Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
உங்க கிச்சனில் பல்லிகள் வராமல் இருக்க இந்த ட்ரிக்ஸை ட்ரை பண்ணுங்கள்..!
சமையலறைதான் வீட்டின் மிக முக்கியமான இடம்.. நம் வீட்டின் இதயம் போன்றது.. எனவே, சமையலறையை சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருப்பது இல்லத்தரசிகளின் கடமையாகும்...
குறிப்பாக புழுக்கள் மற்றும் பூச்சிகள் சமையலறையில் வராமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.. அதில் மிக முக்கியமாக பல்லிகள், கரப்பான் பூச்சிகள், எறும்புகள் போன்ற ஆபத்தான பூச்சிகள் அனைத்தையும் விரட்டி விலக்கி வைப்பது பெண்களுக்கு சற்று சவாலான வேலையாகும்..

ஏனெனில் சமைத்த அவற்றில் ஏதாவது ஒன்று உணவில் விழுந்து விட்டால் அன்றைய முழு வேலையும் நாசமாகி, குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையே பாழாகிவிடும். சமையலறையில் பல்லிகள் இருந்தால் பெரிய ஆபத்து. ஏனென்றால், செய்யும் சமையலில் தெரியாமல் விழுந்துவிட்டால்.. அவ்வளவுதான் ரொம்ப கஷ்டமாகி விடும்..
எனவே சமையலறையில் உள்ள பல்லிகளை விரட்ட பல வழிகளில் முயற்சி செய்கிறோம். ஆனால் அவை அவ்வளவு எளிதில் சமையலறையை விட்டு வெளியேறுவதில்லை. எனவே சமையலறையில் உள்ள இந்த பல்லிகளை விரட்ட இந்த 6 தந்திரங்களை வீட்டிலேயே செய்து பாருங்கள். வாங்க அது என்னென்ன ட்ரிக்ஸ்? என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்..
எலுமிச்சை
எலுமிச்சையின் சிட்ரஸ் அமிலமும் பல்லிகளை பயமுறுத்துகிறது. புதிய எலுமிச்சையை வெட்டி சமையலறையில் வைப்பதன் மூலம் பல்லிகள் சமையலறைக்கு உள்ளே வராமல் வெளியிலேயே தடுத்து விடலாம். எலுமிச்சையில் பூச்சிக்கொல்லி பண்புகள் உள்ளன, இது அனைத்து வகையான பூச்சிகளுக்கும் ஒரு நல்ல வீட்டு வைத்தியம்.
முட்டை
நீங்கள் வீட்டில் முட்டையுடன் கறி மற்றும் ஆம்லெட் செய்துவிட்டு, அதன் ஓடுகளை தூக்கி எறிவீர்காளா? ஆனால் இனி இதை செய்ய வேண்டாம். முட்டை ஓடுகளை பல்லிகள் இருக்கும் இடத்திலோ அல்லது ஜன்னல் அல்லது சுவருக்கு எதிராகவோ வைக்க முயற்சிக்கவும். முட்டையின் வாசனையை பல்லிகள் தாங்காது. இது அவைகளை வீட்டிற்குள் வராமல் வெளியே துரத்தி அடிக்கும்... ஆனால் இந்த முட்டை ஓடுகளை இரண்டு நாட்களுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது. துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
வெள்ளரிக்காய்
பல்லிகளை விரட்ட எளிய இயற்கை வைத்தியம் ஒன்று இந்த வெள்ளரிக்காய். ஆனால் இந்த வெள்ளரிக்காயின் வாசனையை பல்லிகள் சகிக்கவே சகிக்காது. பல்லிகள் நடமாடும் ஜன்னல்கள், கதவுகள் போன்ற எங்கும் வெட்டப்பட்ட வெள்ளரிகளை வைக்கவும். பல்லிகள் கிச்சன் உள்ளே வராது..
பூண்டு மற்றும் கிராம்பு
எந்த வலுவான மசாலா வாசனையிலிருந்தும் பல்லிகள் விலகி இருக்கும். பூண்டு மற்றும் கிராம்பு வாசனை கூட பல்லிகள் பொறுத்துக்கொள்ள முடியாது. இவ்வாறு அரைத்த பூண்டுப் பற்களை சமையலறையின் மூலைகளில் வைத்தால் பல்லிகள் வராமல் தடுக்கலாம்.
காபி தூள்
நீங்கள் ஒரு கப் காபியுடன் உங்கள் நாளைத் தொடங்கலாம். ஆனால் காபி காய்ச்சிய பிறகு மிச்சமிருக்கும் தூள் பல்லிகளை விரட்டும். இதனுடன் சிறிது புகையிலையை சேர்த்து, பல்லிகள் வராமல் இருக்க இந்த பொடியை சமையலறையில் சுவர் அருகே வைக்கவும்.
சமையலறையை சுத்தமாக வைப்பது நல்லது
பூச்சிகள் சமையலறையில் அழுகும் உணவுப் பொருட்கள் மற்றும் திறந்த கொள்கலன்களிலிருந்து இனப்பெருக்கம் செய்கின்றன. சமையலறையில் பூச்சிகள் அதிகமாக இருந்தால், அவற்றை சாப்பிட பல்லிகள் வரும். இதனால், சமையலறையை சுத்தம் செய்தால், பூச்சிகள் அதிகளவில் வெளியேறும். முக்கியமாக பல்லிகளும் கரப்பான் பூச்சிகளும் கிச்சன் உள்ளே வரவே வராது..



Click it and Unblock the Notifications