Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
Ganesh Chaturthi Rangoli Designs: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சிம்பிளான மற்றும் ஈஸியான ரங்கோலி கோலங்கள்!
Ganesh Chaturthi 2025 Special Rangoli Kolam Designs: பொதுவாக பண்டிகை அல்லது சிறப்பான நாட்கள் என்றாலே இந்தியாவில் உள்ள மக்களின் முக்கியமான வழக்கங்களுள் ஒன்று வீட்டிற்கு முன் அழகான கோலம் போடுவது. அதுவும் விநாயகர் சதுர்த்தி இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படக்கூடிய பண்டிகையாகும்.
ஆனால் ஒவ்வொரு பகுதியிலும் விநாயகரை வழிபடும் வழக்கம் மற்றும் சடங்குகளில் வேறுபாடு இருக்கும். இருப்பினும், இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் கட்டாயம் வீட்டிற்கு முன் அழகான கோலமிடுவார்கள். முக்கியமாக தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், ஒவ்வொருவரும் தங்கள் வீட்டின் முன் போடப்படும் கோலம் மற்றவர்களின் வீட்டு வாசலில் போடப்படும் கோலத்தை விட அழகாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள்.

அதற்காக கோலத்திற்கு என்றே தனியாக ஒரு நோட்டு புத்தகத்தை போட்டு, அதில் பலவிதமான கோலங்களை வரைந்து வைத்திருப்பார்கள். அதோடு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல கிராம மற்றும் நகர பகுதிகளில் கோலப்போட்டிகளும் நடத்தப்படுவதுண்டு. இந்த கோலப்போட்டியில் வெற்றி பெறுவதற்காக பல அழகான கோலங்களை யோசித்து வரைந்து வைத்துக்கொண்டு, அதை பார்த்து நிறைய பேர் கோலமிடுவார்கள்.
நீங்களும் விநாயகர் சதுர்த்திக்கு உங்கள் வீட்டின் முன் அழகான மற்றும் மற்றவர்களை கவரும் படியான கோலத்தை போட விரும்புகிறீர்களா? அதோடு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உங்கள் வீட்டு ஏரியாவில் நடத்தப்படும் கோலப்போட்டியில் வெற்றி பெற விரும்புகிறீர்களா? அப்படியானால் கீழே உங்களுக்காக விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரங்கோலி கோலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து போட்டு அசத்துங்கள்.
1. அழகான விநாயகர் ரங்கோலி
நீங்கள் விநாயகர் சதுர்த்திக்கு ரங்கோலி கோலத்தை தான் போட விரும்புகிறீர்களா? அதுவும் சற்று மார்டனாக, அதே சமயம் சிம்பிளாக, அதிக கலர் பொடியை பயன்படுத்தாமல், ஒரு க்யூட்டான ரங்கோலியை போட நினைத்தால், இந்த விநாயகர் ரங்கோலி உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். இதில் மூன்று விதமான விநாயகர் ரங்கோலி உள்ளது. இந்த ரங்கோலியில் ஒரு டிசைனில் விநாயகரைச் சுற்றி பூக்களும், மற்றொன்றில் விநாயகரை சுற்றி அழகான மயிலும், மூன்றாவதில் ஒரு இலையில் விநாயகர் இருப்பது போன்றும் இருக்கும்.
2. புள்ளி வைத்த விநாயகர் கோலம்
உங்களுக்கு ரங்கோலி கோலம் வேண்டாம், புள்ளி வைத்த மிகச்சிறிய கோலம் வேண்டும் என்றால், இந்த புள்ளி வைத்த விநாயகர் கோலம் ஏற்றதாக இருக்கும். இந்த கோலத்தை வீட்டில் நிறுவும் விநாயகர் சிலைக்கு முன் போடலாம். இது மிகவும் சிம்பிளான, அதே சமயம் ஒரு ஈஸியான விநாயகர் கோலம்.
3. பிள்ளையார் ரங்கோலி
நீங்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடக்கும் கோலப்போட்டியில் கலந்து கொள்ளப் போகிறீர்கள் என்றால், இந்த பிள்ளையார் ரங்கோலியை வரையலாம். இந்த ரங்கோலியில் வெறும் 4 நிறங்களை மட்டும் பயன்படுத்தி தாமரையில் இருப்பது போன்ற ஒரு அழகான பிள்ளையாரை வரைய வேண்டும். இந்த பிள்ளையாரை நீங்கள் கச்சிதமாக வரைந்தால், நிச்சயம் உங்களுக்கு தான் முதல் பரிசு.
4. சிம்பிள் அன்ட் க்யூட் கணேசா கோலம்
உங்கள் வீட்டில் எந்த ஒரு கலர் பொடியும் இல்லை, வெறும் வெள்ளை கோலப்பொடி மட்டும் தான் உள்ளது என்றால், இந்த சிம்பிளான கணேசா ரங்கோலியை வரைந்து, பக்கவாட்டில் புள்ளி வைத்த விளக்கு கோலத்தை போடுங்கள். இது உங்கள் வீட்டு வாசலுக்கு ஒரு அழகான தோற்றத்தைத் தரும்.
5. தனித்துவமான விநாயகர் ரங்கோலி
நீங்கள் ஒரு தனித்துவமான மற்றும் அழகான விநாயகர் ரங்கோலியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், இந்த கோலம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். இந்த கோலத்தில் வெறும் சிம்பிளான டிசைன்கள் இருந்தாலும், அதற்கு கொடுத்துள்ள கலர் காம்பினேஷன் இந்த கோலத்திற்கு ஒரு அழகான தோற்றத்தைக் கொடுக்கிறது. நீங்கள் சிம்பிளான விநாயகர் ரங்கோலியை தேடிக் கொண்டிருந்தால், இதை போடலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications