Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
உங்க வீட்ல தக்காளி சீக்கிரம் கெட்டுப்போகுதா? இப்படி பண்ணுங்க மாசக்கணக்குல கெட்டுப்போகாம இருக்கும்...!
தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக தினம்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. உயர்ந்து வரும் தக்காளி விலை நாடு முழுவதும் மக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல இடங்களில், ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ. 100-யை தாண்டிவிட்டது.
இந்திய உணவு வகைகளின் முக்கிய அங்கமான தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது குடும்பங்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான வெப்பம் மற்றும் தாமதமான பருவமழை ஆகியவை தக்காளி உற்பத்தி மற்றும் விநியோகத்தை கடுமையாக பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

தக்காளி விரைவில் கெட்டுவிடக்கூடிய பொருளாக இருப்பதால் அதனை சேமிப்பது என்பது சவாலான ஒன்றாகும். தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் அதனை மொத்தமாக வாங்கி வைக்கும்போது சரியான முறையில் சேமிக்க வேண்டும். அதற்கான ஈஸியான வழிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தக்காளியை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாமா?
தக்காளியை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக் கூடாது என்று கூறப்படுகிறது. குளிர்சாதன பெட்டி என்பது தக்காளிக்கு மிகவும் குளிர்ச்சியான சேமிப்பு இடமாகும். எனவே தக்காளியை எப்போதும் அறை வெப்பநிலையில் வைத்து, முதலில் பழுத்தவற்றைப் பயன்படுத்தவும். பழுத்த தக்காளி நிறைய இருந்தால் மட்டுமே, அவற்றை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்.
தக்காளியை பக்கவாட்டில் வைத்து சேமிக்கவும்
தக்காளி சீக்கிரம் அழுகாமல் பார்த்துக்கொள்ளவும், நீண்ட ஆயுளை அதிகரிக்கவும் தக்காளியின் தண்டு பக்கவாட்டில் இருக்கும்படி வைக்கவும். இவ்வாறு சேமித்து வைப்பதும், சூரிய ஒளியில் இருந்து விலக்கி வைப்பதும், நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடனும், உண்ணக்கூடியதாகவும் தக்காளியை வைத்திருக்கும்.
பச்சை நிற தக்காளியை வாங்குங்கள்
நீங்கள் தக்காளியை நீண்ட நேரம் காலம் சேமிக்க விரும்பினால், பழுத்த சிவப்பு நிற தக்காளிக்கு பதிலாக பழுக்காத பச்சை நிற தக்காளியை வாங்கவும். பச்சை தக்காளி கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை அறை வெப்பநிலையில் புதியதாக இருக்கும். நீங்கள் தக்காளியை சேமிக்கும் இடத்தில் ஈரப்பதம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இல்லையெனில் தக்காளி விரைவில் கெட்டுப்போகலாம்.
தக்காளியை அடிக்கடி கவனிக்கவும்
தக்காளியை அடிக்கடி சோதிப்பது உங்களின் மொத்த தக்காளியையும் அழுகாமல் சேமிக்க உதவும். தக்காளியை தொடர்ந்து சரிபார்ப்பது அதன் அழுகும் அறிகுறிகளை அடையாளம் காண உதவும். அழுகும் நிலையில் உள்ள தக்காளியை உடனடியாக அகற்றவும்.
ப்ரீசரில் வைக்கவும்
தக்காளியை சிறிய பகுதிகளாக வெட்டுங்கள். அவை கெட்டியாகும் வரை குளிர்சாதன பெட்டியின் ப்ரீசரில் வைக்கவும். இப்போது அவற்றை குளிர்சாதன பெட்டியில் காற்று புகாத கொள்கலனில் வைக்கவும். இந்த நீங்கள் தக்காளியை 3-4 மாதங்கள் வரை உபயோகிக்கலாம்.
தக்காளி பொடி
தக்காளிப் பொடி என்பது எந்தவொரு உணவிலும் எளிதில் சேர்க்கக்கூடிய ஒன்றாகும். தக்காளியைக் கழுவி, தண்டுகளை அகற்றுவதன் மூலம் இந்த செயல்முறையைத் தொடங்கவும். அவற்றை முடிந்தவரை மெல்லியதாக நறுக்கி, பின்னர் அவற்றை வெயிலில் மிருதுவாகும் வரை உலர்த்த வேண்டும். உலர்ந்த துண்டுகளை சிறிய துண்டுகளாக உடைத்து, கண்ணாடி குடுவையில் சேமித்து வைக்கவும். இதனை உங்கள் உணவுகளில் தக்காளிக்கு பதிலாக சேர்க்கலாம்.



Click it and Unblock the Notifications
