Latest Updates
-
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா?
வாஸ்துப்படி கண்ணாடியை வீட்டின் எந்த திசையில் மாட்ட வேண்டும் தெரியுமா?
வீட்டின் எந்த திசையில் கண்ணாடியை வைக்கலாம், எந்த திசையில் வைக்கக்கூடாது என்று உங்களுக்குத் தெரியாதா? கீழே வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒரு வீட்டில் எந்த திசையில் கண்ணாடியை வைக்க வேண்டும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
கண்ணாடிகள் முகத்தைப் பார்க்க பயன்படுவதோடு மட்டுமின்றி, வீட்டை அலங்கரிக்கவும் உதவுகிறது. மேலும் வாஸ்து சாஸ்திரத்தில் கண்ணாடிகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. வீட்டில் வைக்கும் கண்ணாடிகளை சரியான திசையை நோக்கி வைக்க வேண்டும். ஏனெனில் கண்ணாடிகள் நேர்மறை அல்லது எதிர்மறை ஆற்றலின் ஆதாரமாக இருக்கலாம். எனவே ஒருவரது வீட்டின் சூழலில் கண்ணாடிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

உங்கள் வீட்டில் நீங்கள் நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறீர்கள் என்றால், அதற்கு உங்கள் வீட்டில் உள்ள கண்ணாடி இருக்கும் திசையும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். சரி, வீட்டின் எந்த திசையில் கண்ணாடியை வைக்கலாம், எந்த திசையில் வைக்கக்கூடாது என்று உங்களுக்குத் தெரியாதா? கீழே வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒரு வீட்டில் எந்த திசையில் கண்ணாடியை வைக்க வேண்டும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

எந்த திசையில் கண்ணாடியை வைக்கக்கூடாது?
எப்போதுமே கண்ணாடியை வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு திசையில் கண்ணாடியை வைக்கக்கூடாது. உங்கள் வீட்டில் இந்த திசைகளில் கண்ணாடி இருந்தால், உடனே அதை அகற்றுங்கள். ஏனெனில் இந்த திசைகளில் கண்ணாடியை வைத்தால், அந்த வீட்டில் குடும்ப பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து, தினமும் வீட்டில் சண்டைகள் இருந்தவாறு இருக்கும்.

உடைந்த கண்ணாடியை வைத்திருக்கக்கூடாது
வாஸ்து சாஸ்திரத்தின் படி, உடைந்த கண்ணாடிகள் வீட்டில் இருக்கவே கூடாது. மேலும் உடைந்த கண்ணாடியில் முகத்தை எப்போதும் பார்க்கக்கூடாது. ஒரு வேளை உடைந்த கண்ணாடியை வீட்டில் பயன்படுத்தினால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் நிரம்பி, அந்த வீட்டில் உள்ளோர் எதிலும் எந்த முன்னேற்றத்தையும் காண முடியாமல் தடையை சந்திக்க நேரிடும்.

மங்கலான கண்ணாடியில் முகத்தை பார்க்காதீர்
முகம் பார்க்கும் கண்ணாடியானது எப்போதும் தெளிவாக இருக்க வேண்டும். உங்கள் வீட்டில் வாஷ் பேஷின் அருகே உள்ள கண்ணாடியில் நீர் கறைகள் படிந்திருந்தால், அதை அவ்வப்போது மறக்காமல் சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனி அழுக்கு படிந்த கண்ணாடிகள் எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதோடு, அந்த ஆற்றல் கண்ணாடி பார்ப்போரின் மீது பாயும்.

எந்த திசையில் கண்ணாடியை வைக்க வேண்டும்?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் கண்ணாடியை எப்போதும் கிழக்கு மற்றும் வடக்கு திசையில் தான் வைக்க வேண்டும். ஏனெனில் இந்த திசைகள் கண்ணாடியை வைக்க மங்களகரமானதாக கருதப்படுகிறது. வடக்கு திசை குபேர திசை. இந்த திசையில் கண்ணாடியை வைக்கும் போது, அது நேர்மறை ஆற்றலால் பணத்தை ஈர்க்கும். அதோடு வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிலைக்கும் என்று நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications