Latest Updates
-
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
இராவணனுக்கு 10 தலைகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? அந்த 10 தலைகளின் அர்த்தம் என்ன தெரியுமா? -
3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்!
Diwali 2023: தீபாவளிக்கு உங்க வீட்டை இப்படி சுத்தம் பண்ணுனீங்கனா சீக்கிரமா, சூப்பரா பண்ணிரலாம்...!
Diwali 2023: தீபாவளி என்பது தீபங்களின் திருவிழாவாகும். இது அநீதிக்கு எதிரான நன்மையின் வெற்றியின் அடையாளமாகும், மேலும் இந்த வெற்றியையும் தீபாவளியின் உணர்வையும் கொண்டாட குடும்பங்கள் ஒன்று கூடி மகிழ்ச்சியாக பிரார்த்தனை செய்து, விருந்துண்ணுவது வழக்கமாகும்.
தீபாவளிக்கு முன் வீட்டைச் சுத்தம் செய்வதும், விருந்தினர்களை வரவேற்பதும் தீபாவளியின் முக்கிய பணிகளில் ஒன்றாக உள்ளது. வீட்டின் அனைத்து இடங்களையும் இந்த காலகட்டத்தில் சுத்தம் செய்ய வேண்டும் குறிப்பாக சமையலறையை சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமல்ல. இந்த பதிவில் தீபாவளிக்கு எப்படி வீட்டை எளிதாக மற்றும் சிறப்பாக சுத்தம் செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

வீட்டை ஒழுங்குபடுத்த வேண்டும்
நீங்கள் உண்மையில் வீட்டை சுத்தம் செய்வதற்கு முன், சமையலறையை ஒழுங்குபடுத்துவது முக்கியம், அதாவது, தேவைப்படாத அனைத்தையும் அகற்றி மற்ற பொருட்களை ஒழுங்கமைக்கவும். சமையலறை அலமாரிகள் மற்றும் இழுப்பறைகளை வரிசைப்படுத்தி, 6 மாதங்களுக்கும் மேலாக நீங்கள் பயன்படுத்தாத பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களை அப்புறப்படுத்தவும்.
மேலும், சேதமடைந்த மற்றும் பின்னர் சரி செய்யப்படாத சமையல் பாத்திரங்களை வெளியேற்றவும். மீதமுள்ள பொருட்களை திறம்பட ஒழுங்கமைக்கவும்.
டீப் க்ளீனிங்
சேதமடைந்த அனைத்து பொருட்களையும் தூக்கி எறிந்துவிட்டு, மீதமுள்ளவற்றை ஒதுக்கி வைத்த பிறகு, உங்கள் சமையலறையை சுத்தம் செய்யத் தொடங்குங்கள். புகைபோக்கிகளில் இருந்து தொடங்குவது எப்போதும் புத்திசாலித்தனமான யோசனையாகும், ஏனெனில் அவை அதிக அழுக்குகளை குவிக்கின்றன.
புகைபோக்கிகளில் இருந்து கிரீஸ் மற்றும் அழுக்குகளை சுத்தம் செய்யும் போது அவற்றை சிறிது நேரம் ஊற விடுவது நல்லது. வெதுவெதுப்பான தண்ணீர், பேக்கிங் சோடா மற்றும் டிஷ் சோப்பு கலவையை தயார் செய்து எக்ஸாஸ்ட் ஃபேன் அல்லது சிம்னியில் பரப்பவும். சிறிது நேரம் ஊறவிட்டு, பின்னர் அழுக்குகளை துடைத்தால் எளிதில் நீங்கிவிடும்.
மேஜைகள் மற்றும் அலமாரிகளை சுத்தம் செய்யவும்
நாம் தினமும் சமைக்கும் போது அதிக அழுக்காவது இந்த இடங்கள்தான். அலமாரிகள் மேலே இருப்பதால் பெரும்பாலும் நாம் அவற்றை கவனிப்பதில்லை. அவை அடிக்கடி சுத்தம் செய்யப்படாததால், அங்கு க்ரீஸ் அழுக்கு குவிந்துவிடும்.
எனவே மேஜை மற்றும் அலமாரிகளை சுத்தம் செய்ய, வினிகர் மற்றும் வெதுவெதுப்பான நீர் கலவையை தயார் செய்யவும். அலமாரிகளில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் வெளியே எடுத்து, கலவையை தெளித்து, அதன் மேல் ஒரு தடிமனான காகிதம் அல்லது துணியை வைத்து துடைக்கவும். இது கிரீஸ் மற்றும் மூலைகளில் சிக்கியுள்ள எதையும் அகற்ற உதவும்.
கரப்பான் பூச்சிகளை விரட்டவும்
கரப்பான் பூச்சிகள் உங்கள் சமையலறைகளை தங்கள் வீடாக நினைக்கின்றன, மேலும் அவை அருவருப்பாக இருப்பதுடன் உணவுப்பொருட்களையும் பாதிக்கிறது. எனவே கரப்பான் பூச்சிகள் பிரசாதம் மற்றும் உணவில் இருந்து விலகி இருப்பதை உறுதி செய்ய, பூச்சி ஸ்ப்ரேகளை தெளிக்க அல்லது கரப்பான் பூச்சி விரட்டி ஜெல்களைப் பயன்படுத்தவும். மற்றொரு எளிய வழி, சமையலறை மூலைகள் முழுவதும் தண்ணீரில் பெப்பர்மின்ட் எண்ணெயை கலந்து தெளிக்க வேண்டும். இது கரப்பான் பூச்சிகளை திறம்பட விரட்டும்.
சின்க்கை கழுவ வேண்டும்
உங்கள் கிச்சன் சின்க் உண்மையில் ஒவ்வொரு நாளும் நிறைய சிரமங்களுக்கு ஆளாகிறது, மேலும் அதனை சுத்தம் செய்ய தீபாவளி சரியான நேரமாகும். நீங்கள் டிஷ் சோப் அல்லது கடைகளில் கிடைக்கும் திரவ சோப்பை பயன்படுத்தலாம். மற்றொரு வழி, சின்க்கை சுத்தம் செய்ய, சிறிது சமையல் சோடா மற்றும் வெந்நீரைக் கலந்து சின்க்-ல் ஊற்றவும். இது குழாய்களில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய உதவும்.
குளிர்சாதனப்பெட்டியை சுத்தம் செய்ய வேண்டும்
குளிர்சாதனப்பெட்டி வீட்டின் அத்தியாவசிய பொருளாகும். எஞ்சிய உணவுகள், கூடுதல் பொருட்கள் மற்றும் புதிதாக சமைத்த உணவுகள் கெட்டுப் போகாமல் இருக்க என அனைத்தையும் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கிறோம். எனவே, குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்வதும் உங்கள் பட்டியலில் அவசியம் இருக்க வேண்டும்.
குளிர்சாதனப்பெட்டியில் இருந்து எல்லாவற்றையும் எடுத்து, ஒவ்வொரு பகுதியாக சுத்தம் செய்வதுடன் அதிலிருக்கும் தேவையற்ற பொருட்களை தூக்கியெறிய வேண்டும். ஆனால் குளிர்சாதனப்பெட்டியை தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைக் கொண்டு சுத்தம் செய்யக்கூடாது, அதனை சுத்தம் செய்ய வெதுவெதுப்பான நீரே போதுமானது. வெளிப்புற கதவுகளுக்கு, நீங்கள் விரும்பும் இரசாயன திரவத்தைப் பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications

