர்க்கும் போது மனதில் கொள்ள வேண்டியவைகள்!!!

By Ashok CR
|

உங்கள் வீடு ஊருக்கு தொலைவில் இருக்கும் பட்சத்தில், உங்கள் வீட்டில் ஒரு சிறிய காய்கறி தோட்டம் அமைத்துக் கொள்வதில் பெரிய சிரமம் இருக்காது. ஆனால் நகரத்தில் வாழ்பவர்களுக்கு இது சற்றே கடினமான விஷமாக இருக்கும். அதற்கு காரணம், பெரிய நகரத்தில் உள்ள பலரும் அடக்கு மாடு குடியிருப்புகளில் வாழ்ந்து வருகிறார்கள். அப்படி இருந்தும் இதனை நீங்கள் செயல்படுத்தினால், உங்கள் வீட்டின் மூலையில் இருக்கும் அந்த பச்சை தோட்டம், சோர்வடைந்து வரும் கண்களுக்கு ஆதரவாக இருக்கும்.

காய்கறி தோட்டம் வளர்ப்பது அவ்வளவு கஷ்டமா என்ன? கண்டிப்பாக இல்லை. அதற்கு தேவையானது எல்லாம் முடியும் என்ற எண்ணமும், சிறிது நேரமும் மட்டுமே. ஏன் நீங்களும் ஒரு காய்கறி தோட்டத்தை வளர்க்கக் கூடாது? உங்கள் செடிகள் காய்களையும், பழங்களையும் அளிக்கும் போது, அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியை விவரிக்கவே முடியாது. சரி எப்படி தான் காய்கறி தோட்டத்தை வளர்ப்பது? அதற்கு நீங்கள் சில டிப்ஸ்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் ஒரு கைத்தேர்ந்த தோட்டக்காரர் என்றால், கிடைக்கின்ற சின்ன இடத்தில் எப்படி காய்கறிகளை வளர்ப்பது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் தொடக்க முயற்சியாக இதில் நீங்கள் ஈடுபட்டால், காய்கறி தோட்டம் அமைப்பதும் கூட உங்கள் வாழ்க்கையின் ஒரு கற்கும் அனுபவமாக மாறி விடும்.

நீங்கள் புதிதாக ஆரம்பிக்க போகிறீர்கள் என்றால் முதலில் சிறியதாக ஆரம்பியுங்கள். வளரும் காய்கறிகளை நீங்கள் விற்க போவதில்லை. அதனால் உங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு தேவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சரி, எந்த காய்கறிகளை சுலபமாக பராமரிக்கலாம்? உருளைக்கிழங்கு, முள்ளங்கி, புதினா, மல்லிச்செடி, குடை மிளகாய் போன்றவற்றில் இருந்து தொடங்கலாம். மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இடத்தை தேர்வு செய்யுங்கள்

இடத்தை தேர்வு செய்யுங்கள்

காய்கறி தோட்டம் அமைப்பதற்கு முன் உங்களுக்கு தேவையான முதல் விஷயம் இது தான். செடிக்கு அதிகமாக தேவைப்படுகிற, வெயில் படுகிற ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள். சாலட் இலைகளை வளர்த்தால், ஒரு வலையை மேலே போட்டு சற்று நிழலை உருவாக்கிடுங்கள். மண்ணானது ஈரப்பதத்துடன், வடிந்து செல்லக்கூடிய வகையில் இருக்க வேண்டும்.

எவ்வளவு இடம் வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

எவ்வளவு இடம் வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

இடத்தை தேர்வு செய்த பிறகு, காய்கறிகள் வளர்ப்பதற்கு எவ்வளவு இடம் தேவைப்படும் என்பதை தீர்மானியுங்கள். நீங்கள் இப்போது தான் தொடக்க நிலையில் உள்ளீர்கள். அதனால் செடிகளுக்கு முதலில் சிறிய இடத்தையே பயன்படுத்துங்கள். திறந்த வெளியாக இல்லையென்றால் ஒரே தொட்டியில் பல்வேறு வகையிலான மூலிகை செடிகளை வளர்க்கவும்.

இடத்தை சுத்தப்படுத்தவும்

இடத்தை சுத்தப்படுத்தவும்

அழுக்கு படிந்த அறையில் உங்களால் வாழ முடியுமா? உங்கள் செடிகளாலும் கூட முடியாது. அதனால், செடிகளை வைப்பதற்கு முன் இடத்தை சுத்தப்படுத்தி, களைகளை அப்புறப்படுத்தவும். மேலும், பூச்செடி புதர்களால் உங்கள் காய்கறி தோட்டத்திற்கு வேலி அமைக்கக்கூடாது. ஏனென்றால் அங்கே தான் நத்தைகள் மற்றும் பூச்சிகள் மறைந்து கொண்டு, செடிகளுக்கு தீங்கை விளைவிக்கும்.

தீவிர தோட்டக்கலையில் ஈடுபடுங்கள்

தீவிர தோட்டக்கலையில் ஈடுபடுங்கள்

இந்த முறையிலான தோட்டக்கலையில் பல்வேறு வகையிலான காய்கறிகளை ஒரே கொத்தாக வைக்கலாம். இது உங்கள் தோட்டத்திற்கு நல்ல தோற்றத்தை கொடுக்கும். ஆனால் களைகளை நீங்கள் கைகளால் நீக்க வேண்டும். அதே போல் கைக்கு எட்டாத அளவிற்கு பெரிய புதர் போல் அமைத்து விடாதீர்கள். சிறிய இடத்தை கொண்டு புதிதாக தோட்டம் அமைப்பவர்களுக்கு இது சிறந்த முறையாகும்.

மக்கிய உரம் மற்றும் உரங்களைப் பற்றிய விரிவான அறிவு

மக்கிய உரம் மற்றும் உரங்களைப் பற்றிய விரிவான அறிவு

அடிப்படை காய்கறிகளை உங்கள் தோட்டத்தில் எப்படி வளர்க்க வேண்டும் என உண்மையிலேயே நீங்கள் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால், உரம் பயன்படுத்தும் வழிமுறைகளை எப்போதும் புறக்கணிக்காதீர்கள். அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என அதன் அட்டையிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். அதைப் படித்து கவனமாக பின்பற்றவும்.

நீர் ஆதாரத்தை அருகிலேயே வைத்துக் கொள்ளவும்

நீர் ஆதாரத்தை அருகிலேயே வைத்துக் கொள்ளவும்

நீங்கள் தொட்டியில் செடிகள் வைத்திருந்தால், அவற்றிற்கு நீங்களாகவே தண்ணீர் ஊற்றலாம். ஆனால் சற்று பெரிய தோட்டம் என்றால் தண்ணீர் அதிகமாக தேவைப்படும். அதனால் தோட்டத்திற்கு அருகில் குழாய் ஒன்றை வைத்துக் கொள்ளலாம்.

என்ன செடி வளர்ப்பது?

என்ன செடி வளர்ப்பது?

நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தில் எந்த காய்கறிகளை வளர்க்க முடியும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு காய்கறியையும், எந்த வகையில் நடத்த வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Grow Basic Vegetable Garden

Do you know how to grow basic vegetable garden. Well, read to know how to grow a vegetable garden.
Desktop Bottom Promotion