Latest Updates
-
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது..
குளிர்காலத்தில் தோட்டத்தைப் பராமரிக்க சில டிப்ஸ்...
தோட்ட பராமரிப்பு என்பது எல்லோராரும் எளிதில் செய்யக்கூடிய காரியம் அல்ல. ஒரு சிலரே அதனை மிகுந்த அக்கறையுடன் பராமரித்து வருகின்றனர். ஒவ்வொரு பருவங்களுக்கும் ஏற்றாற்போல் செடிகளை பராமரிப்பது மிகவும் அவசியமானதாகும். மேலும் அந்தந்த காலத்திற்கு தகுந்தாற்போல் செடிகளை வாங்கி நடுவதும் முக்கியமான ஒன்றாகும்.
அழகான தோட்டம் வீட்டின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும். குளிர்காலம் வந்துவிட்டாலே நமது உடல்நலம் பராமரிப்பு மற்றும் வீடு பராமரிப்பு இரண்டுமே கடினமான ஒன்றாகிவிடும். மழைக்காலங்கள் ஏற்படும் மாற்றங்கள் செடிகளை பெரிதும் பாதிக்கின்றன. அதனால் இந்நேரங்களில் செடிகளை கவனமாக பராமரிக்க வேண்டும். நீங்கள் செடிகளை நேசிப்பவர் என்றால், இந்த மழைகாலங்களில் உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை பராமரிப்பதில் சிறிது கவனம் கொள்ள வேண்டும்.
உங்கள் தோட்டத்தை அழகான செடிகளாலும் பூக்கள் நிறைந்த சோலையாகவும் வைத்திருப்பது முக்கியமல்ல. அதனை போதுமான அளவிற்கு பராமரிப்பதே மிகவும் முக்கியமானதாகும். பருவங்களின் மாற்றம் செடிகளை பெரிதும் பாதிக்கும். பருவங்களுக்கு ஏற்றாற்போல் நாம் செடிகளை கவனமாக பராமரிக்க வேண்டும். நீங்கள் வசிக்கும் இடத்தில் உள்ள குளிருக்கு தகுந்தாற்போல் தோட்டத்தின் செடிகளை பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
உங்கள் தோட்டத்தின் ஒரு சில செடிகள் குளிர்ந்த வானிலைக்கு தகுந்தாற்போல் மாறிவிடும் ஆனால் ஒரு சில செடிகள் அவ்வாறு இருப்பதில்லை. அவைகளுக்கு கூடுதலான பராமரிப்பு தேவைப்படும். அதனால், உங்கள் தோட்டத்திற்கு கூடுதலான அழகையும் நறுமணத்தையும் சேர்க்கும் சில வகை செடிகளை கவனமாக பாதுகாக்க வேண்டும். இதோ நீங்கள் குளிர்காலங்களில் செடிகளை பராமரிப்பதில் செய்ய வேண்டியவைகளும் செய்யக்கூடாதவைகளும். இதனை படித்து புரிந்து கொண்டு உங்கள் தோட்டத்தை ஒரு சிறந்த இடமாக மாற்றுங்கள்.

1. வீட்டின் உள்ளே வையுங்கள்
பனியில் இருந்து உங்கள் செடிகளை பாதுகாக்க அவற்றை உங்கள் வீட்டின் உள்ளே எடுத்து வந்து வையுங்கள். இது ஒரு எளிமையான டிப்ஸ் ஆகும். உங்கள் செடிகள் குளிர்கால வானிலையை ஏற்றுகொண்டாலும் வானிலையில் ஏற்படும் திடீர் மாற்றத்தை ஏற்றுகொள்ளாது. ஆகவே இந்த செடிகளை தோட்டத்தில் இருந்து எடுத்து வந்து வீட்டின் உள்ளே வைத்து பராமரிக்க வேண்டும்.
2. ரோஸ் செடி
குளிர்கால வானிலையை பொருத்துகொள்ளுவதற்கு ரோஸ் செடிகளுக்கு அதிக பராமரிப்பு அவசியமானதாகும். பொதுவாகவே குளிர்காலங்களில் ரோஸ் செடிகள் பாதிக்கப்படும். குளிர்க்கால வானிலையால் ஏற்படும் அதிக பனியால் இவை உறைந்து போகக்கூடிய நிலையம் ஏற்படும். குறிப்பாக, பதியம் போடும் செடிகள் இந்த குளிர்கால வானிலையால் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகும். அதனால், குளிர்க்கால பராமரிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
3. தொட்டிகளை காப்புறைப்பது
நீங்கள் தொட்டிகளில் செடி வளர்த்தால், இரு தொட்டிகளுக்கும் உண்டான போதுமான இடைவெளியில் கவனம் கொள்ள வேண்டும். குளிர்கால செடிகளை பராமரிக்க இந்த தொட்டிகளை காப்புறைப்படுத்த வேண்டும். குளிர்கால செடிகளை பராமரிப்பது எளிதான காரியம் அல்ல. சிறிது கூடுதல் கவனம் தேவைப்படும்.
குளிர்கால தோட்ட பராமரிப்பிற்கான மேலும் சில டிப்ஸ்:
* முன்னதாகவே மழைக்கால செடிகளை பராமரிக்க முடிவு செய்யவேண்டும். போதுமான பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
* கூடுதல் கவனம் எடுத்து சில நாட்களுக்கு முன்னதாகவே அவைகளுக்கு உரம் போடுவதை நிறுத்த வேண்டும்.
* மிதக்கும் செடிகளை தோட்டத்தில் இருந்து எடுத்து வந்து வீட்டின் உள்ளே வைத்து அலங்கரியுங்கள். இதன் மூலம் அவை மேலும் அழகாகக் காட்சியளிக்கும்.
* கடினமான செடியாக இல்லாவிட்டால் குளிர்காலங்களில் அவற்றை நீக்கிவிடுங்கள். அல்லது அவற்றை பராமரிக்க வீட்டின் உள்ளே எடுத்துவந்து ஒரு தொட்டியில் தண்ணீர் நிரப்பி அதில் வைத்து விடுங்கள்.
* கடினமான செடிகளையும் அவ்வாறே பராமரிக்கலாம். அவற்றின் வாடிய தழைகளை நீக்க வேண்டும். மேலும் சிறிது ட்ரிம் செய்து விடவும். அவற்றையும் வீட்டின் உள்ளே வைத்து பராமரிக்கலாம்.
* குளிர்காலங்களில் அல்லி செடிகளுக்கு கூடுதல் கவனம் தேவைப்படும். கடினமானவற்றை தோட்டத்திலேயே விட்டுவிட்டு தண்ணீர் அல்லி செடிகளை வீட்டின் உள்ளே எடுத்து வந்து பராமரிக்கலாம்.
* உங்கள் தோட்டத்தில் உள்ள பூண்டு செடிகளை கவனமாக பராமரிக்க வேண்டும். அடுத்து வரும் பருவத்திற்கு தேவைப்படுமானால் அவற்றை புதைத்து பாதுகாக்க வேண்டும். குளிர்கால பராமரிப்பு சிறிது கடினமாக இருந்தாலும் இவை உங்கள் தோட்டத்தை அழகாக மாற்றும்.



Click it and Unblock the Notifications